Skip to content

மே 27, 2004

µõ.«ýÒ¨¼Â£÷. Žì¸õ

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

நமக்குத் தெரியும் தாமஸ் ஆல்வா எடிசன் புகழ்பெற்ற விஞ்ஞானி. அவர் மின்னியல் பொருட்கள் பலவற்றைக் கண்டறிந்தார். மனிதகுலம் அவருக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கின்றது.

அவர் கண்டறிந்த மின்காந்தத்தின் மூலம் தீப்பொறி உண்டாக்கும் (ignition switch) மிகவும் பயனுடையது. பெட்ரோல் மூலமாக ஓடும் தானியங்கி வண்டிகளுக்கு அந்தவகையிலான spork plug ஸ்பார்க் பிளக் அவசியமானவை. அதன் உரிமையைக் காப்புறுதிசெய்துவிட்டு அதனை விரும்பிய (Ford ) நிறுவனத்துக்கு அந்த முறையினை வழங்கினார் எடிசன்.

அந்த நிறுவனம் மிகச் சிறந்த மோட்டார் கார்களைத் தயாரித்து மிக்கச் செல்வச் சிறப்பும் செழுமையும் பெற்றது. பிரபுக்கள் பலரையும் வரவழைத்து போர்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் ஒரு சிறப்பு விருந்து கொடுத்து கொண்டாடியது.

பெரிய மைதானத்தில் மதிப்புமிக்க மாளிகையில் பெரிய அளவிலான விழா நடந்த வேளையில் அங்குச் சென்ற திரு எடிசனை எவரும் கண்டுகொள்ளவுமில்லை. மதிக்கவும் இல்லை. அறியாத நபர்கள் பலர் இருந்து கேளிக்கை பேசினர். மனம் துன்புற்று எடிசன் வெளியேறிவிட்டார். நட்புரிமையுடன் அழைப்பின்றி வந்து அவமானப்பட்டதற்காக வருந்தினார்.

விழா இறுதிக் கட்டத்தை அடைந்து பிரபுக்களும், வாடிக்கையாளர்களும் வீட்டிற்குத் திரும்ப எத்தனிக்கையில் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

எந்த ஒரு பெட்ரோல் வாகனமும் இயங்கவில்லை. ஆயிரத்துக்கு மேலான, அனைத்து விலை மிகுந்தகார்களும் இயங்கி நகர மறுத்துவிட்டன. பொறியாளர்களும் வல்லுனர்களும் விரைந்தனர். ஒரு மொத்தமாக சொல்லிவைத்தாற்போன்று ஒத்துழையாமல் கூட்டு சேர்ந்து நின்றன. சவாலாக அமைந்த அந்தக் காட்சி, உரிமையாளரும் பெரும் செல்வந்தருமான திரு ஃபோர்டு க்கு மிகவும் மனவேதனையையும் வாடிக்கையாளர்களிடம் மனக் குறையும் உருவாக்கியது.

அப்போதுதான் அவருக்கு ஒரு நினைப்புத் தோன்றியது.

திரு தாமஸ் ஆல்வவா எடிசனை அழைக்காது விட்டுப் போனதாலும், அவருக்குக் கிடைத்த செய்தியின் படி எடிசன் அவமதிக்கப் பட்டார் என்பதும் சேர்ந்து மிகவும் துன்ப உணர்வு கொண்டு தாக்கவும், அவரைத் தேடி அழைத்துவர அந்தஸ்துமிக்க சிலரை அனுப்பிவைத்தார். எங்குத் தேடியும் எடிசனைச் சந்திக்கமுடியவில்லை. எங்குத்தான் சென்றிருப்பார்? எவரிடமிருந்தும் தகவல் பெறமுடியவில்லை.

திருவாளர் ஃபோர்டு தன்னுடைய கைவிளக்கை எடுத்துக் கொண்டு அந்த மைதானம் முழுவதும் தானே தேடினார். அவருடைய யூகம் உண்மைதான்.

ஒரு பள்ளமான குழியில் எடிசன் இருட்டுக்கு மத்தியில் ஓரமாக தன்னந்தனியே படுத்துக்கொண்டிருந்தார். திரு ஃபோர்டு அவரை அழைத்து அவருக்கு ஏற்பட்ட மரியாைைத யற்றச் செயலுக்கு வருந்தியும் மன்னிப்புக் கேட்டதோடு, ஒப்புக் கொண்ட தொகைக்கு மேலாக ராயல்டியும் வழங்கி ஒரு காசோலையினையும் அங்கேயே எழுதிக் கொடுத்து, தன்னை மான உணர்வினிலிருந்து மீட்டு, அனைத்து கார்களையும் மீளவும் இயங்கவைக்கவேண்டுமென்றும் உருகி மன்றாடினார்.

அதை ஏற்றுக் கொண்ட எடிசன், ஒரு பணியாளரை அருகே அழைத்து தான் அணிந்திருந்த கனமான தோல்வாரை அகற்றி மைதானத்தைவிட்டு வெளியே எடுத்துச் சென்று பத்திரமாக மரப்பெட்டிக்குள் அடைத்து வைக்கச் சொன்னார்.

தோல் வார் பெல்டிற்குள் அடங்கியிருந்தது ஒரு வலிமை மிக்க ‘நிலைக் காந்தம்”.

கார்கள் இயங்குவதற்குத் தேவையான எரிபொருள் பெட்ரோல் சிலிண்டருக்குள் காற்றுடன் தக்க விகிதத்தில் கலந்து வெடிப்பதற்குத் தயாராக அழுத்தப்படும்நிலையில், மின் காந்தத்தினால் ஸ்பார்க் பிளக்கில் உண்டாக்கப்படும் நெருப்புப் பொறி எரிபொருள்கலவையை வெடிக்கச்செய்யும். அந்த ஆற்றல் வண்டியின் இயக்கமாகி உந்துதல் கிடைக்கும். எடிசன் வைத்திருந்த கன ஆற்றல் கொண்ட நிலையான காந்தம் பொறிதுவக்கும் எளிய திறன் கொண்ட காந்தத்தைத் தன்பால் ஈர்த்து சுயப்படுத்திக்கொள்ள தேவையான பொறி கிடைக்காமையினால் அனைத்து கார்களும் செயலிழந்தன.

பெரும் பணத்தைவிட வல்லமை அறிவுக்கே இருக்கின்றதன்றோ?

அன்புடன்,

வெ.சுப்பிரமணியன்.µõ

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: