Skip to content

kanagadhara stohram

மே 27, 2004

ஓம்.அன்புடன் வணக்கம்.ஓம்

— JayBee wrote: >

>

> “ஸம்பத் கராணி ஸகலேந்த்ரிய நந்தநாநி,

> ஸாம்ராஜ்ய தாந விபவாநி ஸரோருஹாக்ஷி

> தவத் வந்தநாநி துரிதா ஹரணோத்யதாநி

> மாமேவ மாதரநிசம் கலயந்து மாந்யே”

அன்பர்களே,

கனகதாரா ஸ்தோத்திரம் என்னும் நூல் ஆதிசங்கரர் இயற்றிய

இரண்டாவது நூல். அவருடைய ஐந்தாவது வயதில் அவர் அதனை

இயற்றினார்.

அந்த ஸ்தோத்திரத்தில் இருபத்தோரு பாடல்கள் உள்ளன.

அவை அனைத்தையுமே தினப்படி வழிபட்டில் சொல்கிறவர்களும்

உண்டு. அத்தனையையும் சொல்லாமல் அவற்றில் குறிப்பிட்ட ஒன்றையோ

சிலவற்றையோ சொல்லிக்கொள்பவர்கள் அனேகர்.

அவ்வாறு தனியாகச் சொல்லப்படக்கூடியவற்றிலும் சில

பாடல்களே அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் தொடர்ந்துவரும் பாடல்.

ஆதிசங்கரரின் “கனகதாரா ஸ்தோத்திர”த்தில் இந்தப் பாடல்

லக்ஷ்மியைச் செய்வதை -அதாவது செல்வத்தைச் செய்வதைப் பற்றி

வருகிறது.

“ஸம்பத் கராணி ஸகலேந்த்ரிய நந்தநாநி,

ஸாம்ராஜ்ய தாந விபவாநி ஸரோருஹாக்ஷி

தவத் வந்தநாநி துரிதா ஹரணோத்யதாநி

மாமேவ மாதரநிசம் கலயந்து மாந்யே”

மாந்யே-மதிக்கத்தக்க

ஹே ஸரோருஹாக்ஷி – ஓ கமலநயனத்தாளே!

ஸம்பத்கராணி – செல்வத்தை உண்டாக்கித் தருபவைகளும்

ஸகல-­ந்த்ரிய-நந்தநாநி – அனைத்துப் புலன்களையும் மகிழ்ச்சியைத்

தரக்கூடியவைகளையும்

ஸாம்ராஜ்ய-தாந-விபவாநி- பேரரசைக் கொடுக்கும் சிறப்பு

வாய்ந்தவையும்

துரித-ஆஹரண-உத்யதாநி- பாவங்களை அகற்ற உதவக்கூடியவைகளும்

த்வத் வந்தநாநி – உனக்குச்செய்யும் வணக்கங்களும்

ஆகிய பொருள்களெல்லாம்

அநிசம்-எப்போதும்

மாம் ஏவ – என்னையே

கலயந்து- மனதில் கலந்திருக்கட்டும்

இதே போன்ற இன்னும் சில பாடல்களும் அதில் இருக்கின்றன.

அன்புடன்

ஜெயபாரதி

==============================

=================

தமிழாக்கம்:

அன்னையே உனக்கு நாங்கள்

.. அளித்திடும் வணக்கம் எல்லாம்

பொன்தரும், செல்வம் நல்கும்,

.. புலன்களுக் கின்பம் ஊட்டும்,

மன்னிடும் உயர்வு கூட்டும்,

.. மாசுடைப் பாவம் போக்கும்,

இன்னரும் குவளைக் கண்ணி,

.. இலக்குமி, தொழவைப் பாயே !

===இலந்தை இராமசாமி ====

பசுபதி

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: