Skip to content

மகாயான புத்தமதத்தின் மூலக்கருத்துக்களில்

ஜூன் 9, 2004

1. (1963ல் அளித்த சொற்பொழிவிலிருந்து:) தன்னையன்றி பிறருக்கு காட்டப்படும் அன்பானது

(compassion) மகாயான புத்தமதத்தின் மூலக்கருத்துக்களில் ஒன்று. இதுகுறித்து நான் ஒரு பாடலை

மேற்கோள் கூற விழைகிறேன்.

உங்களது சுகத்தை மற்றவர்களின் துயரத்துடன்

பரிமாற்றிக் கொள்ள இயலாவிட்டால்

உங்களால் புத்தர் திருவடியை அடைவதும் இயலாது

இந்த பிறவியில் மகிழ்சியையும் அடையமுடியாது.

2. நான் கிழக்கில் இருந்து வருகிறேன்; இங்கிருக்கும் நீங்களோ பெரும்பாலும் மேற்கத்தியர். உங்களை நான்

மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் வித்தியாசமானவர்கள். அந்த மேலோட்டமான பார்வைக்கே முக்கியத்துவம்

குடுத்தால் நமக்குள் இடைவெளி அதிகரிக்கிறது. ஆனால் நான் உங்களை என்னைப் போன்ற ஒருவராக, இரண்டு

கண்கள், ஒரு மூக்கு முதலியன உடைய ஒரு மனிதனாக கண்டேனாயின் அந்த இடைவெளி மறைந்து விடுகிறது.

நாம் அனைவரும் அதே மனித உடலால் ஆனவர்கள்தாம். நானும், நீங்களும் அதே மனமகிழ்சியைத் தேடுகி

றோம். அதை பரஸ்பரம் புரிந்து கொண்டால் நாம் மதிப்பையும், நம்பிக்கையையும் நம்முள்

வளர்த்துக்கொள்வோம். அதிலிருந்து பரஸ்பர ஒத்துழைப்பும் நல்-அமைதியும் ஏற்படுகின்றன.

3. பலதேசத்தில் பல்வேறுபட்ட மக்களை நான் சந்தித்த அனுவங்கள் அனைத்துமே நம் அனைவருக்கும் உள்ள அதே

மனித தன்மையையே நினைவுருத்துகின்றன. இந்த உலகத்தை அதிகம் நோக்க நோக்க ஒன்று தெள்ளெனத் தெளி

வாகிறது – செல்வம், செல்வாக்கு, மதம், மொழி, இனம், கல்வி ஆகியன எப்படி இருப்பினும்,

மக்கள் அனைவரும் துன்பங்களை தவிர்த்து மனமகிழ்சியையே விரும்புகின்றனர். குறிக்கோளுடன் செய்யப்படும்

ஒவ்வொரு செயலும், வேறுமாதிரி கூறுவதென்றால் சந்தர்ப்ப, சுற்றுப்புற சூழ்நிலைகளின் தாக்கத்தில் நாம்

வாழும் வாழ்க்கையையே “நான் மகிழ்வாக எப்படி வாழ்வது?” என்ற கேள்விக்கு நமது பதிலாகக் கொள்ளலாம்.

நூல் குறிப்பு:

மூலம்: In My Own Words – His Holiness The Dalai Lama, composed by Mary Craig.

Hodder & Stoughton press.

இந்த தொடர் முழுதும் தவத்திரு தலால் லாமா அவர்களின் சொற்பொழிவுகளில் இருந்து பெறப்பட்டவை – ஆதலி

ன் அவை அவர் கூறுவது போலவே (1st person) அமைந்திருக்கும்.

மொழியாக்க குறிப்பு:

இதில் harmony என்பதை நல்-அமைதி என்றும், happiness என்பதை மனமகிழ்ச்சி என்றும் (இன்பம்

என்ற சொல்லை தவிர்த்து) தமிழாக்கியருக்கிறேன். இது தவறெனில், சரியான வார்த்தையை எனக்கு மொழி

யும், பொருளும் அறிந்தோர் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

——-Original Message——-

ஓம். அன்புடன் சிவா அவர்களுக்கு வணக்கம்.

நல்லதொரு முயற்சியினை விரும்பிச் செய்கின்றீர்கள்.

நல்ல மனம் வாழ்க. நாடுபோற்ற வாழ்க.

பௌத்தம் ஒரு சுய பரிசோதனை. அது தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை. மனத்தின் இயல்பு வழக்கு என்ன

என்பதையும் அதன் மீது படியும் வாசனைகள், எண்ணச்செறிவு, அதன் மூலம் விளையும் பயனீட்டான கோட்பாடுகள்,

சம்சார பந்தம், கர்மாவின் செயற்பாடு, இறப்பும் மறுபிறவியும், பிறவித் தளையறுத்தல், இறப்பின்

கோட்பாடுகள், இறப்பை ஒரு மகிழ்ச்சிகரமான சிறப்பாக எதிர்நோக்கி யிருத்தல், அதனைச் சுகமாகக்

கழித்தல், இளமையிலேயே பால்குடி மாறாத நிலையிலேயே சிறார்களை பௌத்தவிஹாருக்கு அனுப்புதல் போன்ற

வலுவான கொள்கைகளைக் கொண்டு, மனிதனின் நெஞ்சுரத்தை அதிக வலுவுள்ளதாக்கும் தன்மையுடையது.

இந்து மதத்தின் தசாவதாரத்தில் ஒன்றாக புத்தர் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

வைதீக மார்க்கம் தலையெடுத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும், உயிர் பலியும் அதிகம் மேலோங்கவே அதனை

மட்டுப்படுத்த நியமம்தேவைப்பட்டதால் பௌத்தம் வேரூன்றியது.

தாய்லாந்தின் மேற்குக் காஞ்சனபுரி மாகாணத்தில் உள்ள ஒரு பௌத்த விகாரின் மடாலயத்தில் காட்டுப்

புலிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து துறவிகளான பிக்குகளுடன் புலிகளும் வாழ்ந்துவருகின்றன கழுத்தில் நாய்க்

குட்டி போன்று வாரைக் கட்டி அன்றாடம் நடை பயில பிக்குகள் அழைத்துச் செல்வதும், முகத்தோடு முகமாக

அவற்றைக் கொஞ்சுவதும் விசித்திரமானது.

இச்சரணாலயத்தில் வாழும் புலிகளும் புத்தரின் வழியில் அமைதியாய் வாழ்கின்றன. புலிகளுக்கு புயல், மின்னல்

வானம் என்றெல்லாம் பெயர்வைத்திருக்கின்றார்கள். குரங்குகள், குதிரைகள், காட்டுப் பன்றிகள் மான்கள்,

மயில்கள், வாத்துகள் ஆமைகள் போன்றவையும் இங்கு உள்ளன. அனைத்துமே சுதந்திரமாய் உலாவருகின்றன.

இவறோடு நாய்களும் உறவாடி ஒரே குடும்பமாக வாழ்கின்றன. புத்த மதத்தினர் என்பதால் புலிகளுக்கு மற்ற

மிருகத்தைக் கொன்று உணவு தர முடிவதில்லை. கோவிலுக்கு நன்கொடையாக வரும் நாய் உணவையே தருகின்றோம்

புலிகளும் விரும்பி உண்கின்றன என்கிறார் ·பூஷிட் என்ற துறவி

(நன்றி சிங்கை தமிழ் முரசு.)..

விலங்குகள் மாறுகின்றன. மனித மனமும் மாற்றப்படவேண்டும்!

அன்புடன்,வெ.சுப்பிரமணியன்,

————————————–

4. (1981 சொற்பொழிவிலிருந்து): பொருளாதார முன்னேற்றம் மட்டுமே ஒரு சிறந்த சமுதாயத்தை அமைக்க

போதுமானதல்ல. பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளிலே, மக்கள் மனதளவில்

பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி கூடுதலாக சிரமப்படுவதை காணமுடிகிறது. எந்தவிதமான சட்டதிட்டத்தைக்

கொண்டோ, அடக்குமுறையைக் கொண்டோ யாராலும் ஒரு சமுதாயத்தின் நல்லமைப்பை உறுதிசெய்ய முடியாது –

ஏனெனில் சமுதாயமானது அதிலுள்ள மக்களின் உள்ளார்ந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே.

5. பொதுவாக பணம் மனமகிழ்ச்சியைத் தருகிறது என்று வைத்துக்கொண்டால் கூட, அது பணத்தால் பெறக்கூடிய,

புலன்களை திருப்திபடுத்தக் கூடிய பொருளின் மூலமாகவே இருக்கும். அவைகளே நமக்கு பின்பு துன்பம்

தருவதாக அமையும் என்று ஆய்ந்து தெரிந்துகொள்ளலாம். சொத்து செல்வங்கள் அதிக நேரம் நமக்கு வாழ்வில்

இன்பத்தை விட பிரச்சனையும், துன்பத்தையுமே தருகின்றன என்று நாம் ஒத்துகொண்டேயாக வேண்டும். வாகனத்தி

ல் கோளாறு ஏற்படுகிறது; பணம், நகை திருடு போகிறது; வீடும் பொருளும் விபத்தால் நாசமடைகின்றன;

இவை நடக்காவிட்டாலும் அவை நடந்துவிடுமோ என்று மனம் சஞ்சலப்படுகிறது.

6. பிரச்சனைக்கு பணத்தை மையமாக கொண்ட சமுதாயம் காரணம் அல்ல; பணத்தால் பெறப்படும்

பொருள்களைக் கொண்டு, புலன்களின் ஆசைகளை திருப்தி செய்வதன் மூலம் மனநிறைவை, திருப்தி

யை அடையலாம் என்ற தவறான நம்பிக்கையே காரணம். விலங்குகளைப் பொருத்தவரை மனமகிழ்சிக்கான

வேட்கையானது உயிர்வாழ்வது, புலன்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வது ஆகியவற்றுடன் நின்றுவிடுகிறது.

ஆனால் நாமோ மனமகிழ்ச்சியை இன்னும் ஆழமான முறையில் உள்ளுக்குள்ளேயே அடையக்கூடிய ஆற்றல் பெற்றி

ருக்கிறோம். அப்படிப் பட்ட நிலையை அனுபவித்தலானது, மற்ற புலன்வழி துன்பமயமான அனுபவங்களை சி

றுமைப்படித்துவிடும் (overwhelm).

7. உலகில் செல்வந்தர்களையும், ஏழைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். ஏழைகள்

பொருளாதார குறைவால் உடலளவில் பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும், மனதளவில் ஓரளவிற்கு ஏக்கமோ,

குறைகளோ இல்லாது இருக்கின்றனர். செல்வந்தர்களில் மிகச் சிலரே பொருளீட்டுவது இல்லாதோர் துயர்

துடைக்கத்தான் என்ற உண்மையை உணர்ந்து அதன்படி தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர். மிகப்

பெரும்பாலான செல்வந்தர்கள் மேலும் மேலும் பொருளீட்ட முனைந்து வாழ்வில் வேறு எதற்கும் இடமில்லாது

செய்துவிடுகின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் தங்களது மூலக் கனவு செல்வத்தின் மூலம் மனமகிழ்ச்சி

யை அடைவதே என்பதை மறந்துவிடுகின்றனர். முடிவில் அவர்கள் மனது அடுத்து (இதுகாறும் ஈட்டிய செல்வத்தி

ற்கு) என்ன நடக்குமோ என்ற ஐயப்பாட்டிற்கும், மேலும் செல்வம் அடைய வேண்டும் என்ற ஆசைக்கும் இடையி

ல் அலைக்கழிக்கப் படுகிறது. வெளிஉலகிற்கு அவர்கள் மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது

போல தோன்றினாலும் மனத்தளவில் அவர்கள் துன்பப்படுகிறார்கள். பொருளாதார வளர்ச்சிபெற்ற நாட்டு மக்களி

டையே பரவலாக காணப்படும் மன சஞ்சலம், திருப்தியின்மை, ஏமாற்றம், குழப்பம், ஐயப்பாடு, மனசோர்வு

முதலியவை இதை உறுதிசெய்கின்றன. அறவழி வாழ்வு (morality) என்றால் என்ன, அதன் அடிப்படை என்ன,

என்பதைப் பற்றிய குழப்பம் அதிகரித்து வருவதையே இது போன்ற பெருகிவரும் மனதுன்பங்கள் காட்டுவதாக

எனக்கு தோன்றுகிறது.

8. புலன்களை ஆசையை பூர்த்தி செய்தால் ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் போதை பழக்கத்தி

ற்கு அடிமையானவருக்கு போதை பொருளால் ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்றது. அதை பூர்த்தி செய்தால்,

மனம் இன்னும் வேண்டும் என்று ஆசைப்படும். எப்படி போதை வஸ்துவானது கடைசியில் அதை

எடுத்துக்கொண்டோருக்கு கெடுதலாகவே முடிகிறதோ, அதுபோலவே நமது புலன்களின் உடனடி ஆசையை பூர்த்தி

செய்ய நாம் செய்யும் பெரும்பாலான முயற்சிகளும். நமக்கு இவை தரும் சிறுது நேர திருப்தியை தவறு என்று

கூறுவதற்கில்லை. ஆனால் புலன்களை எப்போதைக்குமாக திருப்திபடுத்துவது இயலாத காரியம் என்பதை

ஒத்துகொண்டே ஆகவேண்டும். உதாரணம் கூறவேண்டுமானால், நாம் ஒரு நல்ல உணவின் மூலம் அடையும் மகிழ்ச்சி

யானது அடுத்தமுறை பசிக்கும் வரைதான் அதிகபட்சம் நிலைக்கும்!

9. உண்மையான, நிலைத்த அன்பு என்பது பற்றுதல் மூலம் ஏற்படாது; சுயநலமற்ற பொதுநோக்காலேயே

ஏற்படும். இதில் உங்கள் அன்பானது மக்கள் எதுநாள்வரை துன்பப்படுகிறார்களோ அந்த துன்பத்தை களைய

உதவும் செயலாக வெளிப்பட்டு கொண்டிருக்கும்.

வளரும்…

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: