பொருளடக்கத்திற்கு தாவுக

Google Toolbar Installed

ஜனவரி 28, 2006

ஓம்.

நாளும் கோளும்நலியாதிருக்க
=======================
(திருஞான சம்பந்தர்.)

கோளறு் திருப்பதிகம்.
<-=-=-=-=-=-=-=-==-!
இப்பாடல் அருளப்பட்ட இடம் வேதாரன்யம்.
(திருமறைக்காடு)

திருச்சிற்றம்பலம்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பிரண்டும் உடனே
ஆசறுநல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே………….(1)

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க
எருதேறி் ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடிவந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதோ டொன்றோடேழு பதினெட்டோடு ஆறும்
உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே………………(2)

உருவளர் பவளமேனி ஒளி நீற ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(3)

மதிநுதல் மங்கை யோடு வடவாலி ருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமே லணிந்்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(4)

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள்த னோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும
மிகையான பூதம் மவையும்்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(5)

வாள்வரி அதளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(6)

செப்பிள முலைநன் மங்கை ஒருபாகம் ஆக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(7)

வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(8)

பலபல வேடமாகும் பரன்நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலம்களோடெருக்கும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும்மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(9)

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மததமும் மதியும் நாகம் முடிமே லணிந்்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே……………(10)

தேனமர் பொழில்கொ ளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் னெங்கும் நிகழ
நான்முக னாதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொன் மாலைஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே………….(11)

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,
வெ.சுப்பிரமணியன்.
ஓம்.
-=-=-=-=0=0=0=0=
திருச்சிற்றம்பலம்
பதிக வரலறு(இப்பாடல் ப்றந்த கதை)
திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞான் சம்பந்தமுர்த்தி சுவாமிகளும் சேர்ந்து செய்த யாத்திரையில் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் போது பாண்டிய நாட்டில் மதுரை மாநகரில் அக்காலத்தில் ஆட்சிசெய்த கூன்பாண்டியன் வலிய ஊழ்வினை காரணமாக சைவநெரியைவிட்டு சமணமதத்தைத் த்ழுவினார் மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதற்கேற்ப அந்நாட்டு மக்களும்வேற்று மதத்தைத் தழுவலாயினர். கூன்பாண்டியனின் துணைவியார் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரும் மஹி மந்திரி குலச்சிறையாரும் திருஞான சம்பந்தர் னிகழ்த்திய அறுதங்களை கேட்டிருந்ஹமையால் அவர் வேதாரன்யத்திற்கு வந்திருபதறிந்து

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: