Skip to content

sunguthan kuzal

நவம்பர் 4, 2007

Blogger Help : What is BlogThis! ?
ஓம்.

—————————-–

‚ …ுக்தம்

(உரையாசிரியர்”அண்ணா” | வெளியீடு ‚ ராமகிரு‰ண மடம்|)

†ிரண்ய வர்ணாம் †ரிணீம் …ுவர்ண ரஜதஸரஜாம்|
சந்த்ராம் †ிரண்மயீம் லமீம் ஜாதŒவேதோ ம ஆவ† |1|

(1) அக்னிதேவனே! பொன் போன்ற காந்தியுடையவளும் பாவங்களைப் போக்குபவளும் பொன்னாலும் வெள்ளியாலுமான †ாரங்களை அணிந்தவளும் பொன்மயமானவளுமாகிய ‚தேவியை எனக்கருள்புரியுமாறு எழுந்தருளச் செய்வீர்.

தாம் ம ஆவ† ஜாதவேதோ லமீ-மனபகாŒமினீம்|
யஸயாம் †ிரண்யம் விந்தேயம் காமச்வம் புருஷான†ம் || 2 ||

(2) அக்கினி தேவனே! எவளுடைய அருளால் நான் பொன்னையும் பசுக்களையும் குதிரைகளையும் உற்றார் உறவினரையும் அடைவேனோ அந்த ‚ தேவியை எனக்கருள்புரியுமாறு எழுந்தருளச் செய்து என்னை விட்டு விலகாதிருக்கும்படி செய்வீர்.

அச்வபூர்வாம் ரதமத்யாம் †ஸதி நாதப்ரபோதீனீம் |
ச்ரியம்தேவி-முப‹வயே ‚ர்மா தேவி ஜுஷதாம் || 3 ||

(3) யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளும் முன்னே குதிரைகளும் நடுவில் ரதங்களும் புடை சூழ வருபவளுமாகிய ‚தேவியை அண்டையில் வந்து அருள் புரியும்படி கூவுகின்றேன். ‚ தேவியே! என்னிடம் புகுந்துறைதல் வேண்டும்,

காம் …ோஸமிதாம் †ிரண்ய-ப்ரகாரா-மார்த்ராம் ˆவலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸதிதாம் பத்மவர்ணாம் தாமி†ோப‹வயே ச்ரியம்|4|

(4) இன்பமே உருவாகியவளும், புன்முறுவல் பூத்தவளும், தங்கக் கோட்டையில் இருப்பவளும், கருணை உள்ளவளும், பிரகாசம் பொருந்தியவளும், …ந்தோஷம் நிறைந்தவளும், பிறரை மகிழ்விப்பவளும், தாமரையில் உறைபவளும், தாமரை வர்ணத்தினளுமான அந்த ‚தேவியை இங்கே எழுந்தருளப்
பிரார்த்திக்கின்றேன்.

சந்த்ராம் ப்ரபா…ாம் யச…ா ˆவலந்தீம் ச்ரியம் லோகே தேவஜு‰டா- முதாராம் |
தாம் பத்மினீமீம் சரணம†ம் ப்ரபத்யேச்லமீர்மே நŒச்யதாம் த்வாம் வ்ருணே || 5 ||

(5) சந்திரனைப் போன்றவளும், ஒளிமிக்கவளும், தன்மகிமையால் சுடர்விட்டுப் பிரகாசிப்பவளும்,தேவர்களால் வழிபடப் பெறுபவளும், கருணை மிக்கவளும், தாமரையைத் தாங்கியவளும், ஈம் என்ற பீஜமந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளுமான அந்த மகா லட்சுமியை நான் சரணடைகிறேன். எனது வறுமை விலகுமாறு அருள்வாய்!

ஆதித்ய வர்ணே தப…ோச்திஜாதோ வனஸபதிஸதவ வ்ருக்ஷோச்த பில்வ: |
தஸயஔபலானி தப…ா நுதந்து மாயாந்தராயாச்ச பா‹யா அலமீ || 6 Œ||

(6) சூரியனின் நிறத்தவளே, காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று.அதனுடைய (ஞான மயமான) பழங்கள் உள்ளே உறையும் அவித்தைகளையும்வெளியே உள்ள அசுபங்களையும் போக்கடிக்கட்டும்

உபைது மாம் தேவ…க: கீர்த்திச்ச மணினா …† |
ப்ராதுர் பூதோச்ஸமி ரா‰ட்ரேஸமின் கீர்த்திம்ருத்திம் ததாது மே || 7 ||

(7) மகாதேவனுக்குத் தோழமை பூண்ட குபேரனும், நற்கீர்த்தியின் அபிமான தேவதையும் செல்வங்களுடன் என்னை நாடி வரவேண்டும். (நான் உங்கள் அருளுக்குப் பாத்திரமான) இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன். எனக்குக் கீர்த்தியையும் செல்வத்தின் நிறைவையும் தந்தருளவேண்டும்..

க்ஷுத்பிபா…ாமலாம் ˆயே‰டமலமீம் நாசŒயாம்ய†ம் |
அபூதிம…ம்ருத்திஞ்ச …ர்வாம் நிர்ணுத மே க்ரு†ாத் || 8 ||

(8) பசி தாகத்தால் மெலிந்தவளும் (பசி தாகக்கொடுமையை உண்டாக்குபவளும்) முன்னே பிறந்தவளுமான மூதேவியை நான் (உன்னுடைய அருளால்) அகற்றுகிறேன். ஏழைமையும் செழிப்பின்மையும் என் வீட்டிலிருந்து அகற்றியருள்வாய்.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபு‰ட்டாம் கரீஷிணீம்|
ஈச்வரீ …ர்வபூதானாம் தாமி†ோப‹வயேச்ரியம் || 9 ||

(9) சுகந்தத்தின் மூலம் ப்ரீதி செய்யக் கூடியவளும், எவராலும் ஜயிக்கமுடியாதவளும், என்றும் பு‰டியை அளிப்பவளும், எல்லாம் நிறைந்தவளும், எல்லா உயிர்களுக்கும் ஈசுவரியுமான ம†ாலமியை இங்Œகே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.

மன… காமமாகூதிம் வாசஸ…த்யமசீம†ீ |
பசூனாம் ரூப-மன்னஸய மயி ‚: ச்ரயதாம்யச: || 10 ||

(10) ‚தேவியே! மனத்திலெழும் நல்ல விருப்பத்தையும் பொங்கும் மகிழ்ச்சியையும் வாக்கில் உண்மையையும் பசுக்களின் நிறைவாலும் ஏற்படும் அழகையும் நான் அனுபவிக்க நீ அருள்புரிவாய். என்னிடத்தில் நல்ல கீர்த்தி உண்டாகட்டும்.

கர்த்தமேன ப்ரஜா பூதாமயி …ம்பவகர்த்தம |
ச்ரியம் வா…ய மே குலே மாதரம் பத்மமாலினீம் || 11 ||

(11) கர்த்தமரே! கர்த்தமர் எனப் பெயர்பெற்ற உம்மிடம் ம†ாலமி பெண்ணŒாக ஆனாள்.(நீர்) என்னிடம் தோன்றவேண்டும். தாமரை மாலையுடன் விளங்கும் தாயான லமியை என்Œ குலத்தில் நித்திய வா…ம் செய்யும்படி அருள் செய்யவேண்டும்.

(குறிப்பு) ம†ாலமி பாற்கŒடலில் உதித்தபோது கர்த்தமர் ம†ாலமியைத் தŒன் பெண்ணாகப் பாவித்து வளர்த்தார் என்றும் அது முதல் அவர் லமிக்குத்Œ தகப்பனாராகக் கருதப்பட்டார் என்றும் கூறுவதுண்டு.

ஆப: ஸருஜந்து ஸனிக்தானி சிக்லீத வ… மே க்ரு†ே|
நி ச தேவீம் மாதரம் ச்ரியம் வா…ய மே குலே ||12 ||

(12)பால், நெய் முதலிய பசையுள்ள பொருட்களை உற்பத்தி செய்யட்டும். நீர் என் வீட்டில் வாசம் செய்யவேண்டும். தாயான ‚தேவியை என்குலத்தில் நித்திய வாசம் செய்யும்படி அருள்புரிதல் வேண்டும்.

(12) குறிப்பு: சிக்லீதர் ம†ாலமியின் கŒோயிலில் த்வார பாலகர் என்று சில புராணங்களில் காணப்படுகிறது. சிக்லீதர் என்பது சித்தத்தில் வசிக்கும் மன்மதனுக்கும் பெயராகக் கொள்ளப்படுகிறது.

ஆர்த்ராம் பு‰கரிணீம் பு‰டிம் …ுவர்ணாம் †ேமமாலினீம் |
…ூர்யாம் †ிரண்மயீம் லமீம் ஜாதŒவேதோ ம ஆவ† || 13 ||

(13) அக்னி தேவனே! (நெஞ்சில்) ஈரமுள்ளவளாயும் தாமரையில் வசிப்பவளாயும் உலகை ஊட்டுபவளாயும் பொன் நிறத்திளாயும் தாமரை மாலை அணிந்தவளாயும் சந்திரனைப் போல் மகிழ்ச்சி பொங்கச் செய்பவளாயும் சுத்த சத்துவ வடிவினளாயும் உள்ள ம†ாலமி என்னிŒடம் வந்துரையும்படி அனுக்கிரகம் செய்யும்.

ஆர்த்ராம் ய கரிணீம் ய‰டிம் பிங்கலாம் பத்மமாலினீம் |
சந்ராம் †ிரண்மயீம் லமீம் ஜாதŒ்வேதோ ம ஆவ† || 14 ||

(14) அக்னி தேவனே! (நெஞ்சில்) ஈரமுள்ளவளாயும் கரத்தில் செங்கோல் ஏந்தியவளாயும் கொடி போன்ற உடல் படைத்தவளாயும் அழகிய நிறத்தினளாயும் ச்வர்ணமாலை அணிந்தவளாயும் சூரியனைப் போல் பிரகாசிப்பவளாயும் சுத்த …த்துவ வடிவினளாயும் உள ம†ாலமி என்னிŒடம் வந்துரையும்படி அனுக்கிரகம் செய்யும்.

தாம் ம ஆவ† ஜாதவேதோ லமீ மன்பகŒாமினீம் |
யஸயாம் †ிரண்யம் ரபூதாம் காவோ தாஸயோச்ச்வான் விந்தேயம் புருஷான†ம்.||15||

(15) அக்கினி தேவனே! எவளுடைய அருளால் நான் பெருமிதமான பொன்னையும் பசுக்களையும் பணிப்பெண்களையும் குதிரைகளையும் ஆட்களையும் அடைவேனோ அப்படிப் பட்ட லமிதேவி எŒன்னைவிட்டு விலகாதிருக்கும்படி கூட்டிவைத்தருளும்.

ய: சுசி: ப்ரயதோபூத்வாஜு†ுயாதாˆயமன்வ†ம்|
ச்ரிய: பஞ்சதசர்ச்சஞ்ச ‚காம: …ததம் ஜபேத்||16||

(16)எவன் ‚தேவியின் அருளை வேண்டுகிறானோ அவன் பரிசுத்தனாகவும் மனத்தை அட்க்கியவனாகவும் இருந்துகொண்டு நாள் தோறும் (இம் மந்திரங்களைக் கூறி) நெய்யை†ோமம் செய்யவேண்டும். ‚தேவியினுடைய (மேற்கூறிய) பதினைந்து ரிக்குகளையும் எப்போதும் ஜபம் ஜெய்யவேண்டும்.

ஆனந்த: கர்த்தமச்சைவ சிக்லீத இதி விச்ருதா: |
ருஷயஸதே த்ரய:ப்ரோக்தா: ஸவயம் ‚ரேவ தேவதா ||17||

(17) ஆனந்தர், கர்த்தமர், சிக்லீதர் என்று பிரசித்தி பெற்ற மூவரும் (இந்த சூக்ததிற்கு) ரிஷிகள், ம†ாலமியே அதிŒதேவதை.

பத்மா…னே பத்மோரு பத்மாக்ஷி பத்ம…ம்பவே|
த்வம்மாம் பஜஸவ பத்மாக்ஷி யேந …ெளக்யம் லபாம்ய†ம் ||18||

(18)தாமரையில் வீற்றிருப்பவளே! தாமரை போன்ற துடையினளே! தாமரை போன்ற கண்ணுடையாளே! தாமரையில் தோன்றியவளே! எதனால் நான் …க்கியத்தை அடைஏனோ அதை எனக்கு அருளவேண்டும்.

அச்வதாயி ச கோதாயி தனதாயி ம†ாதனே|
தனம் மே ஜுஷதாம் தேவீ …ர்வ-காமார்த்த-…ித்தயே ||19||

(19) குதிரைகளைத் தருபவளும் பசுக்களைத் தருபவளும். செல்வதைத் தருபவளும் செல்வதிற்கரசியுமான லமிதேவியேŒ! எனக்கு எல்லாவிருப்பங்களும் …ித்திக்கும் பொருட்டுச் செல்வத்தை கூட்டிவைத்தருள்வாயாக.

புத்ர-பெளத்ர-தனம் தான்யம் †த்யச்வாஜா விகோரதம்|
ப்ரஜானாம் பவ…ிமாதா ஆயு‰மந்தம் கரோதுமாம்||20||

(20) புத்திரர்கள் தனம் தானியம் யானை குதிரை வெள்ளாடு செம்மறியாடு பசுக்கள் தேர் (எல்லவற்றையும் கொடுதருள்வாய் நீயே மக்களுக்கெலாம் தாய். என்னை ஆயுள் உடையானாகச் செய்தருள்வாய்.

சந்ரபாம் லமீ – மீசŒானாம் …ூர்யாபாம் ச்ரியமீச்வரீம்|
சந்ர…ூர்யாக்னீ – வர்ணாபாம் ‚ ம†லமீம் உபாŒஸம†ே ||21||

(21) சந்திரன் போல் குளிர்ந்து பிரகாசிப்பவளும், ஈசுவர்களுடய சக்தியாய் இருப்பவளும், சூரியனைப்போல் கடுமையாய்ப் பிரகாசிப்பவளும் ‚ தேவியும் ஈசுவரியும், சந்திரன் சூரியன் அக்கினி ஆகியமூன்று கலை வடிவினளும் ஆகிய ம†ா லமியை உபாŒசிக்கிறேன்.

தனமக்னிர்- தனம் வாயுர்தனம் …ூர்யோ தனம் வ…ு: |
தன-மிந்ரோ ப்ரு†ஸபதிர்- வருணோ தனமச்னுதே ||22||

(22) அக்னி செல்வத்தை யனுபவிப்பதும் வாயு செல்வத்தை யனுபவிப்பதும், சூரியன் செல்வத்தை யனுபவிப்பதும், அ‰ட வசுக்கள் செல்வத்தை அனுபவிப்பதும், இந்திரன் செல்வத்தை யனுபவிப்பதும், ப்ரு†ஸபதி செல்வத்தை யனுபவிப்பதும், வருணன் செல்வத்தை யனுபவிப்பதும் (உன் அருளாலே.)

வைநதேய …ோமம் பிப …ோமம் பிபது வ்ருத்ர†ா |
…ோமம் தனஸய …ோமினோ ம‹யம் ததாது …ோமினீ ||23||

(23)கருடனே! …ோம ர…த்தைப் பருகு. விருத்திரனைக் கொன்ற இந்திரன் …ோமர…த்தைப் பருகட்டும்.
…ோம பானம் செய்த தேவர்கள் …ோம யா†ம் செய்யும் எனக்குச் செல்வத்தைக் கொடுத் தருளட்டும்.

ந க்ரோதோ ந ச மாத்…ர்யம் ந லோபோ நாஸசுபாமதி:|
பவந்தி க்ருத-புண்யானாம் பக்தானாம் ‚…ுக்தம் ஜபேத் …தா ||24||

(24) புண்ணியம் செய்த பக்தர்களுக்குக் கோபமோ, பொறாமையோ, கெட்ட புத்தியோ உண்டாவதில்லை. (அந்தப் பக்தி வளர்வதற்காக) ‚ …ூக்தத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்.

வர்ஷந்துதே விபாவரி திவோ அப்ரஸய வித்யுத:|
ரோ†ந்து …ர்வ பீஜான்யவ ப்ர‹மத்விஷோ ஜ†ி ||25||

(25) தேவியே! உனது கருணையினால் ஆகாயத்திடை மின்னலுடன் கூடிய மேகங்கள் மழை பொழியட்டும். எல்லா விதைகளும் நன்கு முளைத்து வளரட்டும். தேவ மார்க்கத்தைப் பகைப்பவர்களை அழித்துவிடு.

பத்மப்ரியே பத்மினி பத்ம- †ஸதே பத்மாலயே பத்மலாயதாக்ஷி|
விச்வப்ரியே வி‰ணுமனோஸனுகூலே த்வத்பாதபத்மம் மயி …ந்நிதத்ஸவ||26||

(26) பத்மினி! தாமரையில் பிரியங் கொண்டவளே! தாமரையைக் கையில் ஏந்தியவளே! தாமரையில் வசிப்பவளே! உலகனைத்திற்கும் பிரியமானவளே! வி‰ணுவின் மனத்திற்குகந்தவளே! உனது திருவடித்தாமரையை என்னிடம் வைத்தருள்வாய்.

ம†ாதேவயை ச வித்ம†ே வி‰ணுபத்ன்யை ச தீ ம†ீ|
தந்நோ லமீ: ப்ரசŒோதயாத்||27||

(27) ம†ாதேவியை உபதேசப்படி அறிவோம். வி‰ணு பத்னியாகிய அவளைத் தியானம் செய்வோம்.அவ்விஷயத்தில் அந்த லமிதேவி நŒம்முடைய புத்தி சக்திகளைத் தூண்ட வேண்டும்.

யா …ா பத்மா…னஸதா விபுலகடிதடீ பத்மபத்ராயதாக்ஷீ கம்பீ-ராவர்த்த-நாபி: ஸதனபர நமிதா சுப்ரவஸத்ரோத்ரீயா|
லமீர்-திவŒ்யைர்-கஜேந்ரைர்-மைகண-கசிதை: ஸநாபிதா †ேமகும்பைர்-நித்யம் …ா பத்ம-†ஸதா மம வ…து க்ரு†ே …ர்வ-மாங்கல்யயுக்தா ||28||

(28) தாமரையில் வீற்றிருப்பவளாகவும் பருத்த நிதம்பம் உடையவளாகவும் தாமரையிதழ் போல் அகன்ற கண்களை உடையவளாகவும், கம்பீரமான சுழல் பொருந்திய நாபி யுடையவளாகவும், ஸதன பாரத்தால் வளைந்தவளாகவும், வெள்ளை வஸத்ரமும் உத்ரீயமும் அணிந்தவளாகவும், ரத்னங்கள் இழைத்த பொற்கலச நீரால் தேவலோகத்துச் சிறந்த யானைகளால் அபிஷேகம் செய்விக்கப் பட்டவளாகவும், தாமரையைக் கையிலேந்தியவளாகவும், எல்லா மங்களங்களுடன் கூடியவளாகவும் உள்ள லமி தேவி Œஎப்போதும் என் வீட்டில் வாசம் செய்தருளவேண்டும்.

லமீம் க்ஷŒீர-…முத்ரராஜ-தநயாம் ‚ரங்கதாமேச்வரீம் தா…ீபூத-…மஸத-தேவ வநிதாம் லோகைக-தீபாங்குராம்|
‚மன்-மந்த கடாக்ஷ-லப்தவிபவ-ப்ர‹மேந்த்ர-கங்காதராம் த்வாம் த்ரைலோக்ய-குடும்பினீம் …ர…ிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் || 29 ||

(29) பாற்கடலாசனின் புத்ரியும் ‚ரங்கநாயகியும் தேவஸத்ரீகள் அனைவரையும் பணிப் பெண்களாய்க் கொண்டவளும், உலகுக்கெல்லாம் விளக்குப் போன்றவளும், இந்திரன் பிரம்மா சிவன் ஆகியோரின் பெருமைக்குத் தனது அழகிய கடைக் கண்பார்வையைக் காரணமாயுடையவளும், தாமரைத் தடாகத்தில் தோன்றுபவளும், முகுந்தனுக்குப் பிரியமானவளுமான உனக்கு வந்தனம் செய்கின்றேன்.

…ித்தலமீர்-மோகŒ்ஷலமீர்-ஜயலŒமீ: …ரஸவŒதீ |
‚லமீர்-வரலŒமீச்ச ப்Œர…ந்நா பவ …ர்வதா ||30 ||

(30) …ித்த லமியாகவுமŒ் மோக்ஷ லமியாகவுமŒ் ஜயலமியாகவுமŒ் …ரஸவதியாகவும் ‚லமியாகவுமŒ் வரலமியாகவுமŒ் உள்ள நீ எப்போதும் என்னிடம் பிர…ன்னமா யிருக்க வேண்டும்.

வராங்குசெள பாசமபீதி-முத்ராம் கரைர்-வ†ந்தீம கமலா…னஸதாம் |
பாலார்க்க கோடி ப்ரதிபாம் த்ரிநேத்ராம் பஜேஸ†-மாத்யாம் ஜகதீச்வரீம் தாம் || 31 ||

(31) வரம் அங்குசம் பாசம் அபய முத்ரை ஆகியவறைக் கைகளில் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளும் கோடி உதய சூரியபிரகாசம் பொருந்தியவளும் மூன்று கண்களை உடையவளும் ஜகதீச்வரியும் ஆதிசக்தியுமன அவளைத் துதிக்கின்றேன்.

…ர்வமங்கல-மாங்கல்யே சிவே …ர்வார்த்த …ாதிகே|
சரண்யே த்ர்யம்பகே தேவி நாராயணி நமோஸதுதே || 32 ||

(32) எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைவதற்குரியவளே! மூன்று கண்களையுடையவளே! நாராயணி தேவியே! உனக்கு நமஸகாரம்.
Posted by V.Subramanian

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: