Skip to content

கைத் தடியும் மகளிர் தினமும்

மார்ச் 15, 2008

Subject: Walking stick

ஓம்.
அந்தப் பெரியவர் ஒரு சாதுவானவர். நல்லவர் ஏன்று அனைவராலும் அழைக்கப்படுபவர். எண்பது அகவை தாண்டியவர். பாரிச வாய்வு தாக்கி வலிமை குன்றியவர். கடந்த ஆறு மாதங்களாய் செயற்பாடு குன்றி படுக்கையில் சாய்ந்தவர்.

அறையினுள் கவிந்திருந்த இருளில் மின் ஒளி ஏற்றி மருந்து சாப்பிட நினைத்தார். பத்து நிமிடங்களுக்கு முன்னரே மாத்திரை சாப்பிட்டி ருக்கவேண்டும்.

எங்கே போய்விட்டாள் பங்கஜம்? ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாளே! எங்கேயோ போய்வருவதாகச் சொன்னாளே. பாவம் அவள்.

மெதுவாகக் கைத்தடியை சுவறில் மூலையில் இருப்பதை எடுத்துவிட்டால் மெதுவாக இறங்கி மாத்திரைப் பெட்டகத்தை எடுத்துவிடலாம். படுத்திருந்த உயரக் கட்டில் அதன் மேல் கனமான பஞ்சு மெத்தை ஆகியவை அவரால் இலகுவாகத் தரையில் இறங்க இயலவில்லை. எவ்வாறேனும் மாத்திரைகள் முறையாக விழுங்காவிடில் விளையும் வலி அவரை மெதுவாக இறங்க முயற்சிக்க வைத்தது.

தட்டித் தடுமாறி கால்களை தொங்கவிட்டு மெதுவாக இறங்கிவிட்டார். மூலையில் வைக்கப்பட்டிருக்கும் கைத்தடியை எடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லை எனில் கால்களைஊன்றி அவரால் நிற்கமுடியாது. அங்கிருந்து சற்றே நகர்ந்து அலமாரியில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் மாத்திரை மருந்து புட்டிகளையும் ஒரு கண்ணோட்டம் விட்டார்.
கண்ணாடி எங்கிருக்கின்றதோ தெரியவில்லை. சரியான மருந்தை எடுக்கவும் அதன் மீது ஒட்டப்பட்டிருக்கும் சிறிய எழுத்துகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் சக்தியெல்லாம் போய்விட்டது.

அந்தக் கைத்தடி மட்டும் கைக்குள் அகப்பட்டுவிட்டால் நலம். அதனை தன்னுடைய கையை முழுக்க நீட்டினால் கூடத் தொடமுடியாத தூரத்தில் இருப்பதைப் பார்த்தார்.

கைத்தடியின் உபயோகம் என்ன? வேண்டும் போது கைக்குள்வந்து சற்று உதவி விட்டு தூரதே நிறுத்தப்பட வேண்டிய பொருள். அதற்கு உயிரில்லை. உணர்வுகள் இல்லை. குறிக்கோள் இல்லை. எங்கு வைக்கப்படிருந்தாலும் சினமோ வருத்தமோ கொள்வதில்லை. அழுக்கிலும் சுத்தமான தரையிலும் ஊன்றினாலும் விருப்பு வெறுப்பு அடைவதில்லை.

49 ஆண்டுகால தாம்பத்திய வாழ்வில் பங்கஜம் என்ன சுகம் கண்டாள். அவளை சுகத்திலும் துக்கத்திலும் யாராவது கவனித்திருப்போமா? இரண்டினைப் பெற்றாள் எங்கோ ஒரு மூலையில் எதோ பெயர் தெரியாத தேசத்தில் வசிக்கும் மக்களை நெஞ்சில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறாள். தன்னலம் கருதாத உத்தமி அவள்.

அவளுக்கும் இந்தக் கைத்தடிக்கும் என்ன மாறுபாடு? பிறருக் காகவே வாழ்ந்து தன் சுய விருப்பு வெறுப்புகளை யெல்லாம் வெளிப்படுத்தாது ஒழுக்கத்தின் கடமையாய் உண்டுறங்கி அமைந்து தாரமாய் இருந்து தாயாய் மாறி வயோதிகத்திலும் முகம் கோணாமல் உழைக்கும் அந்த அன்பினிற்கு என்ன கைம்மாறு செய்வேன். இன்றுதான் நோய்வாய்ப்பட்டேன். அன்று அவளைச் சிந்தித்துப் பார்த்தேனா? அவளின் உணவுகளைப் பகிர்ந்து கொண்டேனா.? அவளுடைய அயராத உழைப்பினை பாராட்டிப் பேசியிருப்பேனா? பொருளீட்டமட்டுமே தெரிந்த, முடிந்த ஒரு ஜடப்பொருளாய்த் தானே ஆண்டுகளைத் தள்ளியிருகின்றேன். அவளுக்காக என்ன செய்தேன். அவள் விருப்பம் என்ன வென்பதையாவது கேட்கத்தெரிந்திருந்தேனா? அதுபற்றி மனத்தில் ஒரு சிறிய நிழலாட்டமாவது ஏற்பட்டிருக்குமா? கிழவரின் கண்கள் குளமாயின. கழிவிரக்கம் மேதூர அவர் தேம்பினார்.

திறந்துவைக்கப்பட்டு வெறுமே தாளிடாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த கதவு மெதுவாக திறக்கப் பட்டது. பங்கஜம் வந்தாள். கிழவர் படுக்கையில அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.என்றும் கண்டிராத அதிசயமாக அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து தன்னுடைய கவனக் குறைவினால் அவர் துன்பமடைந்துவிட்டதாக நினைத்தாள்.

ஏன் கீழே இறங்க முயல்கிறீர்கள். துவண்டு விழுந்துவிட்டால் நான் என்ன செய்ய முடியும். உங்களின் கனத்தை என்னால் தனியாக மீண்டும் தூக்கி கட்டிலில் வைக்கமுடியுமா? உங்களிடம் சொல்லிவிட்டு நான் பக்கத்தில் பச்சை வண்ண பிளாஸ்டிக் மூடியில் மாத்திரைகளை எடுத்து வைத்துவிட்டுததானே சென்றேன்.

அவருடைய வலது கையைத் தன் இருகைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் பங்கஜம். இருளாக இருந்த அறையில் மின்சாரம் வந்தவுடன் பளிச்சிட்ட ஒளியில் கிழவரின் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைக் கண்டதும் பதறிப் போனாள்.

ஏன்? நான் சற்று நேரம் இல்லாமல் போனதற் காகவா இந்தத் தண்டனை? உங்கள் கண்களிலேநீர்!
இத்தனை வருடங்களில் இப்படி நான் கண்டதில்லையே!

பங்கஜம்! என்னை மன்னிப்பாயா?
இது என்ன வார்த்தை? அவளுடைய இதயம் கனத்தது.

இதுநாள்வரை கண்கள் கட்டப்பட்ட குதிரை போன்று ஒரே நோக்காய், ஒற்றைவழிப் பாதையாய் உடன் உள்ளவர்களைப் பார்க்காமல் வாழ்ந்து கழித்துவிட்டேனே! எவ்வாறு அந்த நன்றிக் கடன் தீர்ப்பேன்?

இத் தெருவின் கடைசியில் புதியதாக வந்திருக்கும் வங்கி மேலாளர் வசந்திராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்தார்கள். அனைத்து மகளிரும் வந்திருந்தனர். அத்தனை குழதைகளும் என்னையும் உங்களையும் பாராட்டிப் பேசினார்கள். ஆதர்ஸ தம்பதியர்,பழுத்த சுமங்கலி என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

மலர் மாலையின் ஊடே அதைத் தாங்கி ஆதாரசுருதியாய் நிற்பது நார்தான். நீதான் பங்கஜம். அந்த ஆதார சுருதி. நீ இல்லையெனில் என் வாழ்நாள் கேள்விக்குறியாய் ஆகியிருக்கும்.
உனக்குத் தெரியுமா?
சோழ அரசனின் மகள். கலாவதி என்பது அவள் பெயர். அவள் கருவுற்றிருந்த நேரம்.பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நேரம். அவசரமாய் ஒரு ஜோதிடர் வருகிறார்.
அரச்குமாரிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் உலகைச் சிறப்பாய் ஆளுவான் என்றார். கலாவதி வலியை பொருத்துக் கொண்டாள்..

தன் சேடியரிடம் தன் கால்களைக் கட்டித் தலை கீழாய் தொங்கவிடும்படி கேட்டுக் கொண்டாள். அவளின் கோரிக்கையை சிரமத்துடன் நிறைவேற்றினர். ஒரு நாழிகை கழித்தே அவள் கட்டுகளை அவிழ்த்தனர். அதற்குப் பிறகே அவள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அதைப் போலத்தான் நீ பிறருக்காகச் சந்தணக் கட்டையாய்த் தேய்ந்து மணம் பரப்புகின்றாய். தன்னை அழித்துக் கொண்டு ஒளிபரப்பும் மெழுகு வ்ர்தியாய் ஒளிர்கின்றாய்.

காலை நேரம்
வீதியை அடைத்துக்கொண்டு பெண்கள் ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ஊர்வலத்தில் அவர்களெழுப்பிய முழக்கங்கள் செவிப்பறைகளில் வந்து அதிர்வுகளாய்த்தாக்கின.

எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள்
எங்கே போயின எங்கள் முகங்கள்
முகமும் அற்று முகவரி அற்று
முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்.
இல்லம் அலுவல் இரண்டிலும் நொந்து
இரட்டைச் சுமைக்கு ஆளானோம்.
ஆணின் தேவையைத் தீர்த்து வைக்க்வே
அடிக்கடி நாங்கள் தாயானோம்.
எத்தனை காலம் உறங்கிவிட்டோம்!
இப்போதாவது சிறை உடைபடட்டும்”

என்று பெண்ணியத்தின் கோபக் குரல் அந்த முழக்கம்.

காலம் காலமாய்… உள்ள ஆணதிக்க சமூகத்திர்கு எதிரான குரலன்று இது. கூண்டுக்கும் கூட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு எழுந்த கோபத்தின் குரல் தான் இது.

வெளியே எட்டிப் பார்த்த பங்கஜம் இது என்னவென்று கேட்டாள்.

மகளிர் தங்களை அறிந்துகொண்டுள்ளனர். உன்னைப் போல் ஆமையாய அடங்கிக் கிடக்கவில்லை.
மார்ச் 6. மகளிர்தினம என்றார்.

-=-=-=-=-=-=அன்புடன்
வெ.சுப்பிரமணியன், ஓம்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: