Skip to content

DEEPAM AND ITS IMPORTANCE

மார்ச் 25, 2008

.

ஓம்
தீப வழிபாடு

தினந்தோறும. தீபம் ஏற்றி, வழிபாடுசெய்வதற்கும் நேரம், நெறிமுறை அவசியம். அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறு மணிக்குள் ஏற்றிவிடுவதாலும் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் உண்டாகும்.
குத்துளக்கு பீடம்
வலச்சுற்று விநாயகச் சக்கரத்தைஅரிசி மாவினால் இடவேண்டும். இதுவே குத்துவிளக்கு வைக்கும் பீடமாகும். கோலம் போடுவதற்கு உரிய அரிசி மாவைத் தூய்மையான முறையில் தயாரித்துக் கொள்ளவேண்டும்.
குத்து விளக்கு அம்சம்
குத்து விளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்மாவின் அம்சம். நீண்ட தண்டு விஷ்ணுவின் அம்சம். அகலப் பகுதி சிவனின் அம்சம்., அதன் மேலே உள்ள பகுதி மஹேஸ்வரன் அம்சம்.. உச்சப் பகுதி சதாசிவன். விளக்கில் ஊற்றும் நெய்- நாதம், திரி- பிந்து, சுடர்- திருமகள், பிழம்பு- கலைமகள்,, தீ- மலைமகள். இவ்வாறு அனைத்தையும் ஒன்றாகக் கொண்டதே குத்து விளக்ககாகும்.
குத்து விளக்கு அலங்கரிக்கும் விதம்.
குத்துவிளக்கின் அடிப்பாகத்தில், நடுப்பகுதியில், உசப் ப்குதியில் பூச்சூடவேண்டும். பூச்சூட்டும் போது மும்மூர்த்திகளையும், முப்பெருந்தேவியர்களையும் நினைப்பது நன்மைதரும். (முப்பெரும் தேவியர் கலைமகள், மலைமகள், அலைமகள்)
எண்ணெயின் சிறப்பு
நெய்தீபம்: வீட்டின் சுகத்தையும், நலத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மிக மிகச் சிறப்பான பலன்கள் தரவல்லது.
நல்லெண்ணை:
சகல பீடைப் பரிகாரங்களுக்கும் திர்க்க ஏற்றது.
விளக்கெண்ணை (ஆமணக்கு எண்ணெய்): வளமும் விருத்தியும் தரவல்லது.
இலுப்பை எண்ணெய்:-கடன் தொல்லை நீங்கும். ஈசனுக்கு மிகவும் உகந்ததாகும்.
தேங்காய் எண்னெய்: தாம்பத்திய சுகம் மற்றும் குல தெய்வ அருள் கிடைக்கும்.
ஐந்து வகை எண்ணெயும் கலந்த்த தீபம்: சகல ககரிய சித்தியையும் அளிக்கும். ஒவ்வொரு எண்ணெய்க்கும் உரிய பலன்களையும் சேர்த்து அளிக்கும். அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது.
வேப்பெண்ணை வீட்டில் ஒரு போதும் விளக்குப் பயன்படுத்தக் கூடாது.
திரிதரும் பலன்கள்.
பஞ்சுத் திரி: வீட்டில் மங்களம் நிலைக்கும்.
தாமரைத் தண்டு திரி: செல்வம் நிலைக்கும்.
வாழைத் தண்டு திரி: தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
வெள்ளை எருக்கன் பட்டைத் திரி: செல்வம் சேரும்.
புது மஞ்சள் துணித் திரி: நோய்தீரும்.
புது சிவப்பு வண்ணத் துணித் திரி: திருமணத் தடை நீங்கும். மலட்டுத் தன்மை நீங்கும்.
புது வெண்மைத் துணித் திரி: குடும்பத்தில் சுபீட்சம் நிலவும்.
குத்து விளக்குத் துலக்க வேண்டிய நாட்கள்.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்கள்ல் தான் குத்துவிளக்கைத் துலக்கவேண்டும். செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் துலக்கக் கூடாது.
குத்து விளக்கு தேய்ப்பதற்கு துலக்கும் முறை.
புதிய விளக்கு அல்லது பயன்படுத்திக்கொண்டிருக்கும் விளக்கு எதுவாக இருப்பினும், அவற்றைத் துலக்க சரியன முறைகளைக் கடைப் பிடித்தல் வெண்டும்.
சியக்காய்களூடன், பயத்தம் பருப்பு வெந்தயம், பச்சரிசி, காய்ந்த எலுமிச்சம் பழத்தோல் ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளவேண்டும்.அப்படி அரைத்த சீயக்காய்த் தூளைப் பயன்படுத்தி விளக்கினை நன்கு தேய்க்கவேண்டும். தேய்ப்பதற்குப் புதிய தேங்காய் நாரினைப் பயன்படுத்தவேண்டும்.
இறுதியாக எலுமிச்சம் சாற்றினல் விளக்கு முழுவத்ம் தேய்க்கவேண்டும்.
பின்னர் சுத்தமன நீரால் அலம்பிவிட்டு தூயதுணிகொண்டு துடைக்கவேண்டும். துடைத்தவுடன் விபூதி கொண்டு துலக்கவேண்டும். பிறகு துணியை வைத்து நன்கு துடைக்கவேண்டும்.
ண்னெய்i ஊற்றிய பின்னர் தான் திரி இட வெண்டும்.
முதலில் எண்னெயையோ, நெய்யையோ ஊற்ற வெண்டும். அதற்குப் பின்னர் திரியிட வெண்டும்.

எந்த எந்த திக்குகளில் விளக்கு ஏற்றவேண்டும். அவற்றின் பலன்கள் யாவை?
கிழக்கு: லட்சுமி கடாட்சம் கிடைக்கும்
வடகிழக்கு: தான தருமம் பெருகும்.
தென்கிழக்கு: கல்வி அறிவு வளரூம்.
மேற்கு: பகைமை தீரும்
வட மேற்கு: ஒற்றுமை நிலவும்.
தென் மேற்கு: திருமணத் தடை நீங்கும்
வடக்கு: சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
தெற்கு: தெற்குத் திக்கு நோக்கி திப்ம் ஏற்றக்கூடாது.
தெய்வங்களை மகிழ்விக்க:
கணபதி: தேங்காயெண்ணெயில் திபமேற்றி வழிபடவேண்டும்.
நாராயணன்: தூய நல்லெண்ணெய் ஊற்றித் திபமேற்ற வேண்டும்.
சிவன்: இலுப்பை எண்ணெயுடன் சிறிது பசு நெய் சேர்த்து ஏற்றவெண்டும்
தேவி: நல்லெண்ணெய் திபம்
முருகன்: பசுவின் நெய், சந்தன எண்னெய் இவை இரண்டையும் கலந்து ஊற்றி அதில் திரியிட்டுத் திபம் ஏற்றவேண்டும்.
உலோக விளக்குகளின் பயன்கள்:
அகல் விளக்கு (மண்ணால் செய்து சுடப்பட்டவை) சர்வ மங்களமும் நல்கும்.
வெண்கல விளக்கு: தோஷங்கள் விலகும்
பித்தளை விளக்கு: ஓற்றுமையாய் வாழ உதவும்
செப்பு விளக்கு: மனதிற்கு அமைதியைத் தரும்
வெள்ளி விளக்கு: இல்லத்தில் அமைதி நிலவும்
தங்க விளக்கு:நீண்ட ஆயுள் விருத்தி
நவரத்தின விளக்கு: நவக்கிரக தோஷம் நீங்கும்.
எவர் சில்வர் விளக்கு கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

முகம் ஏற்றுவதன் பலன்
ஒரு முகம் ஏற்றுவது: மத்திம பலன்.
இரண்டு முகம் ஏற்றுவது: குடும்ப ஒற்றுமை பெருகும்
முன்று முகம்: புத்திரப் பேறு.
நான்கு முகம் ஏற்றுவது: பசு, பூமி இவற்றைத் தரும்
ஐந்து முகம் ஏற்றுவது: :செல்வத்தைப் பெருக்கும்..

நல்லெண்ணெய் ஊற்றி சுடர் விட்டுப்பிரகாசிக்கும் விளக்குகளைத் தானம் அளிப்பவன், பூவுலகில் சிறப்பு மிக்க வாழ்வைப்பெறுவதொடு முடிவில் முக்தியை அடைகிறான்.
இறைவனின் ஆலயத்தில் விளக்கு ஏற்றியவன், தான் விரும்பும் அனைத்து சுகஙளையும் பெருவான். இவ்வாறு நான்கு மாதங்கள் தொடர்ந்து கைங்கர்யம் செபவனும், கார்த்திகை மாதம் முழுதும் கைங்கர்யம் செய்தவனும் வைகுந்தம் செல்வான்.

தீப தானமே சிரந்த விரதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. தீப தானம் செய்பவன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவான். அவன் தேக ஆரோக்கியம் எப்போதும் நல்ல நிலைமையில் இருக்கும். அவன் கண்கள் குரிய பார்வை பெற்று விளங்கும். விண்னுலகில் அனைவரும் அவன் புகழ் பாடுவர், கார்த்திகை மாதத்தில் தீப தானம் செய்வது எல்லா வித வ்ளங்களையும் நலன்களயும் கொடுக்கும் என்று அக்கினி புராணம் சொல்கின்றது.
அன்புடன், வெ.சுப்பிரமணியன் ஓம்.

.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: