Skip to content

VIVAKAM SRINIVASAN-POORNIMA

மே 2, 2008

ஏப்ரல் 6-ம் தேதி காந்திமதி திருமண மண்டபம் செல்ல இரவு 9முதல் 10 மணிக்குள் புறப்படுதல்.ராதா கல்யாணம் தொடர்பான தீபப் பிரதக்‌ஷிணம் நிகழ்சிகளில் கலந்து கொள்ளுதல் ஓய்வு.
6.ஞாயிறு அதி காலை உஞ்சவிருத்தி உத்சவமும் வழிபாடும்.விரதம் செய்தல். ராதா கல்யாணம்.
மந்திரபூர்வ நிச்சயதார்த்தம்,
மாலை பகவான் பாபாவின் அருள் பஜனை, பக்கத்திலிருந்து ஒரு கோயிலினின்றும் கிளம்பி மாப்பிள்ளை ஊர்வலம்.
7. திங்கள் காசியாத்திரை-கைத்தடி புத்தகம் எடுத்து மணமகன் குடைபிடித்துக் காசி யாத்திரை செல்லுதல் – மாமனார் தன் அருமந்த பெண்ணைத் தருவதாக உறுதி யளித்து மாலை மாற்றிக் கொள்ளுதல்- மாலை மாற்றுகையில் ஒருவரை ஒருவர் சீண்டி மாமன்மார் தூக்கி மகிழ்தல்

கண்ணூஞ்சல்- வண்ணப் பொடி கலந்த சாத உருண்டைகளை மூத்த- இளம் பெண்டிர்கள் இருவருக்கும் சுற்றி திருஷ்டி போக்கல்- ஊஞ்சலில் ஆடும் போது மங்கல மங்கையர்
திறம், பொருள் கொண்ட பாடல்கள்பாடுதல்.

சிறு நுகத்தடியுடன் தர்ப்பை சுற்றி திரு மாங்கல்யம் சேர்த்து பெண்ணின் சிரசில் வைத்து அதன் மீது புனித நீர் தெளித்து இருவரும் இணைந்து ஆயுட்காலம் முழுவதும் நீண்ட வாழ்க்கப் பயணம் தொடர்வோம் என்று உறுதிசெய்து பெரியோர் ஆசி பெறுதல்- இந்து சம்பிரதாயத் திருமணங்களில் மாங்கலய தாரணத்திற்கு முன் மணமகளின் தலை மீது நுகத்தடியை வைப்பார்கள். நுகத்தடிக்கு இரு புறமும் பூட்டிய மாடுகளைப் போன்று, ஒற்றுமையாக ஒரே சீராக நடந்து, வாழ்க்கையாகிய வண்டியை நடத்திச் செல்லவேண்டும் என்பதை உணர்த்தவே நுகத்தடியை தலையில் வைப்பதாகப் பொருள் கூறுவர்.
அது சரியன்று. இதன் தத்துவமே வேறு!
‘அபாலை’ எபன்ற பெண் அத்திரி முனிவரின் புதல்வி. இவளுக்குச் சரும நோய் இருந்ததால் அவளைத் திருமணம் செய்துகொள்ள எவரும் முன்வரவில்லை. அதனால் வருந்திய அந்தப் பெண் தந்தையின் அறிவுரைப்படி இந்திரனை வேண்டித் தவமியற்றினாள். அவளுடைய தவத்தினை மெச்சிய இந்திரன் அவள் முன் தோன்றி அவளுடைய குறையினைப் போக்க வாக்களித்து, முதலில் அவனுடைய தேர்சக்கரத்தின் துவாரங்களில் நுழைத்து வெளியில் எடுத்தான்.

அப்போது அவளுடைய நோய், முள்ளம்பன்றி வடிவில் வெளியேறியது.
இரண்டாவது முறையாக தன்னுடைய தேர்தட்டில் உட்காருமிடத்தில் இருந்த துவாரத்தில் அவளைப் புகச் செய்து வெளியில் இழுத்தான். அப்போது அவள் உடலிலிருந்த ஒரு பகுதி நோய், உடும்பு உருவினில் வெளியேறியது.

மூன்றாவதாகத் தன் தேரின் நுகத்தடியில் உள்ள துவாரங்களில் நுழைத்தெடுத்தபோது மீதியிருந்த நோய் ஓணான் வடிவில் வெளிப்பட்டது. அவள் உடனே குஷ்டம் நீங்கப்பெற்று ஒளி மிக்கவளாக, அழகியாக விளங்கினாள். பிறகு ஒரு வரன் அவளை ஆசையோடு ஏற்றான் என்பது வரலாறு.

இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் நுகத்தடியை பெண்ணின் தலை மீது வைத்து, அதன் துவாரத்தில் பொன்னை வைத்து புனிதநீர் சேர்க்கின்றனர். அதன் மூலம் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உடலில் எங்காவது நோய் இருந்தால் அவை நீங்கி அவள் தாம்பத்தியத்திற்கு உகந்தவளாக ஆக வேண்டும் என்னும் புனித எண்ணத்துடன் இந்தச் சடங்கு தொன்று தொட்டு நடந்துவருகின்றது.

காலை 6.30க்கு மேல் 7.30க்குள் தந்தையின் மடியில் அமர்ந்திருக்கும் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்ய தாரணம். மணமகன் ஒரு முடியும் நாத்தனார் இரண்டு முடிச்சுகளும் இடுதல். அவையினர் அனைவரும் ஆலயம் போன்று எழுந்து அட்சதை மலர்தூவி ஆசி வழங்குதல்.

பின்னர் பாணிகிரஹணம் பெண்ணின் கரம் பற்றி மணமகன் மணமேடையையும் அக்கினியையும் வலம் வந்து சரஸ்வதி தேவியை வேண்டி ஞானமும் கல்வியும், வாயு பகவானை வேண்டி வலிமையும் பெறல்-

அருந்ததி பார்த்தல் அம்மி மிதித்தல்.

பின்னர் சப்தபதி: பெண்ணின் வலது கால் பெருவிரலை மணமகன் தன் வலது கையினால் எடுத்து ஏழு தப்படிகள் வழிநடத்துகிறான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பெண்ணின் கருணையையும் அன்பையும் பெருகின்றான். அந்த இனிய நிலை இத்துடன் அமைகின்றது. அப்போது அவர்கள் சொல்லும் மந்திரத்தில் இவ்வாறு சொல்லப்படுகின்றது.” நீ என்னுடன் தோழமையாகி இருகின்றாய். உன்னுடைய நட்பும் அணிமையும் நாம் இணை பிரியாமல் வாழ்வோமாக. நாம் இருவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக. அன்பையும் உணர்வையும் உணவையும், வலிமையையும் பகிர்ந்து கொள்வோமாக. இரு மனம் கலந்து ஒரு மனமாகி சேர்ந்து வாழ்வோமாக”

பின்னர் அந்தி மாலையின் சற்று முன்னதாக பெண் மாப்பிள்ளை இருக்கும் இடம் வந்து முறைப்படி நலுங்கிட அழைப்பாள். பெண்டிர் குழாம் மத்தியினில் அமர்ந்து ‘சல- சல’ ஒலியுடன் நலுங்குத் தேங்காய் உருட்டுகையில் மைத்துனன் மற்றும் சிறுமிகள், நெருங்கிய உறவினர்கள் மத்தியில் பரிகாசம், பரிவு, கிளர்த்தெழும் கிண்டல், கேலி முதலியவை கணியமாக பகிர்ந்து மகிழ்சிக்கடல் கொந்தளிக்கும்.( திருமணப்பதிவு செய்வதற்கு மண்டபத்திற்குப் பதிவாளர் வருவதர்கு அன்று தெலுங்கு வருடப் பிறப்பு, யுகாதிப் பண்டிக்சிய முன்னிட்டு அரசு விடுமுறை)
பாலும் பழமும் இரு இல்லங்களிலும் வழங்குதல், மற்றும் பஜனை, ஆகியவையும் நடத்தப்பெறும்.)
8. செவ்வாய் கட்டுச் சாதக் கூடை தயாரித்து வழியனுப்பி மணமக்கள் மணமகன் இல்லம் வந்து சேர்தல்.
9. புதன் பூர்ணிமாவின் வீசா ஸ்டாம்பிங், ஹனுமார் கொயில் நங்கநல்லூர்ரில் சுவாமிக்கு வடைமாலை வழிபாடு செய்கிறார்கள்.
10. வியாழன் உறவினர் வீடுகளில் விருந்து
11. வெள்ளி இரவு மகிழ்வுந்தில் திருப்பதி பாலஜி கோயிலை அடைதல். இரவு தங்கல்.
12.சனிக்கிழமை அதிகாலையில் 2-00 மணியளவில் நீராடி சுப்பிரபாதம் தரிசனம், வழிபாடு,பிரசாதம் பெறல்- காளகஸ்திக்குப் புறப்படுதல். மாலை சென்னை திரும்பல்
13. ஞாயிறு Our return journey is planned for 13th April (Sudha and Sai Subramanian.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: