பொருளடக்கத்திற்கு தாவுக

அருள் virunthu

மே 26, 2008


அருள் விருந்து

வணக்கம்.
.

பாராதி அண்டமெல்லாம் படற்கானற் சலம் போல்
பார்த்தனையே முடிவில்நின்று பாரெதுதான்
நின்ற (து)
ஆராலும் அறியாத சத்தன்றோ அதுவாய்
அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாவை கண்டாய்
பூராய மாகவுநீ மற்றொன்றை விரித்துப்
புலம்பாதே சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே
ஓராதே ஒன்றையுநீ முன்னிலைவை யாதே
உள்ளபடி முடியுமெலாம் உள்ளபடி காணே

தாயுமானவர்.

ஓம்.ஓம்
அருள் விருந்து
நமக்கு வெளியே கடவுளைத் தேடிக் கண்டறியமுடியாது.
வாழ்க்கை உண்மையன்று. கடவுள் மட்டுமே வெகு நிச்சயமான உண்மை.
கடவுள் யாரையும் ஒருபோதும் வஞ்சிப்பதில்லை.(ஏமாற்றுவதில்லை)
கடவுளை உளமாற விரும்பித் தேடுபவனுக்கு அவர் தம்மையே கொடுத்து விடுகிறார்.
நம்பிக்கை வை; கடவுளை நம்பி இரு; உன் காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறுவாய்.
ஆன்மீகச் சாதனைகளின் நோக்கம், முடிவு, இலக்கு ஆகிய மூன்றும் ஆன்ம விடுதலை பெறுவதற் காகவே.
கடவுள் மனிதனாக இப்பூமிக்கு வருகிறார். பின் மனித நிலையினின்றும் உயர்ந்து மீண்டும் தெய்வமாகி விண்ணிற்குத் திரும்புகிறார்.
நாம் எங்கே இருந்தாலும் என்ன செய்துகொண்டு இருந்தாலும் நம்மைக் கருணையோடு நேசிக்கும் தாயாக ஒருவர் இருக்கிறார். அவரே கடவுள்.
கடவுளைத் தவிர மற்ற அனைத்தையும் நாம் விரும்புகிறோம். நம் சாதாரண விருப்பங்களை இப்புற உலகம் நிறைவேற்றி வைப்பதுதான் அதற்குக் காரணம்.
தேவைகள் தாமாக நிறைவேறும் வரையில், நாம் கடவுளைத் தேடுவதில்லை. நம் வாழ்க்கைமீது பலமான அடிவிழுந்து ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிருப்தியைத் தரும்போதுதான் கடவுளைத் தேடுகிறோம்.
செய்தி மூலம் தர்மச்சக்கரம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

From → poem

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: