Skip to content

மே 26, 2008

From: v.dotthusg
Date: 5/13/2008 9:34:53 PM
To: sri.logasundaram mylai
Bcc: v.dotthusg@gmail.com
Subject: IRaiyanAr agaporuL urai

ஓம்.

அன்புடைய திரு லோகசுந்தரம் அவர்களுக்கு வணக்கம். 1953-54. நான் பள்ளி இறுதிவகுப்பில் பயின்றுகொண்டிருந்தபொழுது ” இறையனார் அகப்பொருள் உரை” என்னும்பாடம் வந்திருந்தது. நெல்லை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அந்த பாட நூலை பதிப்பித்திருந்தது. இன்று உங்களின் முயற்சியுடன் மதுரைத் திட்டத்தில் அந்த இறையனார் அகப்பொருள் உரை கிடைக்கப்பெற்றமை ஒரு வரமாகவே கருதுகிறென். இத் திட்டத்தில் உங்கள் குடும்பம் மிக்க உழைத்து நூல்களை வலையேற்றம் செய்வது ஒரு தவம். உங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன். என்னுடைய உள்ளிடு ஒன்றினை “பாரதியாரின் நான்மணி மாலை” உங்களுடைய துணையினால் மதுரைத் திட்டத்தில் வலையேற்றம் கண்டது. ஏனொ என்னால் இதில் பங்கேற்க முடியவில்லை/தெரியவில்லை.

வணக்கம்.

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

தொலைபேசி 22477866.

அக்காலத்துப்
பாண்டியநாடு பன்னீரியாண்டு
வற்கடம் சென்றது
செல்லப் பசி கடுகுதலும்
அரசன் சிட்டரை எல்லாம் கூவி

வம்மின் யாம் உங்களைப்
புரந்தரகில்லேன். என் தேயம்
பெரிதும் வருந்துகின்றது நீயிர்
போய் உமக்கு அறிந்தவாறு
புக்கு நாடு நாடாயின ஞான்று
என்னை உள்ளி வம்மின்
என்றான்.
என
அரசனைவிடுத்து எல்லோரும்
போயின பின்றை
கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது
கழிந்த பின்னர்
நாடு மலிய மழை பெய்தது
பெய்த பின்றை
அரசன்

இனி நாடு நாடாயிற்று ஆகலின்
நூல் வல்லாரைக் கொணர்க
என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க
எழுத்ததிகாரமும்
சொல்லதிகாரமும்
வல்லாரத் தலைப்பட்டுக் கொணர்ந்து

பொருளதிகாரம் வல்லாரை
எங்கும் தலைப்பட்டிலேம்
என வந்தார்
வர
அரசனும் புடைபடக் கவன்று

என்னை
எழுத்தும் சொல்லும் ஆராய்வது
பொருளதிகாரத்தின் பொருட்டன்றே
பொருளதிகாரம் பெறேம் எனின்
இவை பெற்றும் பெற்றிலேம்
எனச்சொல்லா நிற்ப
மதுரை ஆலவாயில்
அழல்நிறக் கடவுள்
சிந்திப்பான்

என்னை பாவம்
அரசற்கு கவர்ச்சி பெரிதாயிற்று
அதுதானும்
ஞானத்திடை ஆகலான்
யான் அதனைத் தீர்கற்பாலம்
என்று
இவ்வறுபது சூத்திரத்தையுஞ்
செய்து இவை மூன்று
செப்பிதழகத்தெழுதி
பீடத்தின் கீழிட்டான்
இட்ட
பின்றை ஞான்று
தேவர்குலம் வழிபடுவோன்
தேவர் கோட்டத்தை
எங்கும் துடைத்து
நீர் தெளித்துப் பூவிட்டு
பீடத்தின் கீழ் பண்டென்றும்
அலகிடாதான் அன்று
தெய்வத் தவக்குறிப்பினான்

அலகிடுவன்
என உள்ளங் குளிர அலகிட்டான்
இட்டதற்கு
அவ்வலகினோடும் இதழ் போந்தன
போதரக் கண்டு
போந்து நோக்கினார்க்கு
வாய்ப்படைத்தாயிற்றோர்
பொருளதிகாரமாய்க் காட்டிற்று
காட்ட
பார்ப்பான் சிந்திப்பான்

அரசன் பொருளதிகாரம்
இன்மையின் கவல்கின்றான்
உலகிற் பொருந்தி வழங்குகின்றமை
அறிந்து பட்டுச் செல்லாநின்றது
உணர்ந்து நம்பெருமான்
அருளிச்செய்தானாகும்
என்று தன் அகம் புகாதே
கோயில் தலைக்கடைச் சென்று
நின்று
கடைக் காப்பார்க்குணர்த்த
கடைகாப்பார் அரசற்குணர்த்த
அரசன்

புகுதருக
என்று பார்பானைக் கூவ
சென்று புக்க காட்டக்
கண்டு நோக்கி

இது பொருளதிகாரம்
பெருமான் நம் இடுக்கண் கண்டு
அருளிச் செய்தானாகற்பாலது
என்று
அத்திசை நோக்கி
தொழுது கொண்டு நின்று
சங்கத்தாரைக் கூவித்து

இதனைக் கொண்டுபோய்
பொருள் காண்மின்
என
அவர்கள் அதனைக்
கொண்டு போந்து
கன்மாப் பலகை ஏறியிருந்து
ஆராய்வுழி எல்லோரும்
தாம் தம் உரைத்த உரையே
நன்றென்று சிலநாள் சென்றன
செல்ல

நாம் இங்ஙணம் எத்துணை
உரைப்பினும்ஒருதலைப்படாது
நாம் அரசனுழைச் சென்று
நமக்கோர் காரணிகனைக் தரல்
வேண்டும் என்று
கொண்டு போந்து அவனால்
பொருளெனப் பட்டது பொருளாய்
அன்றெனப்பட்டது
அன்றொழியக் காண்டும்
என
எல்லோரும் ஒருப்பட்டு
அரசனுழைச்சென்றார்
செல்ல
அரசனும் எதிர் எழுந்து சென்று

என்னை நூற்குப்
பொருள் கண்டீரோ
என

அது காரணமாக ஓர்
காரணிகனைத் தரல் வேண்டும்
என

போமின் நுமக்கோர் ஓர் காரணிகனை
எங்ஙணம் நாடுவேன் நீவிர்
நாற்பத்தொன்பதின்மர் ஆயிற்று
நுமக்கு நிகராவார் இம்மையினின்றே
என்று அரசன் சொல்லப் போந்து
பின்னையும் கன்மாப் பலகை ஏறியிருந்து
அரசனும்

இது சொல்லினான் யாம்
காரணிகனை பெறுமாறு என்னைகொல்
என்று சிந்தித்திருப்புழி

சூத்திரம் செய்தான் ஆலவாயில்
அவிர்சடைக் கடவுள் அன்றே
அவனையே காரணிகனைத் தரல்
வேண்டும் என்று சென்று வரங்கிடத்தும்
என்று வரங்கிடப்ப
இடையாமத்து

இவ்வூர் உப்பூரிகிழான் மகனாவான்
உருத்திரச் சன்மன் என்பான்
பைங்கண்ணன்
புன்மயிரன்
ஐயாட்டைப் பிராயத்தான்
ஒருமுங்கைப் பிள்ளை உளன்
அவனை அன்னனென்றிகழாது
கொண்டு போந்து
ஆசனமேலிரீஇக்
கீழிருந்து
சூத்திரப் பொருளுரைத்தால்
கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும்
மெய்யாயின உரை கேட்டவிடத்து
மெய்யில்லா உரை கேட்டவிடத்து
வாளா இருக்கும்
அவன் குமார தெய்வம்
அங்கோர் சாபத்தினால் தோன்றினான்
என முக்காலிசைத்த குரல்
எல்லோருக்கும் உடன்பாடாயிற்றாக
எழுந்திருந்து
தேவர் குலத்தை வலங்கெண்டு போந்து
உப்பூரிகிழாருழைச் சங்கமெல்லாம் சென்று
இவ்வார்த்தை எல்லாம் சொல்லி

ஐயனாவான்
உருத்திரச் சன்மனைத்
தரல் வேண்டும்
என வேண்டிக்
கொடுபோந்து
வெளியது உடீஇ
வெண்பூச்சூட்டி
வெண்சாந்தணிந்து
கன்மாப்பலகை ஏற்றி இரீஇக்
கீழிருந்து
சூத்திரப் பொருளுரைப்ப
எல்லோரும் முறையே உரைப்பக்
கேட்டு
வாளா இருந்து
மதுரை இளநாகனார்
உரைத்த இடத்து
ஒரோவழி கண்ணீர் வார்ந்து
மெய்ம்மயிர் நிறுத்தி
பின்னர்
கணக்காயனார் மகனார் நக்கீரனார்
உரைத்த இடத்து
பதந்தொறும் கண்ணீர் வார்ந்து
மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்
இருப்ப
ஆர்ப்பெடுத்து

மெய்யுறை பெற்றாம் இந்நூற்கு
என்றார்
அதனால்

உப்பூரிகிழார் மகனாவார்
உருத்திர சன்மனாவான்
செய்தது இந்நூற்குரை
என்பாருமுளர்
அவன் செய்திலன்
மெய்யுரை கேட்டானென்க
மதுரை ஆலவாயில் பெருமானடிகளால்
செய்யப்பட்ட நூற்கு
நக்கீரனாரால்
உரைகண்டு
குமாரசாமியால்
கேட்கப்பட்டது
என்க

இனி
உரை நடந்து வந்தவாறு சொல்லுதும்
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தம்மகனார் கீரங்கொற்றனாற்கு உரைத்தார்
அவர் தேனூர்க் கிழார்க்கு உரைத்தார்
அவர் படிமங் கொற்றானார்க்கு உரைத்தார்
அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்
அவர் மணலுராசியர் புளியங்காய் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்
அவர் செல்லுர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கு உரைத்தார்
அவர் திருக்குன்றத் தாசிரியர்க்கு உரைத்தார்
அவர் மாதவளனார் இளநாகனார்க்கு உரைத்தார்
அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்

இங்ஙணம் வருகின்றது உரை
. . . . . . . .
. . . . . . . .

களவியல் அகப்பொருள் உரையின்று
எடுத்த உரைநடைப் பகுதி முற்றிற்று
——————————————————————————–

இவ் உரையின்படி மூலநூல் ஆசிரியர்
மதுரை ஆலவாய் கடவுள் இறைவன்
எனவே இறையனார் அகப்பொருள்
எனும் பெயர் அமையப் பெற்றது போலும்

உரையின் ஆசிரியர் நக்கீரர்
(அறிஞர் பலருக்கு ஐயம் உள்ளது)

——————————————————————————–

சிறு அடிக்குறிப்பு

இந்நூல் உரைகாரர், நாமறிந்த சங்கநூல்கள், அவர் காலத்து
பழகும் ஏனைய சீர்மிகு நுல்களினின்றும் – பாடல்கள், சூத்திரங்கள்
பற்பலவற்றை எடுத்துக்காட்டாக வைக்கின்றார். அவர்தம் உரை
விளக்கங்களினின்று இளம்திரையம், சாதவாகனம், கலைக்கோட்டுத்
தண்டு, ‘நூல்’, ‘ நிகண்டு’, செம்பூழ்சேயார்கூற்றியல், கூத்தநூல்,
சிற்றெட்டகம் எனும் நமக்கு கிடைக்காத தொன்னூற்களின் பெயர்கள்,
வேறு பல நூல் பாடல்கள் மற்றும் ஓர் அகப்பொருள் கோவை நூலின்
பெரும்பகுதி (325+பாடல்கள்) என காணக்கிடைக்கின்றன.
‘பாண்டிக்கோவை’ எனும் பெயரில் அவ்வகப்பொருள் நூல்
வெளிவந்துள்ளது. ஈங்கும் வெளிவரும்.

இக்’களவியல்’ நூலை முறையுடன் உள்ளிட நூல்கள் உதவிய
சென்னை பல்கலைகழக தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயதேவன்
அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

நூ.த.லோகசுந்தரமுதலி

From → ilakkiyam

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: