பொருளடக்கத்திற்கு தாவுக

Saptha sloki

ஜனவரி 24, 2009

 
     

ஓம்.

மதிப்பிற்குரிய மருத்துவர், மட்டுறுத்துனர் அகத்தியம்

 மடலாடற்குழுவில் இட்ட பதிவு

Aum

 ஓம்

மாதர் மே மது கைடபக்னி
      மஹிஷ  ப்ராணாபஹாரோத்ய மே
ஹேலா நிர்மித தூம்ரலோசன வதே
      ஹே சண்ட முண்டார்த்தினி|.
நிச்சேஷீ க்ருத ரக்த பீஜ தனுஜே
       நித்யே நிசும்பாபஹே
கம்ப த்வம்ஸினி சம்ஹாராசு
       துரிதம் துர்கே நமஸ்தே அம்பிகே||
 
அம்மா! மது கைடபர்களை அழித்தவளே, மஹிஷாசுரனின் உயிரை மாய்த்தவளே, ஆணவத்தின் வடிவான தூரலோசனை வதைத்தவளே, சண்ட முண்டர்களை ஒழித்தவளே, ரக்தபீஜ அசுரனை நிர்மூலமாக்கியவளே, சும்ப நிசும் பர்களை ஒழித்தவளே, துர்க்கைத் தாயே, சம்பிகையே உன்னை வணங்குகிறேன். எனது துன்பங்களை உடனே நீக்கி அருள்வாய்.
 
..
I
Dear Sasi,
 
You asked for the meaning of the Durga Saptha Sloki
In Tamil.
So it shall be.
The whole song is here.
I have included the Dhyana Sloka also.
Following that, each verse and its meaning is given.
I will follow-up with a commentary on the Durga Saptha Sloki
In my next mail.
 
மாதர்மே மதுகைடபக்னி மஹிஷப்ராணாபஹாரோத்யமே
ஹேலாநிர்மித தூம்ரலோசனவதே ஹே சண்டமுண்டார்த்தினீ
நிர்சேஷீக்ருத ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்பாபஹே
சும்பத்வம்ஸினி ஸம்ஹராசு துர்க்கே நமஸ்தேZஅம்பிகே
 
துர்கா ஸப்த ச்லோகீ
 
ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
 
துர்க்கே ஸ்ம்ருதா ஹர்ஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து·க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா
 
ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோZஸ்துதே
 
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நாமோZஸ்துதே
 
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ்: த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோZஸ்துதே
 
ரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலா நபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி
 
ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்
 
Now the meaning….. ..
 
ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
 
மஹாமாயை ஆகிய பகவதி தேவி ஞானிகளின்
சித்தங்களையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கவர்ந்திழுத்து
மோஹத்தில் செலுத்திவைக்கிறாள்.
 
துர்க்கே ஸ்ம்ருதா ஹர்ஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து·க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா
 
கடப்பதற்கும் முடியாத மிகுந்த துன்பத்தில் நினைக்கப்
பட்டால், நினைக்கப்பட்டவுடனேயே சகல ஜீவர்களின் பயத்தையும்
உடனேயே போக்குகிறாய்.
மகிழ்ச்சியான காலத்தில் நினைக்கப்பட்டாலோ பரம
மங்கலமான நல்லறிவைக் கொடுக்கிறாய். வறுமை, துன்பம்,
பயம் ஆகியவற்றை உடனே போக்குபவளே! அனைவருக்கும்
அனைத்துவிதமான உதவிகள் நன்மைகள் துணை ஆகியவற்றை
அனைத்துக் காலங்களிலும் செய்வதற்காக, எப்போதும் ஈரம்
கசிந்த மனத்துடன் காத்துக்கொண்டு நிற்பதில் உன்னைத்
தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
 
ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோZஸ்துதே
 
மங்கலமான பொருள்கள் அனைத்திலும் பரம மங்கலமாக
விளங்கும் பரம மங்கலமானவளே! மங்கலமே வடிவான சங்கரனின்
சக்தியே! அனைத்து புருஷார்த்தங்களாகிய அறம், பொருள்,
இன்பம், வீடு ஆகியவற்றை சாதித்துக் கொடுப்பவளே! சரணாகவும்
கதியாகவும் விளங்குபவளே! முக்கண் படைத்தவளே! வெண்ணிறம்
கலந்த பொன்மேனியுடைய கௌரியே! மனிதர்களுக்கு அருளுபவளாகிய
நாராயணியே! உனக்கு நமஸ்காரம்
 
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நாமோZஸ்துதே
 
‘சரண்’ என்றும் ‘நீயே கதி’ என்று நிர்க்கதியாக வந்த
தீனர்களையும் துன்பமடைந்தவர்களையும் அருமையுடன் காப்பதைத்
தன் தொழிலாகக் கொண்டிருப்பவளாகிய தேவீ! அனைவரின்
கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கும் நாராயணீ! உனக்கே
நமஸ்காரம்.
 
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ்: த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோZஸ்துதே
 
பார்க்கப்படும் பொருளனைத்தும் நீயாவாய். அனைத்தையும்
ஆளும் தேவியும் நீயே! நிற்கும் நடக்கும் இருக்கும் சர அசரங்களின்
அனைத்து சக்தியும் ஒருமுகமாக இருப்பிடம்கொண்டவளும் நீயே!
தேவீ! துர்கே! உனக்கு வணக்கம். பயங்களிலிருந்து எங்களைக்
காத்தருள்வாய்.
 
ரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலா நபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி
 
நீ திருப்தியடைந்தால் அனைத்து நோய்களையும்
பிணிகளையும் அறவே அகற்றிவிடுகிறாய். ஆசைகளுடன்
கேட்கப்படும் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறாய்.
உன்னையே அரணாகக் கொண்ட மனிதர்களுக்கு இடர்
என்பதே இல்லை. அப்படி உன்னால் பாதுகாக்கப்படுபவர்கள்
மற்றவர்களுக்கே அரண்களாக விளங்குகிறார்கள் அல்லவா?
 
ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்
 
அனைத்து அகிலத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளவளே!
உன்னால் என்னுடைய பகைவர்கள் நாசமடையவேண்டும்.
இவ்வாறே மூவுலகங்களிலும் உள்ளவர்களின் அனைத்துத்
துன்பங்களையும் நீ அடியோடு இல்லாமல் செய்துவிடவேண்டும்.
 
அன்புடன்
 
ஜெயபாரதி
 
============ ========= ========= ==
 
    

Aum

 
(¨`•.•´¨) Always
  `•.¸(¨`•.•´¨) Keep
(¨`•.•´¨)¸.•´ smiling!
  `•.¸.•´    Aum.
V.Subramanian, 
 
 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: