Skip to content

தினம் ஒரு தகவல் – அசாதாரணமான மனிதன்

பிப்ரவரி 5, 2009

 

                   அசாதாரணமான மனிதன்                    வியாழன் , 05 பிப்ரவரி 2009

 

ஜெர்மானியராகப் பிறந்தவர் ஐன்ஸ்டீன். நாஜீகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர்.. அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சிசாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவரை அந்த ஆராய்ச்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றிக்காட்டி திருப்திதானா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

 

ஐன்ஸ்டீன் சற்று தயங்கி தாழ்ந்த குரலில் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி “இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறது, கொஞ்சம் பெரிய குப்பைக் கூடை இருந்தால்” நல்லது என்றார். “பெரிய குப்பைக் கூடையா” எதற்கு? விளக்கம் – நான் என்ன மேதாவியா… எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன், எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்த எறிந்து விட்டு மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாக செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளை புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும் என்றார்.

 

சாதாரணங்களில் இருந்து தான் அசாதாரணங்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சரணமாகி விடாதிர்கள். சின்னச் சின்னச் சறுக்கல்கள், வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையைய் இழக்காதீர்கள். நாமும் ஒரு நாள் சாதாரணமாக இருந்து தான் அசாதாரண மனிதனாக இந்த உலகுக்கு அறிவிப்போம். அது வரை வெற்றியோடு போராடுவோம்.

 

உதாரணம்: தனது நான்கு வயது குழந்தைப் பருவத்திலேயே “காது கேளாதவன்”, “படிக்க லாய்க்கையில்லை” என்று ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு அந்த சிறுவன் பிற்காலத்தில் பல்பை  கண்டுபிடித்து இருட்டை அகற்றி வெளிச்சம் தந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வாய் எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி உலகில் உள்ள அனைத்து பள்ளிக் கூடங்களிலும் அறிவியல் பாடமாக கற்பிக்கப்படுகிறது.

 

            தனது 67வது வயதில் பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. அப்போது அவர் கூறியது “நல்லது. என் தவறுகள் எல்லாம் எரிந்து போயின, என் பிழைகள் யாவும் தீயில் கருகிவிட்டன”. கடவுளுக்கு நன்றி. “இனி ஒரு புதிய தொடக்கம்” என்றார். மூன்றே வாரத்தில் அவர் “போனோகிராப்” என்பதனைக் கண்டறிந்தார்.

           

இது போன்ற எண்ணங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எழுமானால் அனைத்து சாதாரண மனிதர்களும் அசாதாரமாணவர்களே.

 

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!! 

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், உடன் பணிபுரிவர்கள் எவரேனும் இந்த தினம் ஒரு தகவல் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எனக்கு தெரியப் படுத்தவும்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,

கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்                                                                                   

Email: ananthprasath@drcet.org

  DRCET                                                                                                                                                anudhinam

 

 

 

 

 

 

 

 

 


 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: