Skip to content

தினம் ஒரு தகவல் – அழுகை

மார்ச் 4, 2009

                                      அழுகை                                                    வியாழன், 05 மார்ச் 2009

     

              அர்ஜுனனுக்கு பகவத் கீதையைய் முழுக்க முழுக்க உபதேசித்து விட்டு, ரதத்தின் மேற்குடையில் போய் உட்கார்ந்து கொண்டானாம் கிருஷ்ணன். யுத்தம் நடந்ததாம். அர்ஜுனனின் மகன் அபிமன்யு அதிலே இறந்து விட்டானாம். அர்ஜுனன் புலம்பி அழுதானாம். அப்போது மேற்குடையில் இருந்து பத்துச் சொட்டு கண்ணீர் அர்ஜுனன் தலையில் விழுந்ததாம். ஆம்; கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.

 

உடனே அர்ஜுனன் கேட்டானாம், “கண்ணா! நான் தான் மகனுக்காக அழுகிறேன்; மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?” என்று. கண்ணன் சொன்னானாம்… “இல்லையடா அர்ஜுனா! மனத்தைப் திடமாக வைத்துக் கொள்வது பற்றி உனக்கு இவ்வளவு நேரம் கீதை உபதேசித்தேன், அது எவ்வளவு சீக்கிரம் வீணாகிவிட்டது”.

 

தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்ட அர்ஜுனனுக்கே அந்த துன்பத்தை தாங்காமல் அழுதுவிட்டான். அர்ஜுனனைப் போல் தான் நாமும் சில சமயங்களில் துன்பங்கள் அதிகமாகும் போது நாமே அழுது துன்பத்தை தீர்த்துக் கொள்கிறோம்.

 

அதே சமயத்தில் ஞானிகளும் முனிவர்களும் தன் வாழ்க்கையில் அழுவதே கிடையாது என்னதான் துன்பம் வந்த போதிலும் சரி அல்லது வேண்டிய ஒருவரின் இறப்பின் போது கூட. பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பும் கண்டிப்பாக இருந்தே தீரும். அதிலும் உடல் மட்டுமே இறக்கிறது. ஆன்மா என்றும் நம்முடனே இருக்கிறது என்று கூறி பிராமணர்களும் அழுவதே கிடையாது என்றும் கூறப்படுகிறது.

 

அழுகை எத‌ற்கும் முடிவ‌ல்ல‌! நிஜ‌ங்க‌ளை நிஜ‌மாக‌ ஏற்றுக்கொள்ள‌ ப‌ழகித்தான் ஆக‌ வேண்டும்…

 

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,

கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்                                                                                   

 கல்விச்சேவை                                                                                                                                                 anudhinam        

குறிப்பு: தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org        

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: