Skip to content

Fw: SUNDARAKANDAM 2/3

ஏப்ரல் 25, 2009

 
 
——-Original Message——-
 
 
Subject: SUNDARAKANDAM 2/3
 

 

 

 

 

ஓம்

-=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    ஓம். 

ராவணன் கடும் கோபத்தோடு பேசினான். அற்ப மானிடன் மேல் வைத்த ஆசையை அன்பை, இந்த அசுர வேந்தன் மேல் மாற்றிக்கொள்ள மறுக்கும் உன்னை நான் நினைத்தால் ஒரு நொடியில் அழித்து விடுவேன், உனக்கு நான் விதித்த கெடுவிற்கு இன்னும் இரண்டு மாதங்களே மீந்து இருப்பதை நினைவிற்கொள். மனம் மாறி பட்டத்து ராணியாய் அனைத்து போகங்களுடன் வீற்றிரு. இல்லையேல் உன்னை எடுத்து என் அறுசுவையாய் உண்டு தீர்ப்பேன்என்று மிகவும் கடுமையாகவும் சீற்றமாகவும் பேசினான். அங்கிருந்த அரக்கியரை அழைத்து , ” இவளது மனத்தை இராமனிடமிருந்து பேர்த்து என்பக்கம் திருப்புங்கள்என்று ஆவேசமாகக் கூறிவிட்டு, குறையாத கோபத்துடனும், தாபத்துடனும் குன்று அசைவது போல் அசைந்து பூமி அதிர நடந்து சென்றான்.

 

   சீதையைச் சுற்றியிருந்த அரக்கியர் குழாம் சீதையை உண்டுவிழுங்குவதாக மிரட்டினர். அது சமயம் அங்கு வந்த விபீடணண் மகள் திரிசடை , “எல்லோரும் சீதையைவிட்டு விலகிச் செல்லுங்கள்.”  என்று ஆணையிட்டாள். எல்லோரும் தூரத்தே சென்றனர். அவள் சீதையிடம், “இன்று அதிகாலையில் நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் நான் கண்ட காட்சிகளை உன்னிடம் பகிர்ந்து கொ

ள்ளும் முகமாக இதைக் கூறலானேன். அசுர வேந்தன் அலங்கோலமாக ஆடையுடன் கழுதையின் மீது அமர்ந்து தென் திசையில் செல்கிறான். இராமர் வெற்றி வீரனாக சீதையோடு வெண்புரவி மீது பவனி வருகிறார். இலங்கை பாழ்பட்டுக் கிடக்கிறது“, என்று சொன்னாள்.

அப்போது சீதையின் இடது கண் துடித்தது.  அவள் மனக் கலக்கத்துடன் தன் உயிரைத் துறப்பதாக முடிவிற்கு வந்து மரத்திற்கு அருகே சென்று நின்றாள்.

 

   அப்போது இதுதான் தன்னைப் பற்றி யார் என்பதைச் சொல்வதற்கும், இராம தூதுவனாக வந்து அன்னையக் காணும் பணியை சிரமேற்தாங்கி வந்திருப்பதையும் பிராட்டியிடம் தெரிவிப்பதற்கு இதுவே ஏற்புடைய நேரம் என உணர்ந்த ஆஞ்சனேயர் அடங்கிய குரலில் ராம் ராம்!என்று அன்பொழுகப் பக்தியுடன் ஆரம்பித்தார். தன் நாதன் நாமத்தை இராவணனின் நாட்டினில் யார் கூறுகிறார்கள்! என்று சுற்றிலும் பார்த்தாள். அப்போது ஆஞ்சனேயர் கீழே குதித்தார். குரங்கு வடிவுடன் காட்சி யளிக்கும் அனுமனைப் பார்த்து மாயாவியான இராவணன் தன்னை மயக்கச் செய்யும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகுமோ?! என்ற ஐயம் எழுந்தது. தன் அருகே நின்றிருந்த அனுமனை நோக்கி என்னை ஏமாற்றுவதற்காக இப்படி வேஷம் போட்டு வந்து, என் நாதனின் பெயரை உச்சரித்தால் நான் நம்பி விடுவேன் என்று நினைக்காதே. இங்கிருந்து உடனே போய்விடு.என்றாள் சீதை. உடனே ஆஞ்சனேயர்,” தாயே! என்னைத் தவறாக எண்ணாதீர்கள். நான் இராம தூதுவனாக இவண் வந்துள்ளேன்என்று இருகை கூப்பிக் கொண்டு இராமரின் கதையைக் கூறினார். பூர்வத்தில் தசரதர் யாகம் செய்ததும், புத்திரர்கள் நான்கு பேர்கள் வந்துதித்ததும், ஜனகர் வில்லொடித்து ஜானகியைத் திருமணம் செய்து கொண்டதும், தாயார் கைகேயி வரத்தால் வனம் போந்ததும், மாயையினால் வந்த பொன்மானை பிடிக்க இராமர் பிரிந்து சென்றதும், அப்போது அன்னையை இராவணன் சிறை எடுத்ததும் பக்குவமாய்க் கூறி பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கினார். அனுமன் சொன்ன தெல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், வானரனான உன்னால் எப்படிக் கடல் தாண்டி வர இயலும்!என்று கேட்டாள். சீதைத் தாயே ! நான் வாயு தேவனுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவன். என் பெயர் ஆஞ்சனேயன். கிஷ்கிந்தையில் சுக்கிரீவனிடம் நான் சேவை  செய்துவருகிறேன். இராமர் சுக்கிரீவனைச் சந்தித்ததனால் நான் இங்கு வரலாயிற்று. நாங்கள் வானர சமூகத்தில் வந்தவர்கள்”  என்று சொல்லி தன் உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டினார்.  விஸ்வரூபம் காட்டிய பின்னர் சிற்றுருக் கொண்டு இராமர் அடையாளமாகத் தந்த கனையாழியை சீதையிடம் அடக்கத்தோடு அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட சீதாதேவி தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். தன் நாதனையே கண்டுவிட்டதைப் போன்று ஆனந்தப் பரவசம் அடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் மல்க இந்நிகழ்வுக்குக் காரணமாக இருக்கும் ஆஞ்சனேயரை அன்போடு ஆசீர்வதித்தாள். வாரும் ஆஞ்சனேயா! என் மன்னவரும் இளையவரும் சுகமாக இருக்கிறார்களா? ” என்று விசாரித்தாள். என்னைப் போலவே இராமரும் அமைதி இழந்திருப்பார். நீ தான் அவருக்கு ஆறுதல் கூற வேண்டும். இராவணன் எனக்கு விதித்திருந்த  கெடுவில் இன்னும் இரண்டு மாதங்களே பாக்கியாக உள்ளன.அதற்குள் இராமர் வந்து இராவணனைக் கொன்று என்னை அழைத்துப் போகும்படி சொல். விபீஷணன் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் அவன் அதை ஏற்கவில்லை. அதனால் இராமர் வந்து என்னை மீட்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. இராமர் வரத் தாமதம் ஆனால் நான் என் உயிரைத் துறப்பேன் என்பதையும் அவரிடம் சொல்.என்று சொல்லிய ஜானகி தேவியைப் பார்த்து அனுமார்,” தாயே தாங்கள் விரும்பினால் நான் இப்போதே உங்களை இராமரிடம் கொண்டு சேர்ப்பேன். ஒரு கட்டையில் அமருங்கள். அதை என் முதுகின் மீது வைத்துக் கொண்டு போகிறேன்என்றார் ஆஞ்சனேயர். அவர் சொன்னவுடன், தான் அப்படி  வருவது தவறு. இராமர் வந்து இராவணனை வென்று என்னை அழைத்துப் போகவேண்டும். இராவணன் என்னை யாரும் அறியாமல் தெரியாமல் சிறை எடுத்து வந்தான். அதே போன்று நான் இங்கிருந்து யாரும் அறியாமல் போக விரும்பவில்லை“.என்று சொல்லிய பிராட்டி ஆஞ்சனேயர் தன்னைக் கண்டதற்கு அடையாளமாக தன் சூடாமணியை அளித்தாள். அதை வாங்கிக்கொண்ட அனுமார் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டார். பிறகு சீதையை வணங்கிஆறுதல் கூறி, “வெகு விரைவில் இராமர் வந்து இராவணனை வென்று உங்களை மீட்டி அழைத்துப் போவார். இது உறுதி. இராவணன் அழியப்போவது நிச்சயம். மனம் தளராது தாங்கள் உறுதியோடு இருக்கவேண்டும்  என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்என்று கேட்டுக் கொண்டார். சீதை அனுமாரை  ஆசீர்வதித்து ” சிரஞ்சீவியாக இருப்பாயாகஎன்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள்.

 

அன்புடன் அனுமதி பெற்ற அனுமார் அறநெறி தவறிய அரக்கன் இராவணனுக்குத் தான் ஒரு பாடம் புகட்ட எண்ணி அழகான அசோக வனத்தை அழித்தார். அசோக வனம் அனுமாரின் அட்டகாசத்தால் சோக வனமாகக் காட்சியளித்தது.

 

அதைக்கண்ட அரக்கர்கள் இராவணனிடம் போய் நடந்த சம்பவத்தைக் கூறினார்கள். குரங்கு ஒன்று வந்து  மைதிலியைச் சந்தித்து பேசிவிட்டு அசோக வனத்தை அழித்துக்கொண்டுள்ளது. என்று சொன்னவுடன் இராவணன் சேனைகளை அனுப்பும்படி ஆணையிட்டான். எதிர்வந்த சேனைகளை  வர வர மரத்தைப்பிடுங்கி அடித்து முழுவதும் அழித்தார். கிங்கரர்கள் என்னும் வீரர்கள் அனைவரும் அழிந்துபட்டனர்  என்பதைக் கேட்ட இராவணன் கடும் கோபத்தோடு தசமுகன், ஜம்புமாலி எனும் கொடிய அரக்க வீரர்களை அனுப்பினான். அவர்களையும் கொன்றுவிட்டு அச்சம் சிறிதும் இன்றி நின்று கொண்டிருந்தார் அனுமன். இராவணன் மீண்டும் முக்கிய அதிவீர தளபதிகளை அனுப்பி வைத்தான். அவர்களையும் கொன்று குவித்துவிட்டு ஜொலித்துக் கொண்டேயிருந்தார் அனுமன். எல்லோரும் அழிந்ததைக் கேட்டு வெகுண்டு ஆத்திரம் அடைந்தவன் தன் மகன் இந்திரஜித்தை அழைப்பித்து உடனே சென்று அற்ப வானரத்தை அழித்துவிட்டு வெற்றியோடு வர ஆணையிட்டான். இந்திரஜித் வருவதைக் கண்ட அனுமன் தன் உருவத்தைப் பலமடங்கு பெரிதாக்கிக்கொண்டு போருக்குத் தயாரானார். அசகாய சூரனான இந்திரஜித்துவிற்கும் இராமரின் தூதுவன் அனுமாருக்கும் போர் தொடர்ந்தது. இந்திரஜித் விட்ட பாணங்கள் எல்லாம் தன் மீது படாதபடி அதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இந்திரஜித்தைத் தன் தோள்வலியால் தாக்கினார். அந்தத் தாக்குதலில் இந்திரஜித் நிலைகுலைந்து போனான்.  உடனே பிரமாஸ்திரத்தை ஏற்றி ஏவினான். . அதை அறிந்த அனுமன் அந்த பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டது போல நடித்து ஒரு மயக்கத்தைத் தந்தார். உடனே அரக்கர் குழாம் ஒரே ஆரவார கொண்டாட்டம் செய்து அகப்பட்டது கொடிய வானரன் என்று கூவிக்கொண்டு  கயிறுகள் பல கொண்டு கட்டி இராவணனிடம் அழைத்துப் போனார்கள்.    அமைச்சர்கள் புடை சூழ அரியனையில் அமர்ந்திருந்தான் இராவணன். ஆசனம் அளிக்கப்படாததால் தன் வாலையே நீளமாக்கிச் சுழற்றிவைத்து இராவணனின் அரியணையினும் உயரத்தே ஆசனம் அமைத்து அமர்ந்தார் அனுமன். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த இராவணன் அமைச்சர்களிடம் இவன் யார் என்று கேட்கும்படி ஆணையிட்டான். இராவணனை நேருக்கு நேர் சந்தித்த அனுமன் அவனை எடை போடும் வகையில் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் இவன் கீழ்த்தரமான இச்செயலை மட்டும் செய்யாது இருந்தா னானால் அமரர்களால் போற்றப்படுபவனாக இருந்திருப்பான். என நினைத்த நேரத்தில் பிரகஸ்தன் அனுமாரைப் பார்த்து ,” நீ யார்? எங்கிருந்து வந்துள்ளய்? அசோக வனத்தை ஏன் வீணாக அழிக்க முற்பட்டாய்? உண்மையைக் கூறினால் நீ விடுவிக்கப் படுவாய்” என்று கூறினான். அதற்கு அனுமன் கொஞ்சமும் அச்சமின்றி நான் ஸ்ரீ இராமரின் தூதுவனாக வந்துளேன். நான் ஒரு வானரன். அரசனைச் சந்திக்க விரும்பியதால் அசோகவனத்தை அழித்தேன். என்னைக் கொல்ல வந்தவர்களை அழித்தேன். சீதை மகாலக்ஷ்மி அவதாரம். அவளைத் தக்க மரியாதையுடன் ஒப்படைத்துவிடு. இல்லையென்றால் இராமரின் பாணம் உன் தலையைத் துளைக்கும். உனக்கும் உன் குலத்தவர்க்கும் அழிவைத் தேடாதே. இராமர் சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டுள்ளார். ராமர் வாலியை வீழ்த்தினார். இலட்சுமணன் வீரம் உனக்குத் தெரியாது. மற்றும் என்னைப் போல் பல்லாயிரம் வானரனப் படை வந்து இலங்கையை அழிப்போம்என்று கூறினார். இதைச் செவி மடுத்த இராவணன் அருகிருந்தவர்களைப் பார்த்து, ” ஆயுதத்தை எடுத்து இவனை கண்டதுண்டமாக வெட்டுங்கள்என்றான். உடனே விபீஷணன் எழுந்து வந்து, ” தூதுவனை கொல்வது ஆகாது. கொஞ்சமாய் ஆக்கினை செய்துவிடலாம்என்றான். உடன் இராவணன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் வாலின் மீது  பிரியம் கொண்ட வானரத்திற்கு அதன் வாலில் எண்ணெய்த் துணிகளைச் சுற்றி எரியூட்டுங்கள்எமன்று ஆணையிட்டன். உடனே சற்றும் தாமதிக்காமல் அரசன் இட்ட ஆணையைச் செயல்படுத்தினார்கள். தெருக்களில் இழுத்துப் போய் ஊருக்கு அப்பால் விரட்டிவிடுங்கள்என்றான் இராவணன்.  -=-=- (வளரும்)  

-=-=-=-=-=-=-=-=- 

         

 

     

         

                   

 

 

 

 

 

 .

 

 

     

 

 

 

 

 

 
     

Aum

 

(¨`•.•´¨) Always
  `•.¸(¨`•.•´¨) Keep
(¨`•.•´¨)¸.•´ smiling!
  `•.¸.•´    Aum.
V.Subramanian, 
 
 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: