Skip to content

தினம் ஒரு தகவல் – மணவாழ்க்கைச் சட்டம்!

ஏப்ரல் 28, 2009

                            மணவாழ்க்கைச் சட்டம்!                                            புதன் 29, ஏப்ரல் 2009

 

 

இள மனங்களைக்

கேட்க்காமலே

இங்கு

திருமணங்கள்

நடத்தப்படுகின்றன!

 

இருவரின்

இதய அபிலாசைகள்

புதை குழிக்குள்

புகுத்தப்படுகின்றன!

 

வேகும் தீயின் முன்னே…

அய்யர் ஓதும்

வேதத்தின் வேகத்தில்

வேதனைகளை மறைத்துக் கொண்டு

மாலைகள்

மாற்றப்படுகின்றன!

 

முடிந்துண்டு விலங்கால்

விரல்கள்

பூட்டப்பட்டு

இல்லறக் கைதிகளாய்

மணவறை வலம்

கட்டாயமாகின்றது!

 

அக்கினி சாட்சியாய்

இருவரை

சமுதாயம்

ஆயுட் கைதிகளாய்

ஆக்கி விட்டது!

 

 

 

ஏமாந்த மனங்களில்

ரணவேதனை!

இருந்த போதும் –

உலகிற்கு

சொர்க்கப்படம்

காட்டப் படுகிறது!

 

 

வேம்பாக மாறிய

வேளையிலும்

பால் – பழச் சடங்கு

பறிமாற்றம் நடக்கிறது!

 

ஓரிலையில்

அமர்ந்த போதும்

இருவரின்

இதயப் பயணங்களும்

வேறு வேறு பாதையில்தான்!

 

கட்டாயத் திருமணங்கள்

காலத்தால் –

உடைக்கப்பட வேண்டும்!

 

இன்னாரை இன்னார்

இனங்கண்டு

மனம் உவந்து

ஏற்றுக் கொள்ளும் மணவாழ்க்கை

சட்டமாக மாற வேண்டும்.

அதைச் சமுதாயத்

திட்டமாக ஏற்க வேண்டும்!

 

 

நன்றி மஞ்சை மயிலன் ஐயா அவர்களுக்கு!!!

http://manjaimayilan.blogspot.com/

 

 

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,

கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்

கல்விச்சேவை   anudhinam   

   

குறிப்பு: தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org 

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: