Skip to content

தினம் ஒரு தகவல் – கடவுள் இருக்கிற��ரா?

ஜூன் 11, 2009

 

 

 வாசகர்கள் கவனத்திற்கு 

  

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பக்கத்தில் மிகவும் குறைந்த தொகையில் தங்களது வர்த்தகம், தொழில் தொடங்குதல், கணிப்பொறி பயிற்சி மையங்கள், கல்வி நிலையங்கள், இணைய/தினசரி, வார மற்றும் மாத பத்திரிக்கைகள், திருமணத் தகவல்கள் போன்றவற்றை விளம்பரம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த விளம்பரம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் மனங்களை சென்றடைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இது உங்களை அல்லது உங்களது வர்த்தகம் பற்றிய ஓர் அறிமுகம் மற்றும் 

ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் உங்களது பங்கு.

 

 

     ஜீன் 11, வியாழன் 2009 

கடவுள் இருக்கிறாரா?

ஒரு முறை பேரரசர் அக்பர், பீர்பாலிடத்தில் “கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. ஏன் கடவுள் நேரடியாக வரவேண்டும். தன்னுடைய வேலைக்காரர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பக்கூடாதா?” என்று கேட்டார். இதற்கு பீர்பால் இந்த கேள்விக்கு உடனடியாக விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். சில நாட்கள் கழித்து கங்கை நதியில் அக்பர் தன் குடும்பத்தாரோடு படகில் செல்ல பீர்பால் தானும் உடன் வருவதாகக் கூறி ஏறிக் கொண்டாராம். ஆற்றின் ஆழமான பகுதியில் படகு செல்லும் போது அக்பரின் மூன்று வயது பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அதைக் கண்டு அரச குடும்பமே அலறி துடித்தது. நிலவொளியில் இசையைய் இரசித்துக் கொண்டிருந்த அக்பர் உடனே ஆற்றில் குதித்து தனது மூன்று வயது பேரனைக் காப்பாற்றினார்.

“முட்டாளே! நீ செய்த காரியத்திற்கு உன்னை இப்போதே வெட்டிக் கொல்ல வேண்டும். இருந்தாலும் நீ என் மந்திரி ஆகையால் உன்னை விட்டு வைக்கிறேன். ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என பீர்பாலை நோக்கி அக்பர் கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பதற்றமேதுமடையாமல், அரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு கோபம் குறையாத அக்பர் குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது அரசனாக ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா? எனப் பதிலுக்கு கேட்டார். அப்போது பீர்பால், சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் அன்றைக்கு என்னிடத்தில் கேட்ட கேள்விக்கு விடை இது தான்.

கடவுள், தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், நீங்களே நீரில் குதித்துக் குழந்தையைக் காக்க நினைத்தது போல, இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.

 

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திடவாழ்த்துக்களோடு,  

கொல்லி லை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்

கல்விச்சேவை  anudhinam   

 

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்த சேவையைய் பெற விரும்பினால் தயவு செயது அவர்களது மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: