Skip to content

**Aum**Aviyal** Friday** July** 3.

ஜூலை 3, 2009

ஓம்.

இவை நலம். நலமே நாடுகிறேன்.(மார்க்கண்டேயர்– அல்லது மரணமில்லாப் பெருவாழ்வு

தானத்தில் சிறந்தது உதானம் (உறுப்புகள் தானம்)

ஆங்கிலத்தில் எழுதியது ராபர்ட் டெஸ்ட். (தமிழில்) டாக்டர் என். இராமகிருஷ்ணன் நன்றி மங்கயர்மலர்.

என்றென்றும் நான் உங்கள் நினைவில் நிற்க…………………….

 • ஒருமுறைகூட சூரியோதயத்தையோ, குழந்தையின் அழகிய முகத்தையோ, பெண்ணின் கண்களில் தெரியும் காதல் பார்வையோ காணாத ஒருவருக்கோ இருவருக்கோ என் கண்களைக் கொடுங்கள்……….
 • இதயமே ஒரு வலியாகித் தவிக்கும் ஒருவருக்கு என் இதயத்தைத் தந்துவிடுங்கள்……
 • விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனுக்கு, என் இரத்தத்தைக் கொடுத்து, அதன் மூலம் அவன் வாழ்க்கை பலநாள் நீடித்து, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சும் பாக்கியத்தை அவன் பெறட்டும்………………
 • இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கையைப் போக்க ஒருவருக்கு என்சிறுநீரகங்களைப் பொருத்துங்கள்………..
 • என் உடலில் உள்ள எலும்பு, சதை,நரம்புகள் ஒரு ஊனமுற்ற குழந்தைக்குப் பயன்படும் என்றால் தயவு செய்து எடுத்துக்கொண்டு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்யுங்கள்
 • என் மூளையில் எந்த ஒரு அணுவும், ஒரு வாய் பேசாதவருக்கோ, காது கேளாதவருக்கோ பயன்படும் என்றால் நொடியும் யோசிக்காமல் அவற்றைப் பயன்படுத்துங்கள்.
 • இதன் பிறகு எஞ்சியுள்ள என் உடலை எரித்து அந்தச் சாம்பலை மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்க உபயோகியுங்கள்.
 • என்னைப் புதைக்க நினைத்தால் என் தவறுகளையும், குற்றம் குறைகளையும் மட்டுமே புதையுங்கள்.
 • என் பாவங்களை மன்னித்து என் ஆன்மாவைக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்.
 • என்னை நினைவில் கொள்ள நினைத்தால், மற்றவர்களுக்கு உபகாரம் செய்யுங்கள்.
 • நான் வேண்டியது அனைத்தும் நடந்துவிட்டால் நான் என்றென்றும் உயிர் வாழ்வேன்.
உதானம் செய்வதன் மூலம் மார்க்கண்டேயர்களாக இறவா வரம் பெற்றவர்களாக வாய்ப்பிருக்கிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கம்ப சூத்திரம்
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
குறுகிய செய்யுளில் விரிவான பொருளை அடக்கி இனிதாகத் தருவது சூத்திரம் எனப்படும். கம்பர் பெருமான், உய்த்துணரும் வகையில் அற்புதமாக அருளிய இராமகாதை போல் இனி யாரும் செய்ய முடியது என்பதாக உயர்வாகக் காட்டும் சொல் வழக்கு கம்ப விசித்திரம் என்பது கம்ப சூத்திரம் ஆனது என்றும் சொல்வர். தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் மட்டுமே, “என்ன பெரிய கம்ப சூத்திரமோ! நான் செய்து காட்டுகிறேன்!” என்று கூறமுடியும்
 
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
தசாங்கம்
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
 
பத்து வகையான வாசனைப் பொருள்களின் கலவையால் புகையூட்டப் பயன்படுவது தசாங்கம்.
கிராமத்தில் வாசனைப்பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்துவந்த பெரியவர்  வீரட்டானேச்வரருக்கு குங்கிலியப் புகையிட்டுத் தொண்டு செய்த கலய நாயனார் பற்றிக் கதை கதையாய்க் கூறுவார்.”தசாங்கம் இரண்டு பஞ்சாங்கம் அல்ல! சாம்பிராணி, குங்கிலியம், அகில் கட்டை, சந்தனக் கட்டை, தேவதாருக்கட்டை, வாசவேர், கஸ்தூரி மஞ்சள் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, பச்சிலை, பூவிதழ்கள் ஆகியவற்றைக் காயவைத்துப் பொடிசெய்த கலவை, தணலில் இட எழுகின்ற புகை தெய்வீகமானது”. நடுக் கூடத்தில் வாசனைப் பொருள்களைப் பரப்பிவைத்து இது என்னது என்பதை விளக்குவார். பேசும் போதே எங்கள் புருவத்தில் புனுகு தடவி ஜவ்வாதுப் பொட்டும் வைப்பார். அந்த வாசனை மூன்று நாளானாலும் போகாது. எங்கள் பாட்டி தவறாமல் அரகஜா, கோரோசனை, கஸ்தூரி எல்லாம் வாங்குவார். அதை நினைக்கும் போது நெஞ்சில் வாசனை கமழ்கிறதே! புனுகு பூனையிடமிருந்தும், கோரோசனை மாட்டினுடைய உடம்பின் சிமிழிலிருதும், கஸ்தூரி மானிடமிருந்தும் கிடக்கபெறுகின்றனவாம்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கயை காசிக்கு சென்று வருவோர்  எதையாவது  விட்டுவிடவேண்டும் என்பது என்ன?
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
 வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வரும்போதும் அனுபவம் முதிர்ச்சி பெற வேண்டும். இளம் பருவத்தைத் தொடர்ந்து மணம் புரிந்து குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு சந்ததியினரை வளர்த்து  முதுமையில் எல்லாவற்றையும் துறந்த பற்றற்ற வாழ்வு நமக்கு வீடு பேற்றைத் தரும் என்று கூறப்படுகிறது. நமது பாவப் பிணியகல காசி, கயை அங்கெல்லாம் போகிறோம். அங்கு போய் நம் பற்றுகள் அகன்று முதிர்ச்சி முழுமை பெற்றதன் அடையாளமாகப் பிடித்தவற்றில் ஒன்றையாவது விட்டு விட்டு வரச் சொல்கிறார்கள். பலர் காசிக்குப் போய் குடும்பத்தையே துறந்து சந்நியாசம் வாங்கிக் கொள்கிறார்கள். கல்லூரி மாணவனுக்கு நடை வண்டி தேவை இல்லை. அது போல முதல் கட்டத் தேவைகள் அடுத்த கட்டத்தில் இராது என்பதே இச்செயலின் விளக்கமாகும்.
 
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
இறை பக்தி, இறை உணர்வு
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
 
இறை பக்தி என்பது நம்மை விட மேலானதாக, நம்மையெல்லாம் இயக்கும் சக்தியின் பால் அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டு பணிவது. இறையுணர்வு என்பது இறைவனை உள்ளேயே தேடிப் பெறுகின்ற ஞானம். பக்தியின் பல படிகளைக் கடந்து வந்தால்தான் இறையுணர்வைப் பெறமுடியும். அதற்கு இறையருள் நிறைய வேண்டும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” சிவபுராணம்.
 
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அகலத்தில்கட்டி நீள இருத்தல்
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
சற்றுத் தொலைவில் வீடு கட்டி- நீடித்த உறவுடன் இருப்பது. சுற்றத்தாரிடம் இருந்து சற்று விலகியிருந்து வாழ்வது. அதுவே நீடித்த சுகம் தரும். கிட்டப் போனால் முட்டப் பகை!
 
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கர்பூரம் நாறுமோ?
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
 
பழனியில் ஒருநாள். அடிவாரத்தில் கடையில் பூஜைப் பொருள்கள் வாங்கும் போது  பட்டியலில் சூடன் ஐந்து ரூபாய், கர்ப்பூரம் ஐந்து ரூபாய் என்று காணப்பட்டது. இரண்டும் ஒன்றா வேறு வேறானவையா என்று வாங்குபவர் வினவினார்.
கர்பூரம் என்பது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் சேர்ந்த கலவை. கிழக்கு ஆசிய நாடுகளில் வளரும் தேவதாரு மரத்தின் பட்டை முதலியவற்றை  உலையிலிட்டுக் காய்ச்சும் போது எழுகின்ற ஆவி குளிரும் போது கிடைகின்ற பொருள். இது தீப ஆராதனை காட்டும் கர்பூரமாகும். எளிதில் பற்றிக் கொள்ளும். ஆவியாகும் தன்மையுண்டு.  திடப் பொருளிலிருந்து திரவ நிலை அடையாமலே ஆவியாகும் தன்மையுடையது. அதனை பதங்கமாதல் என்பர்.
 
பச்சைக் கர்ப்பூரம் என்பது கோதை நாச்சியார் கேட்டாரே சங்கினிடம், ” கர்ப்பூரம் நாறுமோ?!” அது! கர்ப்பூரத் தைலமரம் என்பது வேறு. இதன் நடுப்பகுதியில் கீறினால் மஞ்சள் நிறப் பால் வடியும். அதனை வாலைக்குழாயிலிட்டுக் காய்ச்சும் போது வேறொரு பாத்திரத்தில் வடிந்து கர்ப்பூரத் தைலமும், சிறு சிறு பாளங்களாக வாசனை மிக்க பச்சைக் கர்ப்பூரமும் கிடைக்கும். காய்ச்சும் வாலைக் குழாயின் அடியில் தங்கும் பாலின் கசடு குங்கிலியம் ஆகும். அதனைப் புகையிடலாம். திருப்பதி எம்பிரானின் முக வாயில் அழகு சேர்ப்பது பச்சை கர்ப்பூரம். முழுவதுமாக மேனி அழகைக் காணக் காட்டப்படுவது கர்ப்பூர ஆரத்தி.
ஓம். அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
 
 
 

 

Once the person is drawn to the Divine, the process of culturing or “Samskara” begins.  Without this, the

FREE Animations for your email - by IncrediMail! Click Here!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: