Skip to content

Veetha viththakar viyaasar

ஜூலை 6, 2009

வத வித்தகர் வியாசர்.

——————————————————————————–

வேத வித்தகர் வியாசர்.

(*)(*)(*)(*)(*)(*)(*)(*)

வேதங்களின் சாரத்தையும், உட்பொருளையும் வகுத்துத் தந்தவர் வியாச பகவான். அவருடைய வரலாற்றை அனைவரும்

அறிந்திருக்கவேண்டும். அவர் உலகியல், அரசியல், சமூக சீர்திருத்தம் போன்ற அனைத்து விவகாரங்களிலும்

ஈடுபட்டு, அவர் காலத்தில் மாபெரும் ராஜ தந்திரியாய், ஞானியாய், கர்ம வீரராய், தீர்க்கதரிசியாய்,

மக்கள் நலனில், மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்ட பேரறிஞராய்,ஞானிகளுக்கெல்லம் ஞானியாய்த்

திகழ்ந்திருக்கிறார்.

டாக்டர் கே. ஏம். முன்ஷி அவர்கள்கிருஷ்ணாவதாரம்என்ற தலைப்பில் ஏழு புத்தகங்களாக தொகுத்து

ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பகுதியான வேத வித்தகர் வியாசர் என்னும் நூலை அழகு தமிழில்

வடித்துக் கொடுத்துள்ளார் பெருமதிப்பிற்குரிய திருமதி அம்புஜம் அம்மாள் அவர்கள்.

இந்துக்களின் புனித நூலான வேதமும் அதன் வழிபாடும் பெருமளவிற்கு மறைந்து வருவதைக் கண்டு குஜராத்

மாநிலத்தில் பிறந்த பெருந்தகையாளர் 90 வயதுக்கு மேற்பட்டவர், கங்காதீஸ்வர நந்தா என்பவர் மனம் மிக

நொந்து வேதனை அடைந்தார். அவர் நான்கு வேதங்களையும் ஒன்று திரட்டி, அழகிய தேவ நாகரி லிபியில்

(எழுத்துருவில்) 22 கிலோ கிராம் எடையுள்ள ஒரு பெரிய புத்தகமாக, அதற்கென தனி அச்சகத்தில் அச்சிட்டு

வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் பிரதிகளைச் சுமந்து கொண்டு, நம் பாரத தேசம் முழுவதும் அவர் யாத்திரை

செய்தார்.

எந்த ஒரு ஆலயத்திலோ, வித்யா பீடத்திலோ , மடத்திலோ இந்த வேதப் புத்தகத்தை ஒரு சந்நிதியில்

வத்து, வேத பகவான் என்றழைத்து கிரமமாகப் பூஜை செய்வதில் பேரார்வம் காட்டப் படுகிறதோ அங்கு

அப்புத்தகத்தின் பிரதி ஒன்றை, தன் குருவின் ஆணைபடி இலவசமாக வழங்கி வந்தார். இவ்வாறு 108 பிரதிகளை

அவர் பாரதத்தில் வழங்கியுள்ளார்.

திருமுல்லை வாயிலில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி தேவி ஆலயத்திற்கும் அவர் வந்து ஒரு பிரதியை வழங்கியுள்ளார்.

வேத மாதாவை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, ஆலயத்தின் வாசக சாலையில், ஓர் அழகிய மண்டபத்தில்

பிரதிஷ்டை செய்து நாள் தோறும் வேத மந்திர கோஷத்துடன் அதற்கு பூஜை செய்து வருகிறார்கள்.

ஆரண்ய வாசிகளும், திரிகால ஞானிகளுமாகிய வசிஷ்டர், விச்வாமித்திரர், காஸ்யபர், அத்ரி, பிருகு,

ஆங்கிரஸ், ஜாபாலி போன்ற பண்டைய மகரிஷிகளின் சிதா காசத்தில் (உள்ளத்தில்) தாமே சுயம்புவாக

ஒலிவடிவத்தில் தோன்றியவை வேத மந்திரங்கள். அவற்றை ஸ்ருதி, லயம், உச்சரிப்பு தவறாது முறைப்படி ஓதி,

தம் மாணவர்களுக்கும் ஓதுவித்து வந்தனர் மகரிஷிகள். இவ்வாறு பன்னெடுங்காலமாய் வாழையடி வாழையாய் வழங்கிவந்த

வேத மந்திரங்களை நான்கு பிரிவுகளாகப் பகுத்துத் தொகுத்து உருவாக்கியவர் முனி பராசரரின் மைந்தரான

வியாசர் என்னும் மகா புருஷராவார்.

வேத மந்திரங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்கு வெறும் வடமொழிப் புலமை மட்டும் போதாது.

பண்டைக் காலம் தொட்டு இன்றைய நாள்வரையில் அவற் றிற்குப் பல வியாக்கியானங்கள் வெளிவந்துள்ளன வென்றாலும்

அவற்றைப் படித்து, ஒருவன் வேதத்தின் சாரத்தை உணர்ந்துகொள்ள இயலாது. வேதத்தின் சாரத்தை உலகிற்கு வெளிப்

படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை பதினெண் புராணங்கள். புராணங்க¨ளைப் படிக்காத ஒருவன் வேதங்களில் கருத்தைச்

செலுத்த முற்படுவானாயின்,”ஐயோ! இவன் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளப் போகிறானேஎன்று கவலைப்

படுவாளாம் வேத மாதா. எனவே புராணங்கள் தாம் வேதங்களின் உண்மையான விளக்கங்கள் என்று கூறவேண்டும். அந்தப்

புராணங்களை வழங்கியவரும் வேத வியாசர்தான்.

அந்தப் புராணங்கள் இல்லாவிட்டால் இராமனைப் பற்றியோ, கிருஷ்ணனைப் பற்றியோ, முருகனைப் பற்றியோ,

கணபதியைப் பற்றியோ, அம்பிகையைப்பற்றியோ இன்றுவரையில் தெரிந்திருக்க நியாயமில்லை. சிவனையும்,

விஷ்ணுவையும் பற்றி வேதங்களில் ஆங்காங்கே சில செய்திகள் காணப்படுகின்றன என்றாலும், அவர்களின் திவ்ய

சரித்திரங்களை நாம் புராணங்களின் வாயிலாகத்தான் அறியமுடிகிறது. வேதங்களில் போற்றபடுகிற பல

தேவதைகளுக்கு இன்று ஆலயங்கள் இல்லை. அதன் சக்தி வாய்ந்தபுராணங்களின் வாயிலாகவே நாட்டிலே இன்று

காட்சியளிக்கும் ஆலயங்களும், அதன் சக்தி வாய்ந்த வடிவங்களும் முறையான தெய்வ வழிபாடுகளும் நிலை நிறுத்தப்

பட்டிருக்கின்றன. மேலும் சமூக சீர்திருத்தங்கள், அரசியல் போன்ற உலக வியவகாரங்களிலும் வியாசர் தம்

காலத்தில் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியிருக்கிறார். ஒரு பற்றற்ற ஞானியாக இருப்பினும், அளவற்ற

மனிதாபிமனம் உடையவராய் அன்பே உருவாய், ஒரு மாபெரும் ராஜ தந்திரியாய் தீர்க்கதரிசியாய் நாட்டின்

நலனில் பெரிதும் அக்கரையும் அனுபவமும் உடையவராய் அவர் காட்சிய ளித்தார். பல அரசியல் சிக்கல்களையும்,

கல்விமான்களிடையே நிலவிய தீராத சிக்கல்களையும் அவர் பக்குவமாகத் தீர்த்து வைத்திருக்கிறார்.

எனவே அந்த மகானின் சரித்திரத்தை வலையேற்றி வெளியிட விழைகிறேன். எல்லாம் வல்ல இறைவன்

சக்தியளிக்க வேண்டும்.

பணி பெரியது. சக்தி மிகவும் குறைவு.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

அன்புடன் வெ.சுப்பிரமணியன், ஓம்.

FREE Animations for your email - by IncrediMail! Click Here!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: