Skip to content

Nirvana shatkam Adhi Sankarar

ஜூலை 23, 2009«·´`·.(*·..¸(`·.¸ ¸.·´)¸.·*).·´`·»
«·´¨*·.¸¸.« ·^^~.   நிர்வாண ஷட்கம் 
. .~^^·».¸¸.·*¨`·»

«·´`·.(¸.·´(¸.·* *·.¸)`·.¸).·´`·»


ஆதிசங்கரர் அருளிய

விடுதலை ஆற்றுப்படை

(நிர்வாண ஷட்கம்)

தமிழில்: பத்மன்

ஆத்ம அறிவு பெற்றவன், இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அதாவது வாழ்கின்றபோதிலேயே, மீண்டும் பிறவிக்குக் காரணமாக அமைகின்ற அனைத்துப் பற்றுகளிலிருந்தும் அனைத்துத் தளைகளிலிருந்தும் அவன் விடுதலை பெறுகிறான். இதைத்தான் மகாகவி பாரதி விட்டு விடுதலையாகி நிற்போம் என்று மொழிந்துள்ளார். அவ்வாறு மனிதனுக்கு, மோட்சம் (விடுதலை) அடைவதற்கான அறிவை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக (வழிபடுத்துவதாக) ஸ்ரீ ஆதிசங்கரர் திருவாய் மலர்ந்தருளிய ஸ்லோகமே நிர்வாண ஷட்கம்.

1

மனோபுத்தி அஹங்கார சித்தானி நாஹம்

ஸ்ரோத்ரஜிஹ்வே க்ராணநேத்ரே/

வ்யோமபூமிர்ந தேஜோ வாயு:

சிதானந்தரூப: சிவோஹம் சிவோஹம்//

மனம்புத்தி தன்னுணர் வெண்ணம் நானல்ல

கேள்விசுவை முகர்வு பார்வையும் நானல்ல

விண்ணோ புவியோ தீயோவளி யோவல்ல

அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

நான் என்பது, உண்மையில், மனமோ, புத்தியோ, அஹங்காரம் எனப்படும் தன்னுணர்வோ, கேட்பதற்கு உதவும் செவி (ஸ்ரோத்ரம்), சுவையை அறியச் செய்யும் நாக்கு (ஜிஹ்வா), வாசனையை முகர்வதற்குப் பயன்படும் மூக்கு (க்ராணம்), பொருட்களைக் காண வைக்கும் கண் (நேத்ரம்) ஆகிய உணர்வுக் கருவிகளோ, அவற்றுக்கு அடிப்படையான ஐம்புலன் அறிவோ, ஐம்புலன் அறிவுக்குக் காரணமான ஆகாயம், பூமி, தீ, காற்று, நீர் ஆகிய ஐம்பெரும்பூதங்களோ அல்ல. ஞானம் (அறிவு) மற்றும் ஆனந்தமய வடிவான சிவமே நான். அதாவது இந்த உடலுக்குள் புலப்படும் அந்த சிவத்தின் பிரதிபலிப்பே நான்.

2

ப்ராணசங்க்ஞோ நவை பஞ்சவாயுர்

நவா ஸப்ததாதுர்ந வா பஞ்சகோச:/

வாக்பாணிபாதம் சோபஸ்தபாயூ

சிதானந்தரூப: சிவோஹம் சிவோஹம்//

மூச்சுக் காற்றுமல்ல ஐந்து வளியுமல்ல

மூலம் ஏழுமல்ல ஐந்து படிவுமல்ல

பேச்சுறுப் பல்லகைகால் பிறப்புறுப் புமல்ல

அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

பிராணனாகத் திகழும் மூச்சுக்காற்றோ, உடலின் இயக்கத்துக்குக் காரணமாக விளங்கும் அபானன், உதானன், சமானன் உள்ளிட்ட 5 வாயுக்களோ, உடல் அமைவதற்குக் காரணமான 7 தாதுக்களோ, உடலுக்குள் அமைந்த அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் உள்ளிட்ட 5 படிமங்களோ, பேச்சுக் கருவியான வாய் (வாக்), பொருட்களைப் பற்ற உதவும் கை (பாணி), நடக்க உதவும் கால் (பாதம்), மலஜலம் வெளியேறுவதற்கும் உயிர் உற்பத்திக்கும் உதவும் பிறப்புறப்பு (உபஸ்தபாயு) ஆகிய கருவிகளோநான்” அல்ல. (இவற்றின் இயக்கத்துக்குக் காரணமான) அறிவானந்த வடிவாகிய சிவமே நான்.

3

மே த்வேஷராகோ மே லோபமோஹௌ

மதோ நைவ மே நைவ மாத்ஸ்ர்யபாவ:/

தர்மோ சார்த்தோ காமோ மோக்ஷ:

சிதானந்தரூப: சிவோஹம் சிவோஹம்//

விருப்புவெறுப் பில்லை பொறாமை மோகமில்லை

புகழ்பெருமை யில்லை பகையுணர் வுமில்லை

அறமில்லை பொருளில்லை காமமில்லை வீடுமில்லை

அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

நான் யார் என்பதை அறிந்து கொண்டதால் எனக்கு எதன் மீதும் விருப்போ அல்லது வெறுப்போ, அடுத்தவர் மீது பொறாமையோ, ஒன்றை அடைய வேண்டும் என்ற மோகமோ, புகழ்ச்சியால் கிடைக்கின்ற பெருமையோ, பிறர் மீது பகை உணர்ச்சியோ எதுவுமில்லை. அதேபோல், மனிதனின் இலக்காக உள்ள 4 புருஷார்த்தங்களான (வாழ்வியல் லட்சியங்களான) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) மற்றும் வீடுபேறு (மோட்சம்) ஆகியவையும் எனக்கு இல்லை. ஏனெனில் இவற்றை எல்லாம் கடந்து நிற்கும் அறிவானந்த வடிவாகிய சிவமே நான் என்பதை அறிந்துகொண்டேன்.

4

புண்யம் பாபம் ஸொக்யம் துக்கம்

மந்த்ரோ தீர்த்த வேதா யக்ஞ:/

அஹம் போஜனம் நைவ போஜ்யம் போக்தா

சிதானந்தரூப: சிவோஹம் சிவோஹம்//

பாவமில்லை புண்யமில்லை இன்பமில்லை துன்பமில்லை

மந்த்ரமில்லை தீர்த்தமில்லை வேதமில்லை வேள்வியில்லை

உண்பதில்லை உணர்வுமில்லை உண்பவனும் நானில்லை

அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

நான் யார் என்பது தெளிவானதால், செயல்களால் கிடைக்கக் கூடிய பலன்களான பாவம், புண்ணியம்; எண்ணத்தால் உருவாகக் கூடிய இன்பம், துன்பம் ஆகியவை எனக்கு இல்லை. மந்திர வழிபாடுகள், தீர்த்த நீராடல்கள், வேதம் ஓதுதல், வேள்விச் சடங்குகளை நடத்துதல் ஆகிய அனைத்தும் ஆன்மாவின் கடைத்தேற்றத்தைக் கருதியே நடத்தப்படுகின்றன. அந்த ஆன்மாவாகிய நான் யார் என்பதை அறிந்துகொண்டதால், எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும் பற்றற்ற எனக்கு இவையெல்லாம் தேவை அல்ல. உண்ணுகின்ற செயல், அதற்குப் பயன்படும் உணவு, உணவை உண்பவன் ஆகியவை எல்லாம் நான் அல்ல. இங்கு உள்ளர்த்தமாகக் கூறப்படுவது யாதெனில், உணவு உண்பது என்பது வாழ்க்கையை வாழ்கின்ற செயலையும், உணவு என்பது அனுபவிக்கின்ற வாழ்க்கையையும், உண்பவன் என்பது அந்த வாழ்க்கை அனுபவத்தை உணர்கின்ற உயிரினத்தையும் உணர்த்தி நிற்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து நிற்கும் அறிவானந்த வடிவாகிய சிவமே நான்.

 

 

 

5

ம்ருத்யுர்ந ங்கா மே ஜாதிபேத:

பிதா நைவ மே நைவ மாதா ஜன்ம/

பந்துர்ந மித்ரம் குருர்நைவ சிஷ்ய:

சிதானந்தரூப: சிவோஹம் சிவோஹம்//

சாவுமில்லை ஐயமில்லை எனக்குசாதி பேதமில்லை

தாயுமில்லை தந்தையிலை நான்பிறப் பதில்லை

உறவுமில்லை நட்புமில்லை குருவுமில்லை சீடனில்லை

அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

நான் யார் என்பதை அறிந்துகொண்டதால் எனக்கு சாவு இல்லை. உடல்தான் மடிகிறதே தவிர, ஆன்மா மடிவதில்லை. உடலுக்குள் உறைவது சிவமே என்பதை உணர்ந்துகொள்வதால் மரணம் எனக்கு அர்த்தமற்றது. நான் யார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் குழப்பமும் இல்லை. உயிரினங்களைப் பிரித்து வகைப்படுத்தும் எவ்வித சாதி பேதமும் எனக்கு இல்லை. ஏனெனில், மனிதர்கள் மட்டுமின்றி, எல்லா உயிரினங்களிலும் பிரதிபலிப்பது அந்த சிவமேதான். தாய், தந்தை எனக்கு இல்லை. உடல் வடிவத்துக்குத்தான் அதனை உற்பத்தி செய்த தாய், தந்தை என்பவர்கள் உண்டு. அதனுள் உறைந்திருக்கும் ஆன்மாவோ (இறைவனின் பிரதிபலிப்போ) பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டது. இதுபோல் நண்பன், குரு, சிஷ்யன் என்ற உறவுமுறைகள் எல்லாம் எனக்கு இல்லை. ஏனெனி¢ல் எல்லா உடலுக்குள்ளும் உறைவது அந்த சிவமே ஆதலால் இந்தப் பாகுபாடுகள் எல்லாம் எனக்கு அர்த்தமற்றவை. அத்தகு அறிவானந்த வடிவாகிய சிவமே நான்.

 

6

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ

விபுத்வாச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்ரியாணம்/

சா$ஸங்கதம் நைவ முக்திர்ந மேய:

சிதானந்தரூப: சிவோஹம் சிவோஹம்//

நான்மாறு படுவதில்லை உருவமே துமில்லை

எங்கும்பரந் துள்ளநான் எதிலுமொட் டுவதில்லை

விடுதலை யென்பதில்லை விழைந்தறி வதுமில்லை

அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

என்னுள் உறைவது அந்த சிவமே. ஆதலால் நான் எவ்விதத்திலும் மாறுபடுவதில்லை (ஆன்மாவைத் தாங்கி நிற்கும் உடலுக்குத்தான் மாறுபாடுகள்). எவ்வித பாகுபாடும், உருவமும் எனக்கு இல்லை. நான் சிவஸ்வரூபம் என்பதை அறிந்துகொண்டதால் நான் எங்கும் வியாபித்து நிற்கிறேன். எவ்வித கர்ம பலன்களும் என்னை ஒட்டுவதில்லை. அந்த சிவமே எங்கும் நிறைந்திருப்பதால் எனக்கு உண்மையில் மோட்சம் என்பது எதுவுமில்லை. நான் முயன்று அறியக் கூடியது என்று எதுவும் ¢ல்லை. ஏனெனில், இயல்பிலேயே அறிவும், எல்லாவற்றிலிருந்தும் விடுதலையாகி நிற்கும் ஆனந்தமும் கொண்ட சிவமே நான்.

சிவமயம்.

நூலாசிரியர் முகவரி:

பத்மன் (நா. அனந்த பத்மநாபன்),

பி.ஜி. மாஸ்கேசில்

46, திரௌபதி அம்மன் கோவில் தெரு,

உள்ளகரம், சென்னை – 600 091.

தொலைபேசி : 044-65349635

செல்பேசி : 9941890141

-=-=-=-=-=ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம்

 

FREE Animations for your email - by IncrediMail! Click Here!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: