Skip to content

Re: [MinTamil] Re: இவ்வாரப் பூச்செண்டு

செப்ரெம்பர் 21, 2009

ஓம்.
நல்லதொரு கமலமலரும் நினைவினில் சௌ.கமலமவர்கள் இதனைப் படைத்துள்ளார்.

சான்றோரின் செயலிலும் சிறிது குறையிருக்கும், திருவிளக்கின் அடியில் ஒரு நிழல் அமைவதைப் போன்று அந்த சாரும் டீச்சரும். அதுவும் ஒரு வழிகாட்டிதான்.
 கவிப் பேரரசு வைரமுத்து திருக்குறளில் எங்காவது பிழை காணப்படுகிறதா என ஆய்ந்துபார்க்கத் துவங்கி  குறையொன்றும் இல்லை கோவிந்தா என்றாலும் (பாடல் அறிஞர் ராஜாஜி எழுதியது) திருவள்ளுவர் அவருக்கு உற்ற ஆசானாகிவிட்டர்.குறள் உள்ளங்கை நெல்லிக்கனியென்று  கைவந்து அவருக்கு பயன்படுகிறது.

 1961-இல் தே.கல்லுப்பட்டி (மதுரையில் திருமங்கலம் அருகில்) ஊரக  வளர்ச்சி மையத்தில் நான் எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அந்த மையத்தின் முதல்வர் திரு குழந்தைசாமி என்பவர் கிராமசேவக் பயிற்சி பெருவோரின் தலையாய பொறுப்புகளையும் சிந்தனைகளையும் உருக்கமாக் நேர்த்தியாக வடித்து ஒரு நாடகமாக எழுதிஅந்த நாடகம் பலமுறை அரங்கேறி பல கிராமங்களுக்கும் சென்று சிறப்பு பெற்றது.
அந்த நாடகத்தின் பிராம்ப்டர் பொறுப்பினை ஏற்குமாறு நான் அழைக்கப்பட்டேன். அதற்காக நான் பலமுறை அந்த நாடகக் குழுவுடன் பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருண்டிருந்தேன்.

“வழிகாட்டி”. என்ற பெயரில் அந்த நாடகம் உருவாக்கப் பட்டிருந்தது. ‘கிராம சேவக்’ பயிற்சியின் நோக்கம், செயற்பாடு, அரசின் கொள்கைகள் ஆகிய வற்றை ஈராண்டு பயிற்சின் சாராம்சத்தை அது முன்னிறுத்தும்.

வையூர் என்ற கிராமத்தில் ஒரு கோயில் விழாவிறல் ஒருநாள் இந்த நாடகம் நடத்தப்படுவதாக அமர்க்களப்பட்டது.
பெருந் திரள் கூடும் .ஊரார் மதிப்பை ஏற்று  குழு அங்கே சென்றது.

கல்லுப்பட்டியிலிருந்து ஒரு தொ.பேசித் தகவல் வந்தது. முக்கிய வேடம் ஏற்கும் கருணாவின் அன்னை உடல்நலம் மோசமாகி உடன் அவர் செல்லவேண்டும் என்று தகவல்.
நாடகம் முடிந்து அவர் கல்லுப்படி திரும்பி மதுரைசென்று தன் சொந்த ஊருக்குத் திரும்புவது என்பது நடவாத காரியம்.
வந்த  வேனில் அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு முதல்வருக்குத் தகவல் சொன்னவுடன் நாடகத்தை நிறுத்திவிடலாமா என்று கேட்டோம்.

 அவருக்கு மிகவும் மன வருத்தம் என்றாலும் செய்வதில் எது சிறந்தது? என்று சற்று யோசித்தார். என்னை அழைத்து வேறு யாராவது முழுவசனமும் அறிந்தவர்களை வைத்து நாடக நிகழ்ச்சியை அன்று முடித்துவிடமுடியுமா என்பதுபற்றி பேசினோம்.
தலைமை இடத்தைவிட்டு பலகல் தொலைவில்  குழு அரிதாரம் பூசிக்கொள்ளும் அவசர நேரம். ஏகமனதாக பிராம்ப்டரே அந்த முழுக்கதையும் தெரிந்தவர் என்று ஒரு மாலையைப் போட்டு வெட்டகொண்டுசெல்லும் பலிகிடாவாக என்னை ஆக்கி அரிதாரமும் பூசி விட்டனர்.
பலமுறை ஒத்திகை நடத்திப் பார்த்த என்னால் அன்று’வழிகாட்டி’ நாடகம் இனிதே அரங்கில் அற்புதமாக நடைபெற்றது.
எதிர் வரிசையில் அமர்ந்த முதல்வர் மதிப்பிற்குறிய திரு குழந்தைசாமி அவர்கள் முதலில் வெகுவாகப் பாராட்டிவிட்டு ஒரு குறை சொன்னார்.” பின் புலத்தில் சிரம உழைப்பில் உருவான பாரத மாதாவை பாதிக்குமேல் முன்புறமாக நின்று மறைத்துவிட்டாயே” என்றார்.

நான் கூறினேன்,” ஐயா! நான் கீழே விழவிருந்த பாரத மாதாவின் கனமான திரைச்சீலைப்படத்தின் அடிச் சட்டத்தை என் இடதுகையினால் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தேன். வசனமும் பேசிக்கொண்டே இவ்வளவுதான் ஒதுங்கி நிற்கமுடிந்தது” என்பதை விளக்கிச் சொன்னதும் மேலும் வியப்புக்கு உள்ளானார்.

நினைவைக் கிளறிய அன்புமகள் கமலம் அம்மைக்கு நன்றி!
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்

2009/9/21 annamalai sugumaran <amirthamintl@gmail.com>

8  மணிவரை காத்திருகள் !

2009/9/21 Kamala Devi <saahithyam@yahoo.com.sg>
வாழ்த்திருக்கட்டும் உடல் நலமாச்சா? உடனே மூலிகை பற்றி பேசுவோம் வாருங்கள்
 நிறைய தகவல்கள் உண்டு.
கமலம்


From: annamalai sugumaran <amirthamintl@gmail.com>
To: mintamil@googlegroups.com
Sent: Monday, 21 September 2009 8:46:34
Subject: [MinTamil] Re: இவ்வாரப் பூச்செண்டு

ஆகா!  பேஷ் பேஷ் ! ரொம்ம நல்லாருக்கு !           (   உபயம் : நரசுஸ் காபி விளம்பரம் )
தேனீயாருக்கு வாழ்த்துக்கள் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன் 

2009/9/21 Kamala Devi <saahithyam@yahoo.com.sg>


                                                                  [ குங்குமப்பூவே-கொஞ்சும் புறாவே! ]

இவள் நாடகாசிரியரானதே சற்றும் எதிர்பாராத விபத்து.உலகிலேயே பிடிக்காத ஒரு சமாச்சாரம் உண்டென்றால் அது
நாடகம்தான் என்பது,குழந்தைக் காலத்தில் இவளுள் ஊறிப்போன ஒரு மாயை.பின் எப்படி இவள் நாடகாசிரியரானாள்?
wait, அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?[ஞானே படபடப்பு மாதங்கி, இதில் நீங்களும் படபடத்தால் “காச் மூச் கபர்தார்” ,கேஸ்தான்,பின் என்னாகும்? அந்தர்தியானமாகி விடுவேனாக்கும்]so,பொறுமை, பொறுமை, o.k.
மேடை நாடகத்துறையை விட்டு முற்றாக விலகிவிட்டாலும் கூட, இன்றும் வானொலியிலிருந்து சிறப்பு நாடகங்கள் எழுத அழைப்புவரும்போது,மிக சந்தோஷமாக எழுதிக்கொடுக்க முடிகிறது.ஒன்றுமட்டும்நிச்சயம்.அறுதியிட்டுக் கூறமுடியும்.
எழுத்துதான் இவள் இலக்கு.அப்படித்தான் இவளும் நம்புகிறாள். அப்படியானால் அன்று நடந்தது என்ன?
என்னதான் நடந்ததாம்?
                     [secondary two]அதாவது உயர்நிலை 2ம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோது,நெற்றியில் கோபி சந்தனக்குறியும், இரட்டைச்சடையுமாக,பள்ளிச்சீருடையில் , அந்தப் பெண்ணுக்கு பெரிய லட்சியங்களெல்லாம் கிடையாது.ஆனால் பள்ளி மிகவும் பிடித்தமான இடம். ஆனால் அந்த ஆண்டு கலைநிகழ்ச்சிக்கு, ஒரு இந்திய நடனத்துக்கு, இவளும் ஷேகரும் தேர்வு செய்யப்பட்டபோது, இருவருமே தேள் கொட்டினாற்போல் துடித்துப்போனார்கள். இவளின்  நம்பர் ஒன் எனிமி ஷேகர்.
அவனுக்கும் அப்படியே. 2 எனிமிகளும் எங்காவது டான்ஸ் ஆடுவார்களா சார்? ஆனால் அந்த அருந்தவ மகா புண்ணியத்தை செய்தவர்கள் மிஸ்டர் வெங்கா. வும் மிஸ் பாப்பாத்தியும் தான்.ஏனென்றால் அவர்கள் தான் கலை நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்கள்.மிஸடர் வெங்கா ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டே வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்,
ஆங்கிலப் புகழ்பெற்ற வெளிநாட்டு இதழ்களில் எல்லாம் அவரது கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தது.அற்புதமான
அவரது எழுத்தாற்றலில் பள்ளியே பெருமை கொண்டிருந்தது.தமிழ்நேசனில் இவளது மேனாட்டுத்தமிழறிஞர் கட்டுரை வெளிவந்த அன்று வகுப்புக்கேத் தேடிவந்து, who is kamaladevi here? என்று  mr.ngகிடம்கேட்டுஅவளை மனதாரப் பாராட்டியவர்.
ஆனால் அவர் பேசும் தமிழ் வேறுமாதிரி. ” ரொம்ப நன்னா எழுதறே” என்பார். “நன்றாக” என்று சொல்ல மட்டார்.இப்படி பல சொற்கள் அவர் பேசும்போது திருத்தணும் என்று யோசித்ததுண்டு.ஆனால் தைரியம் தான் வரவில்லை.
அதை விட கோபமூட்டும் கொடுமை ஒன்றையும் அவர் செய்தார் .அவளைப் பார்க்கும்போதெல்லாம் “புதுசா என்ன எழுதிண்டிருக்கே மலயாளத்துக்குட்டி,” என்பார்.    பாருங்கள்.!
அப்பொழுது இவளுக்கு 14 வயது.உயிரினும் இனிய தோழி tan siew kimமோடு நடந்து வரும்போது, இவள் மலையாளியே என்றாலும் கூட, சீனத்தோழியின் முன்னால், மலையாளத்துக்குட்டி, என்றழைப்பது எந்த வகையில் நியாயம்?
பிறகு இவர் என்ன படித்து, என்ன கிழித்து, என்ன லட்ஷணம்? இந்த லட்ஷணத்தில்தான் 2 எனிமிகளை தமிழ் டான்ஸுக்கு
தேர்வு செய்தார் வெங்கா சார்!  என்ன பாடல் தெரியுமா? சந்திரபாபு பாடிய,
“குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே, தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே?”என்ற பாடல்தான்.
அப்பொழுதே அது பழைய பாடல்தான்,என்றாலும் மிஸ்டர் வெங்காவுக்கு மிகவும் பிடித்தமான பாடலாம்.வகுப்பு முடிந்து
ஒரு மணி நேரம்  ஒத்திகை நடக்கும்.மிஸ்.பப்பாத்தி ஸ்டெப்ஸ் வைத்து ஆடவும் வளையவும் எல்லாம்,ஷேகருக்கும் இவளுக்கும்  கற்றுக் கொடுத்தார். 3வது நாள் மிஸ்டர் வெங்காவும் கற்றுக்கொடுப்பதில் இணைந்து கொண்டார்.
ஒரு கட்டத்தில்,
“சந்தனப்பொட்டும் தாவணிக்கட்டும் சலசலக்கையிலே,என்மனம் தொட்டு ஏக்கமும் தொட்டு என்னமோ பண்ணுதடி!”
என்ற வரிகளுக்கு, வெங்கா சார் டீச்சரின் பின்னால் நின்றுகொண்டு அவரின் இடுப்பை பிடித்துக்கொள்ள, டீச்சர் அப்படியே அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, போக்கிரி போக்கிரி ராஜா, போதுமே போதுமே ராஜ்ஜாஆ, என்ற வரிகளில் ,
மெய்ம்மறந்து ஆடிய காட்சி கண்கொள்ளா காட்சி. அடுத்த கணம் இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.இவள் ஷேகரைப்பார்க்க ஷேகரும் இவளைப்பார்த்தபோது, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது,சண்டை, பகை எல்லாமே மறந்துபோய் ஷேகர் இவளிடம் மெல்லிய குரலில் கூறினான்.they are in love!
இவள் அதிர்ந்து போனாள்.வெங்கா சார் மணமானவர்.ஒரு சின்னக்குழந்தை கூட உண்டு.எப்படி மிஸ் பாப்பாத்தியை
இவர் லவ் பண்ணலாம்.???அப்பாவி வசந்தன் சாரை வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் இதுதானா? தக்‌ஷணமே
சாரையும் டீச்சரையும் இவளுக்கு பிடிக்காமல்  போய்விட்டது.
ப்ளிட்ஸ் வைத்த ஸ்கர்ட்டும், வெள்ளை பஃப் வைத்த ப்ளவுஸுமாய் , டீச்சர் சுழன்றுஆடிக்கொண்டே மதிமயங்கி,
அப்படி ஒரு உல்லாசமாக ஆடுவார்.வெங்கா சார் அவர் கைகளால் சுழற்றிவிட, மீண்டும் டீச்சர் சாரின் கைகளில் சாய்வார்.
குப்பென்று கோபமும் வெட்கமுமாய் இவள் ஷேகரிடம் கூறினாள்.
“நீ ஒருபோதும் என் இடுப்பைத்தொடக்கூடாது!” பட்டென்று ஷேகரும் கூறினான்.”நீயும் என் நெஞ்சில்  சாயக்கூடாது.”
பின் என்ன ?we are good students., நாங்களொன்றும் bad students அல்ல.ஆனால் டீச்சரின் ஸ்டெப்ஸ்களிலிருந்து தப்புவதெப்படி?
அந்தக் கவலையே வேண்டியிருக்கலை.பாடல் ஆடிக்காட்டியதும் ,டீச்சரும் சாரும்,சீனியர் ஸ்டூடண்ட்சிடம்
இவர்களை விட்டுவிட்டு காணாமல் போய் விடுவார்கள்.ஒவ்வொரு நாளும் டீச்சரும் சாரும் எல்லையில்லா மகிழ்வோடு
  [தங்கமே உன்னைக்கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே”என்ற வரிகட்குஆடும்போது  அவர்கள் முகத்தில் மின்னும்  பரவசத்தை மட்டும் வெட்கம் வெட்கமாய்  ரசித்ததை மறக்கவே முடியவில்லை.]
பாடலின் ஒவ்வொரு வரியையும் தமிழாசிரியரிடம் கேட்டுக்கேட்டு தெளிவுபெற்று,எப்படியோ ஒருமாதிரி,
ஷேகரும் இவளுமே நடனத்தை வடிவமைத்தார்கள். சத்யமாயிட்டும் இடுப்பும் நெஞ்சும் தொடப்படவில்லை.
நிகழ்ச்சி அன்று  இவர்களின் குங்குமப்பூவே  நடனத்துக்கு 2ம் பரிசு கிடைத்தபோது, “மலையாளத்துக்குட்டி, பள்ளி மானத்தைக்காப்பாற்றிவிட்டாயே” என்று வெங்கா சார் தேடி வந்து பாராட்டியபோது, ஷேகர் முகத்தித் திருப்பிக்கொண்டான்.
பின்னாளில் இவள் நாடகப் பயிற்சியிலிருந்த போதுதான், அன்று theatrical signல் மிக முக்கியமான  dramatic textல் ,
formal presentaation codeஐ த்தான், அது பற்றிய துளி அறிவு கூட இல்லாமலே, ஷேகரும் இவளும் அந்த சின்ன வயதிலேயே
வடிவமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது  ஏனோ இன்றும் பெருமிதமே.
கலையறிவு என்பது எங்கிருந்து வருகிறது?ஒவ்வொரு இலக்கியவாதியுமே அடிப்படயில் கலைஞனே>ஆனால் அந்தக்கலைஞர்களும் உணர்வால் குழந்தைகளே?!!!மனதால் குழந்தைகளே,வாழ்வியல் பார்வையில்,அதீத காதலோடு
மானுட நேசத்தை கொண்டாடும் அபூர்வர்களே?அப்படி எத்தனையோ பேர் நம்மிடையே உண்டு.அப்படி ஒரு கலைஞனை
இன்று நாமும் தான் கொண்டாடுவோமே!
வேறு யார் ? நமது தமிழ்த் தேனீ ஏட்டன் தான்.
http://thamizthenee.blogspot.com
இன்றைய பூச்செண்டை மின்தமிழ்  சார்பாக தமிழ்த்தேனீ அவர்களுக்கு கொடுப்பதில்  அகம் மகிழ்கிறேன்
கமலம்.


New Email addresses available on Yahoo!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !


Importing contacts has never been easier..
Bring your friends over to Yahoo! Mail today!


A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

–~–~———~–~—-~————~——-~–~—-~
 “Tamil in Digital Media” group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: