Skip to content

செய்தி – உதவித் தொகை வழங���கும் விழா

ஒக்ரோபர் 19, 2009

அன்பிற்குரிய என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,

 

‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற வாக்கியத்திற்கு பொருள் அமைத்தது நமது டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை. வாருங்கள் நண்பர்களே!!! இந்நிகழ்ச்சிக்கு முழு ஆதரவும், தனது கடின உழைப்பையும் அளித்து நிகழ்ச்சியை திறம்பட செயல்படுத்தி தந்த நமது அறக்கட்டளை நிர்வாகி திரு. நடராஜன் அவர்களுக்கு  நமது முதற்கண் நன்றியை  கூறிக்கொள்வோம். பல உதவிக்கரங்களால் அளிக்கப்பட்ட சிறு சிறு தொகைகள் 70,000 ரூபாய் என்ற பெருந்தொகையாய் நமது அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் சேர்ந்தது.

 

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அற்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவுமான அக்டோபர் 11ம் தேதி 2009 அன்று, 53 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 70,000 ரூபாய் உதவித்தொகையும், 100 ஆங்கில வழி தமிழ் அகராதியும் இலவசமாக வழங்கப்பட்டது. த‌மிழ்நாட்டின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் இருந்து மாண‌வ‌ மாண‌விக‌ள் இவ்உதவித் தொகையை பெற‌ வ‌ந்திருந்த‌ன‌ர்.

 

நிகழ்ச்சி நிரல்:

நிகழ்ச்சியினை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம். “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கம்பீரத்தை தனது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுத்தி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர்(வர்ணனையாளர்) திரு. இராமதாஸ் விரிவுரையாளர், தேசிய கல்லூரி திருச்சி. இவரின் வார்த்தையில் கம்பீரத்தோடு எதுகை மோனையை சேர்த்து கேட்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்திடும் திறம் கொண்டவருமாவார்.

 

க‌ல்வி என்ற ஒளி பிர‌காச‌த்தை மாண‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கும் வ‌கையில் கர்நாடக இசை பாடகி க‌ர்ணா ச‌ந்திர‌சேக‌ர் அம்மா அவ‌ர்க‌ளால் குத்துவிள‌க்கேற்றி விழா இனிதே துவ‌ங்கியது. விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வருக வருக என வரவேற்றார் அறக்கட்டளை அறங்காவலர் கிருஷ்ண பிரியா அவர்கள்.

 

உயர்திரு. சந்திரசேகர், வருமான வரித்துறை துணை இயக்குனர், திருச்சி மாவட்டம் ஐயா அவர்கள் ஊக்கத்தொகை வழங்கி விழாவை சிற‌ப்பித்தார். இவர் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் கல்வியின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் இணைத்து மாணவர்களின் செவிக்கு உணவளித்தார். இவர் செவிக்கு மட்டும் இலவச உணவளிக்கவில்லை. இந்த விழாவிற்கு வந்திருந்த 250 மக்களின் வயிற்றிற்க்கும் உணவளித்தார் இலவசமாக!!! எதிர்பாராத காரணத்தினால் நமது நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் ஐயா அவர்களால் பங்கேற்க முடியவில்லை. அவரது சார்பாக முன்னால் திருச்சி மாவ‌ட்ட‌ முன்னால் (பொறுப்பு) க‌ல்வி அலுவ‌ல‌ர் உயர்திரு.

ம‌னோகரன் ஐயா அவ‌ர்க‌ள் முன்னிலை வ‌கித்து மாண‌வ‌ர்க‌ளுக்கு இலவச புத்த‌கங்க‌ளை வழ‌ங்கினார். அறக்க‌ட்டளையின் அறங்காவலர் திரு. நடராஜன் அவர்கள் கடந்த வருடம் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி பட்டியலை வாசித்து வெளியிட்டார்.

 

விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவது, எவ்வளவு முக்கியத்துவமான ஒன்றோ அதுபோல் சிறப்புதரும் ஒன்றே நமது தமிழக அரசால் நல்லாசிரியர் பட்டம் பெற்ற தேவராஜன் ஐயா அவர்களின் சொற்பொழிவு. ‘தேர்வு என்பது சுவையே சுமையல்ல’ என்ற நிகழ்ச்சக்கு சொந்தக்காரருமான இவர் வந்திருந்தவர்களுக்கு நல்ல பல கருத்துக்களை அளித்து சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தார். மாணவர்களுக்கு வழிகாட்டுதலில் தலைசிறந்த மேடைப்பேச்சாளர் உயர்திரு. இராஜ்குமார் ஐயா அவர்கள். நம்மோடு ஒருவராக மாறி நமது மாணவச்செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றிய அறிவுரை வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழி தமிழ் அகராதி வழங்கினார்.

 

ந‌ம‌து அற‌க்க‌ட்ட‌ளையின் ஒவ்வொரு இல‌வ‌ச‌  கருத்தரங்கிற்கும் முன் வ‌ந்து சேவை செய்திடும் ம‌ன‌ம் கொண்ட‌வ‌ர் நமது கெளவுரவ பேராசிரிய‌ர் Sridhar ஐயா அவர்க‌ள். விழா தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது பங்கு இருந்தமையால், நமது நிக‌ழ்சிக்கு வ‌ந்து‌ சென்ற‌ நேர‌ம் குறைவே ஆனாலும், சிறிது நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் அழகாக பேசி வழக்கம் போல் மாணவர்களை தம்பக்கம் திசை திருப்பி தன் பொன்கரங்களால் ப‌ல‌ மாண‌வர்க‌ளுக்கு ஊக்க‌த்தொகை அளித்தார்.

 

ந‌மது அற‌க்க‌ட்ட‌ளைக்கு வ‌ந்து சேரும் ஒவ்வொரு உத‌வித்தொகைக்கும் முறையாக க‌ணக்கிட்டு அதை அர‌சாங்க‌த்திற்கு அனுப்பி வைப்ப‌வ‌ர் உயர்திரு. த‌ர்ம‌லிங்கம், அறக்கட்டளை கணக்கு தணிக்கையாளர். அவ‌ர்க‌ள் விழாவிற்கு வ‌ந்து சிறப்புரையாற்றி‌னார்.

 

திருச்சி நகராட்சி ப‌ள்ளி த‌லை‌மை ஆசிரிய‌ர் விழாவிற்கு வ‌ந்து த‌ன‌து அனுபவத்தின் மூலம் சேகரித்த அர்த்த‌முள்ள ‌மாணவர்களின் வெற்றிக்கு தேவையான க‌ருத்துக்க‌ளையும், ஆங்கில வழி தமிழ் அகராதியையும் மாண‌வ‌ர்க‌ளுக்கு வழங்கினார். விழாவின் இடையே அறங்காவலர் நடராஜன் அவர்களின் அலைபேசி அவரை அழைத்தது. ஆம்!!! “இன்று, இந்த‌ விழாவினை இந்த மண்டபத்தில் ந‌ட‌த்துவ‌த‌ற்கான அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்‌” என்று ஒலித்த‌து உத‌விக்குரல் உயர்திரு. ம‌காலிங்க‌ம் ஐயா அவர்க‌ளிட‌மிருந்து. ஐயா அவர்கள் நமக்கு மட்டும் உதவவில்லை. இது போன்று பல்வேறு குழந்தைகளுக்கு தனிப்பட்ட மனிதராக உதவி வருகிறார்.

 

விழாவின் பயன்:

விழாவிற்கு உத‌விட‌ வ‌ந்த‌ க‌ல்லூரி மாண‌வி விழா முடியும் முன்னே த‌ன்னால் முடிந்த‌து என்று ஒரு 100 ரூபாய் நோட்டை அற‌க்க‌ட்ட‌ளை நிர்வாகியிடும் கொடுத்து மாண‌வ‌ர்க‌ளுக்கு உத‌விட‌ கேட்டுக்கொண்டார்.

 

உத‌வித்தொகை பெற்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்து:

ஒரு மாண‌வியின் அண்ண‌ன் த‌ன‌து தங்கைக்கு அறக்க‌ட்ட‌ளையால் கிடைத்த‌ உத‌வித்தொகைக்கு ந‌ன்றியினை அனைத்து மாண‌வ‌ர்க‌ளின் சார்பாக‌ தெரிவித்துக்கொண்டார்.

 

அறக்கட்டளையின் தொண்டர் குழுவினரான ந‌ண்ப‌ர்க‌ள் ராஜேஷ், க‌ர்ணா, கார்த்திக், க‌ன‌க‌ராஜ் ம‌ற்றும் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் இந்த விழாவினை திறம்பட நடத்தினர்.  

 

விழாவிற்கு வ‌ந்திருந்த‌ சிறப்பு விருந்தினர்கள், பாரதி அகாடமி நிர்வாகி, மதுரை காரியாப்பட்டி மனுநீதி நூல் பரதன் ஐயா, பத்திரிக்கை நண்பர்கள், த‌லை‌மை ஆசிரிய‌ர்க‌ள், ஆசிரிய‌ர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ம‌ற்றும் பல‌ பொதும‌க்க‌ளுக்கும் அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ ந‌ன்றியினைத் தெரிவித்துக்கொண்டார் அற‌க்க‌ட்ட‌ளையின் நிர்வாகி ஆனந்த் பிர‌சாத்.

 

விழாவிற்கு வ‌ருகை த‌ந்து ப‌ல‌ வ‌ழிக‌ளில் குழ‌ந்தைக‌ளுக்கு பொருள் உத‌வி, க‌ருத்துப்ப‌ரிமாறுத‌ல், உண‌வ‌ளித்து விழாவினை இனிதே ந‌ட‌த்தி தந்த‌ அனைத்து ந‌ல் உள்ள‌ங்க‌ளுக்கும் ம‌ன‌தார‌ நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது டாக்டர் இராதாகிருழ்ஷ்ணன் கல்வி அறக்கட்டளை.

 

நன்றி!!!

 

இணைப்பு:

  • தினமலர் நாளிதழில் வெளியான அறக்கட்டளை உதவித்தொகை வழங்கும் விழா பற்றிய செய்தி(http://www.drcet.org/Article/News.jpg).

அடுத்த இதழில்:

  • ஆண்டறிக்கை
  • விழா பற்றிய புகைப்படங்கள்

தங்களது இந்த சேவை பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயவுசெய்து இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் (+91-98809 60332).

 

என்றும் மாணவர்களின் சேவையில்

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை.

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: