Skip to content

அண்டைவீட்டோடு அன்புப் புன்னகை!(கருணையுள்ளம்)

நவம்பர் 3, 2009

நல்லுறவு

ஓம்.
      கிராமங்களுக்கும் நகரங்களுக்கும்  மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் தற்போதைய கட்டாயச் சூழ்நிலையாகும். ஒவ்வொரு தளத்தில் உள்ளவர்களும் அண்டைவீட்டாரைப் பற்றி அறிந்திருப்பதற்கு வாய்ப்பும் இல்லை, விருப்பமும் இல்லை. அவசர கதியில் ஓடிக் கொண்டி ருப்பவர்களுக்கு புதியவர்களைக் கண்டு பேச அவகாசம் இருப்பது இல்லை. எவராவது வந்து குடியிருப்பவர்களின் பெயரைச் சொல்லி அவர் இங்குத்தான் இருகிறாரா? என்று கேட்டால் ‘தெரியாது’ என்ற பதில் தான் கிடைக்கும்.

      இது நகரவாழ்வின் ஒரு பாதகமான பக்கங்களுள் முக்கியமான ஒன்று. பரபரப்பான வாழ்வியலின் மீது பழியை இட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறோம்.ஆனால், அவ்வப்போது சில  புன்னகையும் பூக்கவும், இரண்டொரு வார்த்தைகள் பேசவும் எவ்வளவு நேரமாகும்? அதற்குச் செலவு ஒன்றும் கிடையாது. ஆனாலும் நன்மைகள் அதிகம்.

      அரசு அலுவலகங்களில் முக்கியமாக சென்னை எழிலகம் அல்லது கோட்டையில் குறிப்பிட்ட துறையின் அலுவலகம் எங்கு உள்ளது என்பதை முகப்பு வரைபடம் பழக்கப்படாதவர்கள் தெரிந்துகொள்ளும் பாடு வெகு திண்டாட்டம் தான். எவரிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைக்காது. சந்திக்கும் அன்பர் இங்கு யாரையும்  பரிச்சயமே  இல்லாமல் தேடி அலைந்து கொண்டிருக்கும் வேற்றூர்க் காரரிடம் எப்படி நம்முடைய வினாவுக்கு சரியான தகவல் பெறமுடியும்?

      கிராமங்களில் மக்கள் குடியிருப்பு சிறிய அளவினது. எனவே புதிய நபர் எவர் வந்தாலும், ஆங்கிருப்பவர் வந்து விசாரிப்பர். கேட்பவருடைய தகவல் உண்மையானதுதான் என்று உணரப்பட்டால் பொருத்தமான பதில் கிடைக்கும். உதவிக்கு எவராவது உடன் வந்தும்கூட, வேண்டியதைச் செய்துதருவர்.
பொருத்தமற்ற முறையில், அன்றி இடக்காகவோ திமிராகவோ பேசினால் மக்கள் ஒன்று சேர்ந்து திரண்டு உண்மையை வெளிப்படுத்தும் வரை விடமாட்டார்கள்.

      ‘அண்டைவீட்டாரை நேசியுங்கள்…’. ‘அண்டைவீட்டுக்காரன் பகை செருப்பினுள் புகுந்த கல்…..’ என்றெல்லாம் முதுமொழிகள் உள்ளன.

      “அண்டைவீட்டாரை அறியுங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள்” என்ற ஒரு திட்டத்தை திரு டி.எஸ் ராஜசேகர் ரோஷினி தம்பதியினர் துவங்கி நடத்திவருகிறார்கள். நான்கு குடும்பங்களுடன் ஆரம்பித்த இத் திட்டத்தில்  இன்று நாற்பது குடும்பங்கள் இனைந்துள்ளன.கடந்த ஒரு ஆண்டாக பெங்களூருவில் கல்யாண் நகரில் இது நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றது.

      “திடீரென்று சுற்று வட்டாரப் பகுதியில் கொலைகள் திருட்டுகள் வழிப்பறி போன்றவை அதிகரிக்கிறமாதிரித் தெரிந்தபோது இந்த உத்தி உதயமாயிற்று. அண்டைவீட்டாரின் உதவிமட்டும் இருந்திருந்தால் அது போன்ற சம்பவங்களைத் தடுத்திருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. நானும் என் மனைவியும் பேசினோம்” என்கிறார் இந்த 41 வயதுகொண்ட ராஜசேகர்.

      “அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் எல்லாம் மிகவும் உதவியாக இருக்கக்கூடியவர்கள் அண்டை வீட்டார் தான். எடுத்துக்காட்டாக மாரடைப்பு ஏற்பட்ட பெரியவருக்காக சற்றுத் தொலைவில் இருந்த உறவினருக்குத் தகவல் கொடுத்து  வந்து உதவுவதற்கு முன்னர் உதவி செய்பவர் அண்டைவீட்டுக் காரர். பாதிக்கபட்டவரை விரைந்து செயல்பட்டு மருத்துவ மனையில் சேர்ப்பதற்கு அடுத்த வீட்டுக் காரர்கள் உதவ முடியும்.” என்று தன்னுடைய கருத்தைக் கூறுகிறார்.

      இந்தத் தம்பதியினரரின் திட்டம் செயல்படும் விதம் மிகவும் எளியதானது. இந்தத் திட்ட உறுப்பினர்கள் ஒருவரின் வீட்டில் மாதம் ஒருமுறை கூடி தேனீர் அருந்தியபடி உரையாடுகின்றனர். விஷயங்களை அலசுகின்றனர். இது எங்கள் பகுதியின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள எங்கள் அனைவருக்கும் உதவுவதுடன், அவசர நேரங்களில் உதவிக்கொள்ளும் வகையில் மக்களை மேலும் நெருக்கமாக்குகிறது. பெரும்பாலும் எல்லோரும் அண்டை விட்டாரை அறிய விரும்புகின்றனர். என்பதுதான் உண்மை. ஆனால், அதற்கான முதல் முயற்சியை மேற்கொள்ளத் தயங்குகினனர். அதற்கு இது போன்ற முயற்சிகள் வாய்ப்பளிக்கின்றன” என்று கூறும் ராஜசேகர், ஒரு மின்பொருள் நிறுவனத்தின் நிர்வாகப் பங்க்குதாரராகவும், கல்யாண் நகர் நலச்சங்க உறுபினராகவும் உள்ளார்.

      மற்றொரு முக்கியமானசெய்தி, இந்தப் புதுமை அமைப்புக்கு ராஜசேகர் ரோஷிணி தம்பதியர் அடிப்படைக் காரண கர்த்தாக்களாக இருந்த போதிலும் தங்களை இதன் தலைவர் அல்லது வேறு பொறுப்பாளராக அறிவித்துக் கொள்ளவில்லை.

      “இங்கே எல்லோரும் சமம். என்றே நாங்கள் கருதுகிறோம். எங்கள் பகுதிக்கு வரும் குடும்பத்தினர் எங்கள் அமைப்பைப் பார்த்து இணைந்துகொள்ளவிரும்பினால், அவர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இதில்,சேர்ந்து கொள்ளலாம். பதிவுக் கட்டணம் என்பதெல்லாம் இல்லை. ஆனால், நாங்கள் மேற்கொள்ளும் சிறு சிறு உதவிகளுக்கு யாராவது பொருளாதார ரீதியாக உதவ விரும்பினால் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார் ராஜசேகர்.
     
      தங்கள் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பது, கழிவுகளை அகற்றுவது, தங்கள் அமைப்பில் உள்ளவர்கள் முதலீட்டு, காப்பீட்டுத் திட்டங்களை அறியச் செய்வது போன்ற பொது நல மற்றும் விழிப்புணர்வுப் பணிகளிலும் ‘அண்டை வீட்டாரை அறிவோம்’. அமைப்பு உதவுகிறது.

      ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும்  நலச் சங்கங்கள் இன்று இருக்கின்றன.  அவை இதுபோன்று இறங்கிவந்து விழிப்புணர்வை ஊட்டி திட்டமிடல்  வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது. ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமைகளில் குழுக்கூட்டம் நடைபெறுவதானால் அதில் பங்கேற்கும் எண்ணம் அனைவருக்கும் ஒருசேர உருவாகவேண்டும். அது ஒரு குடும்பம் பொல் செயல்படவும், விருப்பு வெறுப்பற்ற முறையில் தன் இயல்பாக வரவேண்டும். தன் பணிகளோடு சமுதாயப்பணியும் ஆகவேண்டும்.

      நயன்ஈன்று நன்றி பயக்கும்  பயன்ஈன்று
      பண்பின் தலைப்பிரியாச்சொல்—–
                            …………………………………திருக் குறள்……97.

      நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோர்க்கும் இன்பத்தையும் நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

செய்தி மூலம்: தினத்தந்தி.

<******(U)………********…….*********…….(U)……*******>
கருணை உள்ளம்

ஓம்.
இறைவனைக் கருணைக்கடல் என்பர்.அவன், யாருக்கும் நல்லதையெ செய்ய விரும்பிகிறான். கருணைக்கடலாகிய இறைவனை வழிபடுப்வர்களும் கருணை உள்ளம் கொண்டவர்களாக வே இருப்பது அவசியம்.

சைவ புராணத்தில் ஒரு கதை உண்டு….
      வசுவேசர் என்பவர் ஒரு சிவனடியார்; மிகுந்த கருணை உள்ளம் படைத்தவர். சிவனடியார்களுக்கு  அமுது படைப்பதில் ஆனந்தம் கொள்பவர்; விரசைவர். உடம்பில் சிவலிங்கங்களைத் தரித்திருப்பார். வீரசைவ மடத்தின் அதிபதி.

       ஒரு சமயம் ஆயிரக்கணக்கான சிவனடியார்களுக்கு அமுது படைக்க ஏற்பாடு செதார். மிக உய்ர்ந்த வகையில் உனவு தயாரானது. சிவலிங்கம் தரித்த சைவர்கள் மட்டுமே அனுமதியளிக்கபட்டனர்.

      பசியுடன் இருந்த இரண்டு கள்வர்கள் அங்கு வந்தனர். உள்ளே போக வெண்டுமானால், கழுத்தில் லிங்கம் இருக்கவேண்டும். இந்த நேரத்தில் எங்கே போவது? யோசித்தனர். சுற்றுமுற்றும் பார்த்தனர்.

      குப்பையில் கிடந்த இரண்டு கத்தரிப்பிஞ்சுகளைக் கண்டனர்; அவை கறுப்பாகவும், மழு மழுவென்றும் சிவலிங்கம் போன்றும் காட்சியளித்தன. அதை எடுத்து சிவலிங்கம் போல் கழுத்தில் கட்டி, கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே போய் சாப்பாட்டுக்கும் அமர்ந்துவிட்டனர். இலையில் அறுசுவை உண்டியும் படைக்கப்பட்டது.

      கற்பூரம் ஏற்றினார் வசுவேசர். அந்தத் தட்டை ஏந்தியபடி அடியார்களை வழிபட்டுக்கொண்டே வந்தார்.பந்தியில் உள்ள சிவனடியார்கள் ஒவ்வொருவரும் தமது கழுத்தில் உள்ள சிவலிங்கங்களை வெளியே எடுத்து அன்னத்துக்கு முன் காட்டி, அன்னத்தை நிவேதனம் செய்த்பிறகு சாப்பிட ஆரம்பித்தனர்.

      நடுவில் உட்கார்ந்திருந்த இரண்டு திருடர்களும் இதைப் பார்த்து, ‘திரு…திரு’ என்று விழித்தனர். கழுத்தில் இருப்பது சிவலிங்கம் என்றால் காட்டலாம்; கத்தரிக்காயை எடுத்துக் காட்டமுடிமா?

      இவர்களைப் பார்த்த வசுவேசர், இவர்களது ஏமாற்று வேலையையும் புரிந்துகொண்டார்; ஆயினும் அவர் கருணை உள்ளம் படைத்தவராயிற்றே! பாவம், பசிக் கொடுமையால் இப்படி ஏமாற்றியும் சாப்பிட வந்துவிட்டனர் என்று எண்ணி, இறைவனிடம், ‘பெருமானே! அடியேன் உம்மை இடையறாது வழிபடுவது உண்மையாயின் இவர்கள் கழுத்தில் வந்து அமரவேண்டும்..’ என்று வேண்டினார்.

      பிறகு, கள்வர்களின் முன்வந்து, ‘கழுத்தில் உள்ள லிங்கத்தை எடுத்து நிவேதனம் செய்யுங்கள்!’ என்றார். கள்வ்ர்களுக்கு உடம்பே நடுங்கியது. ‘இல்லை….இல்லை… வந்து … வந்து..’ என்று இழுத்தனர். விடவில்லை வசுவேசர்…’கழுத்தில் உள்ள சிவலிங்கத்தை எடுங்கள்…’ என்றார்.

      திருடர்களும், திருட்டு முழி விழித்தபடி கத்தரிக்காயை வெளியே எடுத்தனர். கத்தரிக்காய் சிவலிங்கமாய் மாறியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு கண்ணீர் வடித்தனர். வசுவேசரின் கால்களில் விழுந்து, தாங்கள் செய்த ஏமாற்று வேலையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டனர். வசுவேசரும், ‘இனியாவது திருந்துங்கள்; இறைவன் மன்னிப்பார்…’ என்றார்.

      திருடர்கள் இருவரும் திருந்தி, உண்மையிலேயே சிவனடியார்களாகிவிட்டனர். கள்வர் ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிந்தும் கருணை காட்டிய வசுவேசரின் பெருமையை நாம் இங்கு காண்கிறோம். கருணைக்கு அவ்வளவு மதிப்பு உண்டு. நம்முடைய உள்ளமும் கருணையால் நிறையட்டும்.

செய்தி மூலம்: வைரம் ராஜகோபால் ; நன்றி..

அன்புடன் வெ.சுப்பிரமணியன். ஓம்

<******(U)………********…….*********…….(U)……*******>
             —

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: