Skip to content

Re: [Palsuvai:6887] Re: ரயில் பயணம்

நவம்பர் 16, 2009

ஓம்.
யதார்த்தமான உணர்வுகளுடன் எளிய முறையில் பெரிய விஷயத்தை கையாண்டுள்ளார் ஸ்ரீ கல்பட்டார் அவர்கள்.

ஷீரடி சாயிபாபாஅவர்களின் சத்சரிதத்தில் ஒரு காட்சி வரும்.
பாபாவின் சந்நிதானத்தில் அவருடைய  பக்தர், அணுக்கத் தொண்டர் ஒருவர் சிசுருட்சை செய்துகொண்டிருந்தபோது ஒரு பட்டான் குடும்பத்தின் கோஷா பெண்டிர்கள் சிலர் ஒரு குதிரை வண்டியில் வந்து இறங்கினர்..

பாபாவின் தரிசனத்திற்கென அவர்கள் வேகமாக  த்வாரகாமாயி என்னும் அந்த மசூதிக்குள் பிரவேசித்தனர். திடுதிப்பென, முன் அறிவிப்பின்றி அவர்கள் வந்து  பாபாவின் பாத நமஸ்காரம் பெற முன்வந்தனர். நெருங்கி பாபாவின் அறையினுள் நுழையும் போது அந்த அணுக்கத்தொண்டர் உடன் இருந்தார். அந்தச் சூழலில் இருந்து சட்டடென வெளியேறிவிட முயன்றார்.. பாபா அவரைக் கையமர்த்தி அங்கேயே இருக்கச் சொன்னார். அந்தப் பெண்டிர் தம் கோஷாவை விலக்கி பாபாவிடம் பேசினர். அணுக்கத் தொண்டர் மிகவும் சிரமத்துடன் நெளிந்தார். அந்தப் பெண்டிர் அனைவரும் பெரிய அரச வம்சத்தினர் போல் இருந்தனர். அப்படி ஒரு அழகிய பெண்மணியை செந்தழல் வண்ணத்தில் செந்தாழம்பூவின் நிறம் இழையோடிய அன்றலர்ந்த நாண்மலர் போல். கொழு கொழுவென கைதேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில்  உருவாக்கப்பட்டு உயிரூட்டப்பட்ட உயர் உயிர் ஓவியமாக, உள்ளோடும் நரம்புகள் வெளியே கண்ணாடிப்பெட்டியில் தெரிவதைப் போன்று, பால்போல இருந்த அந்தப் பெண்கள் யாரைவிட யார் அழகு எனக் கூறமுடியாமல் தோன்றினர்.
. தலையில் இட்டிருந்த முக்காடு விலகியவுடன் அந்தத் தொண்டர் வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் தவிப்புடன் வெளியேறலாம் என முயற்சிக்கையில் மீண்டும் பாபா அவரைக் கையமர்த்தி அமரச் சொன்னார்.

சற்று நேரம் கழியவும் போதிய தரிசனம் கிடைத்த தருணத்தில் மேலும் மிகப் பிரகாசமாக அவர்களின் உவகையின் போது அவர்களின் முகவிலாசம் ஒளிவீசிற்று.
தொண்டர் தன் கண்கள் அந்தப் பேரொளியில் பழுதாகிவிடுமோ என்று நெஞ்சம் தவிக்க செய்வதறியாது தன்னுடைய திகைப்பிலிருந்து மீளமுடியாமல் தவித்தார்.

அந்த ரோஜாக்குழு வெளிப்போந்தபின் தன்னிலை அடைய அவர் மிகவும் சிரமப்பட்டார். மிதந்து வெளியே வீசப்பட்டிருந்த ஒரு தனிமை நிலையினின்றும் வலுக்கட்டாயமாக அவர் மீண்டு  வர பலவிதமான புதிய பதற்றத்துடன் முயன்று கொண்டிருந்தார்.

பாபா அவரை பெயரிட்டு அழைத்தார். கூனிக் குறுகி தன் நிலை யிழந்ததாகக் கருதி பாபாவின் பொன்னடிகளில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து ,”பிழை பொறுத்தருள்க; தறிகெட்ட நெஞ்சம் என்னை தடுமாற வைத்தது. இவ்வாறு ஒருநிலைக்கு இதுவரை ஆள்பட்டதில்லையே! ஏன் எனக்கொரு சோதனை!” என்று பலவாறாக அவர் புலம்பி பாபாவைத் தஞ்சம் அடைந்தார்.

பாபா சொன்னார்” அன்பரே இறைவனின் படைப்பின் மகோன்னதத்தை இன்றுதான் நீ காணும் பேறு பெற்றிருக்கிறாய். அழகினை ஆராதிப்பதே இறைவனின் தொண்டுதான். அந்த அழகினை தன் வசம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒருவன் அங்கலாய்ப்பதுதான் அவனை அழிக்கும். உன்னுடைய செயல் அழகினைக் கண்ட பரவசம்தான். அதில் எள்ளத்தனையும் காமம் இல்லை என்பதும் அழகின் ஆர்ப்பரிப்பு உன்னை வெகுவாகக் கவர்ந்து செயலிழக்கச் செய்தது என்பதை நானறிவேன்” என்றார். “நீ இதன் பொருட்டு வருந்த வேண்டாம்.  நீ தவறு ஏதும் இழைக்கவில்லை” என்று கூறியதும் அந்தத் தொண்டர் சுயநிலைக்கு வந்தார்.

ஓம்.அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

2009/11/16 lion sekar <lion.sekar@gmail.com>

ஐயா
சும்மா சொல்லக்கூடாது. நீங்கள் ஒரு ஆசிரியராகவோ அல்லது மிகப்பெரிய நாடக ஆசிரியராகவோ இருந்திருக்க வேண்டும், காரணம்,, உங்கள் எழுத்தில் ஒரு ஆழம், மெல்லிய நடை, அழுத்தம், எளிமை, படிக்கும்போதே ஒரு பூரிப்பு, ஒரு குறும்பு, வெறுக்கும் அளவிற்கு ஒரு மிருகத்தின் செயல்பாடுகள்,  அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு பயம் கலந்த ஒரு எதிர்பார்ப்பு, என்னும் கணக்கிலடங்கா பொருட் சுவைகள், மொத்தத்தில் உங்கள் படைப்பு நாடக ஆசிரியர்களுக்கு ஏன் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு அருமருந்து, எழுத்தாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு…………!!!!!
நான் ஒரு வரிமட்டுமே படிக்கலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன் பிறகு என்னை அறியாமலேயே மூழ்கிவிட்டேன். செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறேன்.
உங்கள் படைப்பை எல்லோரும் பாதுகாக்கவேண்டும்/
உங்கள் சேவைக்கு எனது உளமான பாராட்டுக்கள்.
நேரம் இன்மை காரணமாக உங்களின் படைப்பாற்றலை முழுவதுமாக வெளிப்படுத்த முடியாதற்கு மன்னிக்கவும்.
உங்கள்
சிம்மம் சேகர்

2009/11/15 Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

ரயில் பயணம்

 

 

 

ரயில் பயணம் என்றதுமே அனேகமாக எல்லோருக்கும் கசக்கும்  அனுபவங்கள் தான் நினைவுக்கு வரும்மட்டமான காபி, சிற்றுண்டி, மதிய இரவு உணவு, கரை படிந்த வாஷ் பேசின், நாற்றமெடுக்கும் கழிப்பரை இவைகளைப் பற்றியே பேசுவார்கள்நான் கேட்கிறேன் எல்லா ரயில் பயணங்களுமேவா மறக்க மாட்டோமா என அமையும்? 

 

இல்லை என்பேன் நான்உதாரணத்துக்கு இந்தப் பயணத்தைப் பாருங்களேன்.

 

அன்றொரு நாள் ஆபீசு வேலையாக ஒரு வாரம் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டி இருந்ததுஎனது காரில் ஒரு வாரத்திற்குத் தேவையான துணி மணிகளை கொண்ட பெட்டியையும், ஆபீஸ் தஸ்தாவேஜுகள் கொண்ட ஒரு சிறிய பெட்டியையும் பின் சீட்டில் வைத்தேன்எஞ்சினை முடுக்கி விட்டு காரை வெளியே எடுக்கும் சமயம் எனது கடைசீ மகள் வேளியே வந்து, அப்பா நீங்க கிளம்பறத்துக்கு முன்னெ இரண்டு டயர்லெ காத்து அடிச்சுக்கணும்பாநேத்து சாயங்காலம் நானும் சிவகாமியும் காரைச் சுத்தி ஒடிப் பிடிச்சு விளையாடினோம்அப்பொ சிவகாமி சொன்னா, டீ இந்த ஈர்க்குக் குச்சியால இந்த குண்டூசி மாதிரி இருக்கறதெக் குத்திப் பாரேன் என்ன ஆறதுன்னு  ன்னுகுத்திப் பாத்தா புஸ்ஸுனு காத்து வந்துதுப்பா.  ரோடுலெ பாம்பாட்டி கூடெயெ ஒரு தட்டுத் தட்டீட்டுத் தெறந்தான்னா பாம்பு புஸ்ஸுனு மூச்சு உடுமெ அந்த மாதிரி வந்துதுப்பா.  வேடிக்கையா இருந்துதுப்பாரெண்டு சக்கரம் பண்ணீட்டு மூணாவதுக்குப் போறத்துக்குள்ளெ அம்மா கூப்டாநான் உள்ளெ ஓடிப் பொயிட்டேன் என்றாள்.

 

காரை விட்டு இறங்கிப் பார்த்தால் ரெண்டு பின் சக்கரமும் சப்பையாக இருந்ததுஎன்ன செய்ய?  எப்படியும் அன்று மாலை 6-00 மணிக்குள்  மாயவரத்திலும், மறு நாள் காலை 7-00 மணிக்குள் நாகப்பட்டினத்திலும் இருந்தாக வேண்டும் இரண்டு பம்புகள் திறப்பு விழாக்களில் பங்கேற்க.

 

அவசர அவசரமாக பெரிய பெட்டியில் இருந்து ஒரு க்ளேக்ஸோ பிஸ்கெட் பேக்கெட் மற்றும் ஒரே ஒரு செட் மாற்றுத் துணியும் எடுத்து சின்ன பெட்டிக்குள் வைத்து அதைத் தூக்கிக் கொண்டு தெரு முனைக்கு ஓடினேன்அங்கு வந்த ஒரு ஆடோவில் ஏறி, ஜங்க்ஷன் ஸ்டேஷன் என்றேன்அவன் என் அவசரத்தைப் புரிந்து கொண்டு ஒட்டினானோ அல்லொது எப்போதுமே அவன் அப்படித்தான் ஓட்டுவானோ தெரியாதுபறந்தது ஆடோஅதுவும் ஒரு விதத்தில் எனக்கு உதவியதுப்ளேட்பாரத்தை அடைந்த போது அந்த நாட்களில் மாயவரம் வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்ப்ரெஸ் கிளம்பிக் கொண்டிருந்ததுநான் அங்கு சென்றடைவதற்கு சற்று முன்புதான் கார்டு விசிலடித்துப் பச்சைக் கொடி காட்டி இருக்க வேண்டும்.  பள்ளி நாட்களில் ஓடும் வண்டியில் ஏறிப் பழகி இருந்தது கை கொடுத்தது அன்று எனக்கு.

 

வண்டியில் ஏகப் பட்டக் கூட்டம்மெல்ல மெல்லக் கூட்டத்தின் வழியே உள்ளே சென்றேன் நான் எங்காவது உட்கார ஒரு இடம் கிடைக்குமா என்று தேடும் முயற்சியில்என்ன ஒரு அதிருஷ்டம் எனக்கு!  ஜன்னலோரம் ஒரு இடம் காலியாக இருந்ததுநான் அங்கு உட்காரப் போனபோது பக்கத்து இருக்கையில் இருந்தவர் சொன்னார்சார் ஒருத்தரு அங்கெ இருந்தாருஎடெத்தெப் பாத்துக்கோங்கதோ டீ குடிச்சூட்டு வந்துடறேன்னு சொல்லீட்டுப் போனாரு என்று

 

அவரு வந்ததும் ஏந்துடறேன்னு சொல்லி விட்டு அங்கு உட்கார்ந்தேன்கைப் பெட்டியை மேலே வைக்கலாம் என்றால் அங்கும் பயணிகள்ஆகவே அதைக் கீழே என் கால்களுக்குப் பின் வைத்துக் கொண்டேன்.

 

அடுத்த மூன்று நான்கு மணிகளுக்கு உடன் பயணிக்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசிப் பழக வேண்டாம்?   என்னைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன்அதை எனக்கு நேர் எதிர் சீட்டில் இருந்த நபருடன் துவங்கினேன்.

 

எனக்கு எதிர் இருக்கையில் ஒரு அழகான பெண்அழகான பெண் என்று சொல்வதை விட அழகு ராணி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்அவள் பக்கத்திலே நடு வயதைத் தாண்டிய ஒருவர்தலையிலெ இங்கொன்றும் அங்கொன்றுமாக வெள்ளி முடி.  வழுக்கை விழ ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகள் ஆங்காங்கே

 

என் மனத்துள் தோன்றியது, அழகு ராணியும் மிருகமுமோ?” என்றுஇந்த எண்ணம் என்னை வதைக்க மேற்கொண்டு எவரையும் பார்க்க மனமின்றி ஜ்ன்னலின் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினேன்

எதிர் சீட்டுப் பயணியும் என்னைப் போலவே வெளியே பார்க்கத் தொடங்கினாள்னாலும் என்னுள்ளே இருந்த ஒரு அடக்க முடியாத ஆசையால் தலையைத் திருப்பாமல் கடைக்கண்ணால் அவ்வப்போது எதிரே இருந்த அழகியைப் பார்த்தேன்அப்படிப் பார்த்த போது ஒரு முறை அவளும் என்னைக் கடைக் கண்ணால் பார்ப்பது தெரிந்தது.

 

ஒரு முறை எங்கள் கண்கள் சந்தித்த போது அவள் கண்களில் ஒரு மெல்லிய புன்னகையும், ரோஜா நிற கன்னங்களிலும் உதடுகளிலும் ஒரு சிறு அசைவினையும் கண்டேன்.  அவள் சிரிக்க முயற்சிக்கிறாளா அல்லது வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சிக்கிறாளா என்று புரியாமல் குழம்பினேன்.

 

என் மனத்துள் ஒரு சம்பாஷணை துவங்கியது.

 

மனச்சாட்சி:  என்ன செய்கிறாய் நீ?”

 

நான்: உனக்குத் தெரியாதா அழகென்பது பார்த்து ரசிப்பதற்கு என்று?”

 

.சா.: உண்மைதான்ஆனால் உனக்கு ஒரு மனைவியும் மூன்று பெண்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டாயா?”

 

நான்:  என்ன தவறு செய்துவிட்டேன் பெரிதாக?  அழகை ரசித்தேன்அது ஒரு தப்பா?”

 

.சா.: அப்பொ நீ மேடை ஏறிப் பேசறதெ நடைமுறேலெ கடைபிடிக்கிறது இல்லேன்னு சொல்லு.

 

நான்:  என்ன சொல்ல வரெ நீ?”

 

.சா.:  நீ வாரா வாரம் பத்துப் பன்னிரண்டு குழந்தைங்களே வீட்டுக்கு வரவழிச்சு பால விகார்னு ஒண்ணு நடத்தறது இல்லெ?”

 

நான்:  ம்மாம்அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

 

.சா.:  இருக்கேஅப்பொ நீ என்ன சொல்லித் தரே?”

 

நான்: ஸ்லோகங்கள், பகவத் கீதை, பஜகோவிந்தம் இதெல்லாம் சொல்லித் தறேன்.

 

.சா.:  கீதைலெ என்ன அத்தியாயம் எல்லாம் சொல்லித் தரே?”

 

நான்:  ரெண்டு, பன்னிரெண்டு, பதினஞ்சு இந்த அத்தியாயங்கள் சொல்லித்தறேன்.

 

.சாஇரண்டாவது அத்தியாயத்தில், த்யாதோ விஷயான் பும்சக என்று ஆரம்பித்து, ப்ரண்ச்யதி என்று முடிகிறதே அது நினைவில் இருக்கிறதா?”

 

நான்.:  இருக்கிறது.

 

.சா.:  அதில பகவான் கிருஷ்ணர் என்ன சொல்றார்? விஷயங்கள் பற்றிய அறிவு அவ்விஷயங்களோடு ஒரு பற்றுதலை உண்டாக்குகிறதுபற்றுதல் ஆசையைத் தோற்றுவிக்கிறதுஆசை அதை அடையவேண்டும் என்ற கொடூர எண்ணத்தை உண்டாக்குகிறதுகொடூர எண்ணம் அந்தப் பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையினைப் பன் மடங்காக ஆக்குகின்றது. பன் மடங்காகப் பெருகிய ஆசையினால் நல்லது எது கெட்டது எது என்று எடை போடும் பகுத்தறிவினை அழிகிறதுபகுத்தறிவு போதல் புத்தியைத் தடுமாறச் செய்கிறதுபுத்தித் தடுமாற்றம் ஒருவனை முற்றிலுமாக அழித்து விடுகிறது என்று. 

 

இதைத்தான் நீ குழந்தைகளுக்கு வாரா வாரம் போதிக்கிறாய்ஆனால் நீ போதிப்பதை கடை பிடிக்க வில்லையே?  இப்போது சொல் அழகினை ரசிக்க ஆசைப் பட வேண்டுமா?”

 

நான்:  சரிசரிவேண்டாம்என் திருட்டுப் பார்வையை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன.

 

என் வயிற்றில் ஒரு எலி கரண்டுவது போன்ற ஒரு உணர்ச்சி வந்ததுஅப்போது என் நினைவுக்கு வந்தது எப்போதும் காலை 8-00 மணிக்கு சாப்பிடும் பிஸ்கெட்டும் பாலும் இன்று சாப்பிடவில்லை என்று.  வீட்டை விட்டுக் கிளம்பும்போது என் மனைவி சொல்லியது நினைவுக்கு வந்ததுபெட்டிக்குள் ஒரு பிஸ்கெட் பேக்கெட் வைத்திருக்கிறேன்அதை வண்டியில் எறிய உடனேயே சாப்பிடுங்கள்இல்லை என்றால் உங்கள் வ்யிற்றுப் புண் வலி அதிகமாகி விடும் என்று.

 

குனிந்து மெல்லப் பெட்டியை வெளியே எடுக்காமல் அதிலிருந்த க்ளேக்ஸோ பிஸ்கெட் பேக்கெட்டை வெளியே எடுத்துப் பிரித்தேன்அதிலிருந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்துத் தின்ன போது என்னை அறியாமல் என் கண்கள் எதிர் சீட்டைப் பார்த்ததுஅதிலிருந்த அழகியின் கண்கள் என் கையில் இருந்த பிஸ்கெட் பேக்கெட்டைப் பார்ப்பது தெரிந்ததுஅவளுக்கும் இந்த க்ளேக்ஸோ பிஸ்கெட் பிடிக்குமோ?  மற்றவர்கள் எதிரில் நான் மட்டும் ஒன்றைத் தின்பது அநாகரீகம் அல்லவா?  எல்லொருக்குமே ஒவ்வொன்றைக் கொடுக்கலாம்அழகியில் இருந்து ஆரம்பிக்கலாம் இந்த நல்ல காரியத்தை என்று நினைத்தவனாய் ஒரு பிஸ்கெட்டை எடுத்து அவள் பக்கம் நீட்டினேன்அவளும் சிறு தயக்கத்துடனே தன் கையை நீட்ட ஆரம்பித்தாள்.

 

அடுத்த கணம் நீட்டிய கைமேல் பட்டென்று விழுந்தது ஒரு அடிவேறு யாரிடமிருந்து?  அந்த மிருகத்திடம் இருந்துதான்பட்டுப் போன்று இருந்த அந்தக் கை சிவந்ததுஅவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

 

வரண்ட் குரலில் கர்ஜித்தது மிருகம், உனக்கு பேபரில் படித்ததோ, டீவீயில் பார்த்ததோ நினைவில்லே?  இப்படித்தான், திருடர்கள் பிஸ்கெட் பேக்கெட்டைப் பிரிச்சு அதுலெ மேலா இருக்குறண்ணு ரெண்டைத் தாங்க தின்னூட்டு அப்புறமா அதுங்கீழெ  இருக்கற மயக்க மருந்து கலந்ததெ சக பயணிகளுக்குக் கொடுத்துட்டு அவங்க மயங்கி விழுந்ததும் சாமான்களைத் திருடிக்கிட்டு ஓடிடுவாங்க.

 

எனக்கு க்ளேக்ஸோ பிஸ்கெட் ரொமபப் பிடிக்குமே.”

 

பேசாமெ ஒக்காரு.  அதட்டியது மிருகம் அவர்களுக்குள் இருக்கும் உறவினைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இன்றி.

 

கொஞ்ச நேரம் தடக்.. தடக்.. என்று ரயில் ஓடும் சப்தம் மட்டும் கேட்டதுகாரணம் அங்கு இருந்தவர் எல்லோரும் கப் சிப்.

 

மதுரெ மல்லீமதுரெ மல்லீ என்று கத்தியபடி தோளில் தொங்கிய ஓலைக் கூடையில் மல்லிகைப் பூப் பந்துகளையும், ஒரு கையில் மல்லிச் சரங்களையும் வைத்துக் கொண்டு ஒரு ஆள் அங்கு தோன்றினான், நின்று கொண்டிருந்த வர்களைத் தள்ளிக் கொண்டு வந்த படி.

 

மல்லிகைப் பூவைப் பார்த்ததும் அழகு ராணியின் முகம் மீண்டும் மலர்ந்ததுகண்களாலேயே மிருகத்தைக் கேட்டாள், மல்லிகைப் பூ வேண்டும் என்றுமிருகமும் பதிலளித்தது தன் கண்களாலேயே, சும்மா இரு என்று.

 

எனக்கு ஒரு கணம் தோன்றியது நான் ஏன் மல்லிகப் பூச்சரத்தினை வாங்கி அவளுக்குத் தறக் கூடாது என்றுஅடுத்த கணம் என்னைக் குத்திக் காட்டியது மனச் சாட்சி, என்றாவது ஒரு நாள் நீ உன் மனைவி குழந்தைகளுக்கு பூ வாங்கிக் கொண்டு போயிருக்கிறாயா?  இப்போது மட்டும் என்ன கரிசனம்?” என்று.

 

கையில் எடுத்த காசை மீண்டும் பர்ஸுக் குள்ளே போட்டேன்.

 

வண்டியின் வேகம் குறைந்துதஞ்சை பிளாட்பாரத்துக்குள் நுழைய ஆரம்பித்ததுவண்டி நிற்பதற்குள் தப தப வென்று வண்டிக்குள் உள்ளே புகுந்தனர் பிளேட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள்

 

மிருகமும் தன் இருக்கை விட்டு எழுந்தது கையில் அழகு ராணியை இறுக்கப் பிடித்தபடி நகர்ந்ததுஅவள் ஒருக் கணம் என்னைத் திரும்பிப் பார்த்தாள் போய்வருகிறேன் என்று சொல்வது போலமறு வினாடி மிருகம் அவள் கையைப் பிடித்து இழுக்க, ஐயோ கை தனியாப் பிஞ்சி வந்தூடும் போல இருக்கேகொஞ்சம் மெதுவா இழுக்கக் கூடாதா தாத்தா?” என்றாள் அழகு ராணி.

 

இந்த ரயில் பயண அன்பவத்தினை நான் வீடு திரும்பியது என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்கடைசீ வரியை முடிக்கும் முன் கடைக் குட்டிப் பெண் சொன்னாள், அம்மா இன்னமெ நீ வழக்கம் போல பயித்தியமாட்டம் அப்பா என்ன கடுதாசியெ நீட்டினாலும் கையெழுத்துப் போடாதேஅப்பா நம்மெல்லாம் உட்டூட்டு அந்தப் பொண்ணோட போயிடுவாளோ என்னமோ?” என்றாளே பார்க்க வேண்டும்!

 

இந்த ரயில் பயணம் ஒன்றும் குறை சொல்லும்படியாக இல்லையே?

 

15-11-09                                                                                                                  நடராஜன் கல்பட்டு

 

 

 

 

 

–~–~———~–~—-~————~——-~–~—-~
You received this message because you are subscribed to the Google Groups “Palsuvai – a Potpourri” group.
To post to this group, send email to palsuvai@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en

Azhagi – She just rules – Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: