Skip to content

Re: [MinTamil] Re: THF & Tamil kaNi Sangam workshop in Chennai. Dec.6,2009

திசெம்பர் 7, 2009

ஓம்.
இனிய சிறப்புப் பங்களிப்பு செய்தோருக்கும் நடத்தி வெற்றிக்கு வழிகோலியவருக்கும், உதவிகள்புரிந்து  ஊக்கம் தரும் உன்னதத் தோழமைகளுக்கும். சீரும் சிறப்புமாக விருத்திகாண விழையும் அன்பு உள்ளங்களுக்கும் , இயல்புப் பணி மிகுந்த அவசர உலகினில் மலைத்துணைப் பணிகளைச் சிரமேற்கொண்டு உலகிற்கு அறிவுத்தொண்டு புரிய வழிவகுத்துக்கொண்டு அயராது செயற்படும் அனைவருக்கும், மெய்வருத்தம் பாராது மலையைப்புரட்டும் அறக்கட்டளைசார்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.
பாராடுப் பெற்றோருக்கு மற்றுமொரு பாராட்டு.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

2009/12/7 karthi <karthigesur@gmail.com>

மிக மகிழ்ச்சியான செய்தி.

ரெ.கா.

—– Original Message —–
From: “N. Kannan” <navannakana@gmail.com>
To: “மின்தமிழ்” <minTamil@googlegroups.com>
Sent: Monday, December 07, 2009 9:00 AM
Subject: [MinTamil] THF & Tamil kaNi Sangam workshop in Chennai. Dec.6,2009

> அன்பர்களே:
>
> நேற்று (டிசம்பர் 6,2009) தமிழ் மரபு அறக்கட்டளையும், தமிழ்
> கணிச்சங்கமும் இணைந்து நடத்திய கணிப்பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடந்தேறி
> இருப்பதாக எமக்குக் கிடைத்த செய்திகள் சுட்டுகின்றன. குறிப்பிட்ட
> நேரத்தில், காலக்கணக்குடன் நிகழ்ச்சி நடந்தேறி இருக்கிறது. இதே
> வளாகத்தில் முன்பும் எமது நிகழ்வுகள் நடந்துள்ளன. 50 பேர்கள்தான் அங்கு
> அதிகளவு கொள்ளளவு. எனவே சபை நிரம்பிய பட்டறையாக நடந்திருக்கிறது.
> முதன்முறையாக பலருக்கு ஆண்டோபீட்டர் அறிமுகமாகியிருக்கிறார். அவர் நமது
> அறக்கட்டளை தோன்றிய பொழுதிலிருந்து கூட இருப்பவர். நமது வளர்ச்சியில்
> முக்கிய பங்களிப்பவர். அவரும் சுபாவும் சேர்ந்து நடத்தியிருப்பது இதன்
> சிறப்பு. திரு.மாலன் அவர்கள் த.ம அ தோன்றும் முன்னரே எமது கணித்தொழில்
> முயற்சிகளை ஊக்குவித்துவருபவர். அவர் சன்டிவி நியூஸ் பொறுப்பேற்று
> நடத்திய போது நானும், எழுத்தாளர் சுஜாதாவும் அவருக்கு நிகழ்ச்சிகள்
> செய்து கொடுத்திருக்கிறோம். அவர் நமது அறக்கட்டளையின் தோற்றத்தை மிக
> அழகிய முறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது எம்முடன் தோள்
> கோர்க்கும் புதியவர்களுக்கு மிக அவசியமான சேதி. பேரா.இராஜேந்திரன்
> அவர்கள் எமது தோற்றம், வளர்ச்சி, செயற்பாடுகள் போன்றவற்றை அறிந்து தமிழ்
> பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டுமென்று வேண்டுகோள்
> விடுத்துள்ளார். செயல்திட்டங்கள் உருவாக்க நிலையில் உள்ளன. எமது
> வளர்ச்சியை அறிந்தோருக்குத் தெரியும், எனது முதல் களப்பணியிலேயே நாம்
> போய் சேர்ந்த இடம் தஞ்சைப் பல்கலைக்கழகம்தானென்று. அங்குள்ள வளங்களை
> முறையாக மின்னாக்கம் செய்து தமிழ் கூறும் நல்லுலகம் பயன்பெறும்படி
> செய்தல் வேண்டும். தொழில்நுணுக்கம் தெரிந்த மின்தமிழ் அன்பர்கள்
> உற்சாகமாக இப்பணியில் ஈடுபட வேண்டும். உங்கள் ஆர்வத்தை இங்கோ இல்லை,
> தனியாகவோ எமக்கு எழுதுங்கள். விரைவில் செயல்பட வேண்டியுள்ளது.
> லேனா.தமிழ்வாணன் அவர்கள் நீண்ட தமிழ்ப்பாரம்பரியுமுள்ள செட்டிநாட்டு
> மரபில் வருபவர். அவர் சில தரவிடங்களைக் காட்டித்தருவதாகச்
> சொல்லியிருக்கிறார்.
>
> இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக நமது மின்தமிழ் சேனைத்தலைவர்கள்
> பாராட்டுப்பெற்று இருக்கின்றனர். திவாஜி, இன்னம்புரான், சுகுமாரன் என்ற
> மூவரும். திவாஜியை “மின்தேவன்” என்று அழைக்கலாமா என்று தோன்றுகிறது.
> மின்னாக்க சேனாதிபதி அவர். அவர் வந்த பின் ஒரு புதிய உற்சாகம், உத்வேகம்
> பிறந்திருக்கிறது. இளைஞர் இன்னம்புரான் மின்னாக்கப்பணிக்காக உலகையே
> புரட்டக்கிளம்பியிருக்கிறார். சுகுமாரன் அமைதியாக ஒரு புரட்சி
> செய்துவருகிறார். இவர்களை கௌரவித்ததால் நாம் கௌரவிக்கப்படுகிறோம் என்பதே
> உண்மை.
>
> இளைய தளபதிகள் மூவர் களமிறங்கி இருக்கின்றனர். செல்வமுரளி, ஆமாச்சு,
> வினோத். எல்லோரும் மிகவும் ரசித்து பாடம் கேட்டிருக்கின்றனர் என்று
> தெரிகிறது. நான் அங்கு இல்லையே எனும் வருத்தம் இன்னும் உண்டு.
> அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.
>
> நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற உதவிய அனைவருக்கும் எம் நன்றிகள்.
> சென்னையில் திடமான ஒரு குழுமத்தை அமைப்போம். பொன்னியின் செல்வன்
> மடலாடற்குழுவுடன் இணைந்து செயல்பட முயற்சிகள் நடந்து வருகின்றன. அது
> நம்மை பலப்படுத்தும். யுகமாயினியுடனான நமது நல்லுறவு தொடரும்.
>
> மிக்க அன்புடன்
> நா.கண்ணன்
>
> —
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> Tamil Heritage Foundation – http://www.tamilheritage.org/
>
> >
>

–~–~———~–~—-~————~——-~–~—-~
 “Tamil in Digital Media” group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: