SANGIYA YOGAM(NAMAKKAL GAVINGAR)
ஓம்.
ஸ்ரீ பகவத் கீதை
.ஸாங்கிய யோகம்
(இரண்டாம் அத்தியாயம்)
அர்ச்சுனன் கேட்கிறான்:
1.கேசவா! விள்ங்கச் சொல்வாய் கெட்டியாம் அறிவுபெற்றோன்
பேசுமா றெவ்வாறு? அன்னான் பிறரிடம் என்ன சொல்வான்?
ஆசிலா அவனுக்குள்ள அடையாளம் யாது? அந்தத் தேசுளான் எதனைச் செய்வான்? தேர்ந்திடும் பலன் தான் என்ன?
ஸ்ரீ பகவான் சொல்கிறார்:
2. பார்த்த! கேள் சொல்கின்றேன், பலமுள்ள அறிஞன் தன்மை
ஆர்த்தெழு மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தும் நீக்கித
தீர்டத்தபின் ஆத்மா தோன்றும் தெரிந்துள்ளே மகிழ்வானாயின
நீத்தவன் அவனே என்ப, நிச்சய புத்திபெற்றோன்.
3. துன்பங்கள் வந்திட்டாலும் துணுக்குறமாட்டான்; மற்றும
இன்பங்கள் எய்தினாலும் இச்சித்து மயங்க மாட்டான்;
பின்பங்கு ஆசை, அச்சம் பிணைந்துள்ள சினமும் நீங்கும
தென்புள்ள முனிவனாகித் திடமுற்ற அறிஞன் ஆவான்.
4.நல்லதுவந்த போதும் நசைதரும் மகிழ்ச்சிகொள்ளான்;
அல்லது கெடுதிவந்தால் அருவருப்படைய மாட்டான்;
தொல்லைய விருப்பினோடு வெறுப்பையும் துறந்தோன் என்னும
வல்லவன் அவனேயாகும் வலிவுள்ள அறிவு வந்தோன்.
5.தலைஒன்று, கால்கள் நான்கு, ஐந்தையும் தனக்குள்ளேயே
நிலைபெற இழுத்துக்கொள்ளும் ஆமைபோல் நினைத்தவாறு
அலைதரும் புலன்கள் ஐந்தும் தன்னுள்ளே அடக்கி ஆளும
கலைதெரிந் தவனேயாகும் கலங்கிடா அறிவுகண்டோன்.
6. தம்மிடம் மோகம் கொள்ளா ஜீவரை விட்டுத் தாமே
வெம்மைய விஷயமெல்லாம் விலகிடும் எனினும் முன்பு
அம்மனம் சுவைத்த இன்ப ஆசையின் சபலம் தங்கும்;
மெய்மையன் பரமாத்மாவை மேவினால் அதுவும் நீங்கும்.
7. குந்தியின் மகனே! கேளாய்! குறைவற முயலும் யோக
சிந்தனையுடைய நல்ல தவசியின் திடத்தைக்கூட
இந்திரி யங்கள்வேகம் தம்முடன் இழுத்துச் செல்லும்;
நிந்தனைசேரப் புத்தி நிலை தடுமாற நேரும்.
8. அப்படிப்பட்ட அந்தப் பொறிகளை அடக்கிவைத்து,
தப்பற யோகம் தன்னில் தன்மனம் ஊன்றிநின்று,
எப்பொருள் எதையும் விட்டு என்னையே பரனாய்க்கொண்டு,
வெப்புறும் புலனைவென்றோன் மேவுவன் நிலைத்த ஞானம்.
9. மனிதர்கள் விஷயம்தம்மை மனதினில் மருவும்போது
பனிதரும் ஆசைதோன்றிப் பற்றுகள் பற்றிக்கொள்ளும்;
வினைதரும் பற்றுண்டாகி விளைந்திடும் மோகத்தாலே
சினமெனனும் தீமை தோன்றிச் சிந்தனை கெட்டுப்போகும்.
10. சினமது வந்த பின்னர்ச் சிந்தனை மயக்கம் கொள்ளும்;
மனமது மயங்கும் போது எண்ணத்தில் மாசுண்டாகும்;
நினைவது மாசுபட்டால் நிச்சயம் புத்தி நாசம்;
அனையதாய் அறிவு கெட்டால் அதன் பின்பு அழிவு திண்ணம்.
11. அருப்புடை புலன்கள் தம்மை அடக்கிய அறிஞன் என்போன்
இருப்புள உலகத்தோடு இணங்கி ஊடாடினாலும்
விருப்பபொடு வெறுப்புமின்றறி விஷயங்கள் நுகர்வோனாகத்
திரிப்பிலன் ஆகிஉள்ளத் தெளிவுடன் அமைதி சேர்வான்.
12. தெளிவுடன் அமைதி சேர்ந்த சித்தத்தில் ஒளிஉண்டாகும்;
ஒளிபெறும்போது புத்தி விரைவினில் உறுதிகொள்ளும்;
அளிதரும் சாந்திபெற்ற அறிவுதான் நிலைப்பதாகும்;
இளிதரும் துன்பம் என்ப இவனுக்கு இல்லையாகும்.
13. யோகமில்லாத பேர்க்கு உறுதியாம் புத்தியில்லை;
ஆகவே அவர்கள் ஆத்மசிந்தனை அடையமாட்டார்.
சேகெனும் அந்த ஆத்ம சிந்தனை இல்லையானால்
பாகெனும் சாந்தம் இல்லை; பகந்திட இன்பம் ஏது?
14. இந்திரி யத்தின்வேக இழுப்பினில் சிக்கிக்கொண்டு
சிந்தனை விஷயதோடு பின்பற்றிச் செல்லுமாயின்
அந்தரக்கடலில், காற்றில் அலைபடும் படகேபோல
மைந்தரின் அறிவு மங்கி மலைத்திடும் ஆசைமோத.
15. ஆதலால் வலியதோளாய்! அத்தகை விஷ்யம்தம்மைக்
காதலால் தொடரா வண்ணம் பொறிகளைச் கட்டிக்காத்து
வாதனைக் கிடமில்லாமல் வசமாக்கி வைக்கத்தக்க
சாதனை உடையோன் புத்தி சலனமில் லாததாகும்.
16. மற்றுள உயிர்கள் தூங்கும் மடமையின் இரவேயாகும்
கற்றுள யோகிஞானக் கண்ணுறங்காத நேரம்;
உற்றுள உலகத்தோர்கள் உழல்கின்ற பகற்காலத்தை
நற்றவ யோகிசாந்த நள்ளிரவாகக் கொள்வான்.
17. ஆறுகள் பாய்ந்து தண்ணிர் அடிக்கடி புகுந்திட்டாலும்
மாறுகொள்ளாதிருக்கும் மாபெரும் கடலேபோல
வீறுகொள் காமம் பாய்ந்தும் விருப்புறா நிலையே சாந்தி;
சாதுற விருப்பமுற்றோன் சாந்தியை அடையமாட்டான்.
18. இச்சையை ஒழித்து எல்லா இன்பமும் துறந்தோனாகி
எச்சரிப்போடு காத்து இடை தடுமாறிடாமால்
நச்சிடும் மமதை கூட்டும் ‘நான் என’ தென்பதற்றோன்
நிச்சயம் பரமசாந்த நிலையினை அடைந்தோனாவான்.
19. அந்நிலை அதுவேப்ரம்ம ஆனந்த நிலையாகும்;
இந்நிலை பெற்றோன் பின்னர் எதினிலுமே மயங்க மாட்டான்;
பொய்ந்நிலை யானதேகம் போய்விடும் போது கூடச்
செந்நிலை மாறிடாமல் முக்தியைச் சேர்வான் திண்ணம்.