Skip to content

Fwd: கள்ளழகர் திருவிழா

ஏப்ரல் 18, 2011


——-

ஓம்
கள்ளழகர் திருவிழா
மதுரை- சீத்திரைத் திருவிழா… ஸ்ரீ மீனாக்ஷியம்மை- சொக்க்நாதர் திருக்கல்யாணத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் இணைந்த அற்புதத் திருவிழா/பெருவிழா சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும்.
நூபுர கங்கையில் நீராடி, பூஜையில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவர், அங்கு வந்த துர்வாசரைக் கவனிக்கவில்லை.யே என்று கோபம் கொண்ட துர்வாசர், ‘மண்டுகோ பவ” தவளையாகப் போகக்கடவது. என்று சுதபஸ் முனிவரைச் சபித்தார். மறுகணம் தவளையான மினிவர் சாப விமோசனத்தை வேண்டிக் கேட்க… ‘விவேகவதி ‘(வைகை) தீர்த்தக் கரையில்  தவம் இருந்து வா, சித்திரா பௌர்ணமிக்கு மறுநாள் கள்ளழகர்  வைகைக்கு  வந்து விமோசனம் தருவார்”  என்றார் துர்வாசர். அதன்படி தவமியற்றும் சுதபஸ் முனிவருக்கு விமோசனம் அளிக்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
      ஸ்ரீ மீனாக்ஷி யின் கல்யாணத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்டார் அழகர் பெருமான். ஆனால், அவர்  மதுரை செல்வதற்கு தாமமானது. எனவே, கூடல் அழகர் உடனிருந்து திருக்கல்யாணம் இனிதே நிறைவேறியது. இதையறிந்த கள்ளழகர், மதுரைக்குள் செல்லாமல் திரும்பினார் என்று ஒரு காரணக் கதை உண்டு.
      புராணங்கள்  போற்றும்  கள்ளழகர் வைபவம் குறித்து இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு

ஆண்டார் முன்னால்; அழகர் பின்னால்
———————————————————
      அழகர் கோயிலின் ஊழியத்துக்காக பதினான்கு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பரம்பரையாக உள்ளனர். இவர்களில் ‘ஆண்டார்’ பரம்பரையைச் சேர்ந்தவரே கோயில் ஆசாரியார். இவரை குருவுக்கு நிகராகப் போற்றுவர்.
      ஸ்ரீ ராமானுஜருக்கு, ‘திருவாய்மொழி’ பாடல்கள் குறித்து கற்றுத்தந்தவர், திருமலையாண்டான். திருமாலிருஞ்சோலைய்ல் வாழ்ந்துவந்த இவர்,அனுதினமும் ஸ்ரீ ராமானுஜருக்குப் போதித்துவிட்டு இருட்டியதும் வீடு திரும்புவது வழக்கம்.
     ஒரு நாள்…. தீப்பந்தம் ஏந்தி  இவருக்கு வழிகாட்டிச் செல்லும் சிறுவன் அயர்ந்து தூங்கிவிட, அழகர்மலைப் பெருமானே  சிறுவனாக தீப்பந்தம் ஏந்தி வந்து வழி காட்டினாராம். இப்படி டிருமாலையே பணியாளாக அடைந்த பாக்கியம் பெறதாலேயே, ‘திருமாலை ஆண்டான்’ என்று பெயர் பெற்றர்ராம்.
      இவரது மறைவுக்குப் பின், இவர் மகனான சுந்தரத் தோளுடையார் அழகர் வ்கோயில் பணிக்காக இராமானுஜரால் நியமிக்கப்பட்டார். தற்போது பணியாற்றுபவர்கள் திருமலை ஆண்டார்ரின் பரம்பறையில் வந்த 24-ஆம் தலைமுறையினராம்.
      சித்திரைத் திருவிழா ஊர்வலத்தில், அழகரின் பல்லக்கு முன் ‘ஆண்டார் பல்லக்கு’ வரும். குர்வுக்குப் பின்னாலே தானே சீடர்கள் வரவேண்டும். எனவே தான், ஆண்டா பல்லக்கைப் ப்பிந்திடர்கிறார் அழகர்.
விக்கிரகத்தைக் காப்பாற்றிய பணியாள்!
      திருமலை நாயக்கர் காலத்டுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்:  தேனூர் கிராமத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில் அழகர் எழுந்தருளிய போது, பந்தல் தீப்பற்றி எறிந்தது. எல்லோரும்ம் சிதறி ஓடினர். ஆனால், ‘நாச்சியார்’ பரிவாரத்தைச் சேர்ந்த பணியாள் ஒருவர், பற்றியெரிந்த தீயில் பாய்ந்து அழகரின் உற்ஸவ விக்கிரகத்தை மீட்டு ஒரிடத்தில் பத்திரமாக மறைத்து வைத்தாராம். மேற்கொண்டு நடக்க முடியாமல், அருகிலேயே விழுந்து கிடந்தார். விக்கிரகத்தைக் காக்கும் பொறுப்பில் இருந்த திருமலை நம்பிகள் விஷயம் அறிந்து ஓடோடி வந்தார். விக்கிரகம் இரூக்கும் இடம் குறித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பணியாளைடம் கேட்டார்.. உடனே, ‘விக்கிரகம் இருக்கும் இடத்தைச் சொல்ல வேண்டுமானால் கோயில் பணியில் ஒருபகுதியை என் பரம்பரைக்கு அளிக்க வேண்டும்!’ என்று வேண்டினார் பணியாள். திருமலை நம்பிகள் ஒப்புக் கொள்ள, விக்கிரகத்தை மறைத்து வைத்த இடத்தைக் காட்டிவிட்டு இறந்தார் பணியாள். இவரின் வேண்டுகோள்படியே, இன்றுய்ம் அவரின் பரம்பரையினர் கோயில் பணியாற்றி வருகின்றனர்.
தேர் நகர மறுத்தது ஏன்?

     அழகர் கோயிலில் பூமாலை கட்டும் பணி செய்பவர்கள் பண்டாரி (சாத்தாணி ஸ்ரீ வைஷ்ணவர்) பிரிவினர். முற்காலத்தில், கோயில் பணியாளர்கள் கோயிலின் வெஇக் கோட்டைப் பகுதியில் வசித்தனர். கிழக்கு மற்றும் தெற்கு ரத வீதிகள் சந்திக்கும் இடத்தில், பண்டாரி ஒருவரின் வீடு இருந்தது. இந்த வீட்டைச் சார்ந்த மூதாட்டி ஒருத்தி அழகரின் தீவிர பக்தை!
     ஒருமுறை தேரோட்டத் திருவிஆவின் போது… அழகருக்குப் படைக்க வேறு எதுவும் ல்லாத நிலையில், வீட்டில் இருந்த காத்தொட்டிக்காய் (மிதுக்கங்காய்- வற்றலாக உலர்த்திப் பயன்படும்) வற்றலையும் கொள்ளு எனப்படும் காணப் பயிறுப் பருப்பையும் மானசீகமாக அழகருக்குப் படைக்க விரும்பினாள்.. ஆனால், நேரில் சென்று சமர்ப்பிக்க கூச்சசுபாவம்!. அவற்றி மானசீகமாகவே சர்ப்பித்து வழிபட்டாள்.
      இந்த நிலையில் வீதிஉலா வந்த தெர், மூதாட்டியின் வீட்டின் முன் வந்ததும் மேலும் நகராமல் நின்று விட்டது. அனைவரும் செய்தியறியாது ப்திகைக்க….  ‘என் பக்கதை உண்ணும் காணாப் பருப்பும் காத்தொட்டிக்காய் வற்றலும் எனக்கும் வேண்டும்’ என்று கேட்டார் அழகர். அவ்வாறே, மூதாட்டியின் வீட்டிலிருந்து காணப் பருப்பும் காத்தொட்டிக்காய் வற்றலும் எடுத்து வந்து அழகருக்கு சர்ப்பித்தனர். இதன் பிறகே தேர் நகர்ந்ததாம்!.
     ஸ்ரீவில்லிப் புத்தூர் கோயிலில், அழகரின் திரு நட்சத்திரமான புரட்டாசி மாதம் உத்திராடம் அன்று ஆண்டாளுக்கு, காத்தொட்டிக்காய் வற்றலும் காண்ப் பௌப்பும் ந்வேதனமாகப் படைக்கப் படுகிறது.. ஆனா,ல், அழகர் கோயிலில் இபோது படைக்கப் படுவதில்லை.
ஒன்பது நாள் வைபவங்கள்:
    ஒன்பது நாள் திருவிழாவில் முதல் மூன்று நாட்கள் கோவிலிலேயே பூஜைஉகளை ஏற்கும் அழகர், 4-ஆம் நாள் அதி காலை  1-00 மணிக்கு வைகைப் பயணத்துக்கு ஆயத்தமாகிறார்.
     கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கரங்களில் வளதடி, வளரித் தடி மற்றும் சாட்டைக் கம்பும் திகழ, காதுகளில் கல்பதித்த வளையத்துடன் கூடிய கடுக்கனும், கறுப்பு வண்ண ஆடையும் அணிந்து புறப்படுகிறார் கள்ளழகர் பெருமான்.
      அழகர் மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் கிளம்பி,, வழி நெடுக அடியவர்களுக்கு தரிசனம் த்ந்தபடி வரும் அழகரை, மதுரை எல்லையான மூன்று மாவடி பக்தர்கள் ஒன்று கூடி வரவேற்கும் ‘எடிர்சேவை’

 
வெ.சுப்பிரமணியன்
ஓம்

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: