Skip to content

Fwd: How to plant a tree?

ஜூலை 5, 2011

 

callcenter.www.greencoimbatore.com

மரம் நடுவது எப்படி?

Read Later

கன்றுகள் தேர்வு

ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை வயதுடைய நேராக வளர்ந்த நல்ல கன்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

குழி எடுத்தல் எப்படி?

3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் இடைவெளி தூரத்தில் 1 அடி விட்டம் 2 அடி ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். எடுத்த மண் குழிக்குள் சரியாவண்ணம் சற்றுத் தள்ளிப் போடவேண்டும்.
அந்த மண் சில நாட்களுக்கு அப்படியே வெளியில் இருக்கட்டும். அதில் உள்ள கற்களையும், கூழாங்கற்களையும் நீக்கி அதோடு 3-ல் 1 பங்கு மக்கிய சாணிஉரம் சேர்க்கவேண்டும்.

மரக்கன்று நடும் நாள்

பருவ மழைக்காலத்தில் மழை பெய்யும் ஒரு நாளையோ அல்லது மேகமூட்டமான ஒரு நாளையோ தேர்ந்தெடுத்து முதல் மழைக்குப் பிறகு நடவு செய்வது நல்லது.

சரியாக நடுதல் எப்படி?

நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றைக் கொண்டுவந்து சேகரிக்க வேண்டும். அப்போது நாற்றுக்களை கவனமாக கையாளவேண்டும்.

  • தண்டைப் பிடித்து தூக்கமல் பையின் அடிப்பாகத்தைப் பிடித்து தூக்குவது நன்று.
  • நடவேண்டிய இடத்துக்கு நாற்றுக்களை கொண்டு வந்த பிறகு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
  • வெளியில் இருக்கும் மண்ணில் சிறிதளவு குழிக்குள் தள்ளவேண்டும்.
  • வேர்களை சுற்றியிருக்கும் மண்பிடிப்பு உதிர்ந்துவிடாமல் பாலிதின் பைகளைக் கிழித்தோ அல்லது மண் தொட்டிகளை உடைத்தோ குழியில் வைக்க வேண்டும்.

  • மீதமுள்ள மண்ணைக் குழிக்குள் போட்டுத் தள்ளி வேரைச் சுற்றி மண்ணை இறுக்கவும். இதனால் நாற்று வளையாமல் நேராக நிமிர்ந்து வளரும்.மழைத் தண்ணீரும் அதிகம் தேங்காது.
  • தண்ணீர் விடத்தோதாக கன்றைச் சுற்றி பள்ளம் இருந்தால் நன்று. சரிவான பகுதி எனில் மழை நீர் சேகரிப்பு குழிகளை பிறை வடிவில் கன்றுக்கு முன்பும் பின்பும் ஏற்படுத்தலாம்.

கவனம்

  • ஈரமண்ணில் செடியின் வேர்கள் அழுந்திப் பொருந்தியிருக்க வேண்டும்.
  • ஈரமண்ணில் இருந்து வேர்கள் வேளியே தெரிந்தாலும், வேரைச் சுற்றியிருக்கும் மண் உதிர்ந்தாலும் கன்றுகள் காய்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.

  • நாற்றை அதிக ஆழத்தில் வைத்து நட்டாலும் அது காய்ந்து கருகிவிடும் என்பது நினைவில் இருக்கட்டும். வேர்கள் வெளியே தெரியும்படி நீட்டிக்கொண்டிருந்தால் அந்த நாற்றுகள் வளராது.
  • வேர்கள் மடங்கி இருக்கும் வகையில் நட்டுவிட்டால் நாற்று வாடி உயிரிழந்து விடும்.
  • வளைந்த நாற்றுகள் நேராக வளராது.
  • முதல் கோடை கலத்தில் நாற்றுக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம்.

நாற்று நன்றாக வளரும்போது கண்ணுக்கு எத்தனை அழகாய் காட்சி தருகிறது. இன்றைய மரக்கன்று, நாளைய மரம் நாட்டின் வளம். மரங்களை குழந்தைகளைப் போல் வளர்ப்போம்.

Social Bookmark

   

HUG A TREE

"Life without love is like a tree without blossom and fruit" – Khalil Gibran.

Who's online

We have 6 guests online


Devices

Sign Up & Read Comfortably—Anytime, Anywhere

A subscription to Readability offers great features for mobile reading, saving articles for later and supporting the writers you enjoy. Learn More »

Readability

«

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: