வணக்கம் நண்பர்களே!
என்னய்யா வாகனத்துக்கு கைத்துப்பாக்கிக்கு Silencer இருப்பதை தானே கேள்வி பட்டிருக்கிறோம். கணினியில் Silencer ஆ? எதற்கு என்று உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது. கைத்துப்பாக்கு Silencer பூட்டி சத்தமில்லாமல் பலரை போட்டு தள்ளுவதை தானே நாம் அடிக்கடி கேளிவிப்பட்டிருக்கிறோம்.
அதே வேலையை போட்டுத்தள்ளும் வேலையை இல்லை நண்பர்களே சத்தமில்லாமல் அதாவது Toggle mute செய்ய கணினிக்கு இந்த System Silencer உதவுகின்றது.
சரி மென்பொருள் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
முற்றிலும் இலவசமானது. Windows XP, Windows Vista, Windows 7 களில் செயற்படும்.526 KB அளவுடையது.தரவிறக்கத்துக்கு இங்கும் மேலதிக தகவல்களுக்கு இங்கும் செல்லுங்கள்.
மேலே இரண்டாவதாக தரப்பட்ட படத்தை பார்க்கும்போதே உங்களுக்கு இம்மென்பொருளின பயன் புரிந்திருக்கும். நீங்கள் உங்கள் கணினியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது ஏதாவது முக்கிய வேலை செய்து கொண்டிருக்கிறீரகள் தீடிரென அவசரமாக கணினியை விட்டு குறித்த இடத்திற்கு போகவேண்டியுள்ளது. உங்களுக்கு முறையாக கணினியை நிறுத்தி விட்டு போகக் கூட கால அவகாசம் தரப்படவில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? எல்லோரும் பிறகு வந்து அணைக்கலாம் என்றே போவோம். ஆனால் அந்த வேலையில் கணினியில் விரயமாகும் மின் சக்தியின் அளவு மடிக்கணினி எனில் அதன் பற்றரி மின் சக்தி இறக்கம், நீங்கள் கேட்ட பாடல் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருக்கும். நீங்கள் திறந்து வைத்துள்ள கோப்புக்கள் மற்றவர் சுலபமாக பார்த்து விடவும் முடியும். எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உதவவே இம்மென்பொருள் உள்ளது.
இப்போது இம்மென் பொருளின் பயன்களை பார்ப்போம்:
- பாடல்களை நீங்கள் செவிமடுத்தால் அதை குறித்த நேரத்தில் நிறுத்தலாம்.
- Desktop முழுவதையும் முடக்கலாம்
- தனியே Taskbar Icon களை மறைக்கலாம்
- தனியே Desktop Icon களை மறைக்கலாம்
- Windows களை Hide பண்ணலாம்- உங்களுக்கு விரும்பியதை தெரிவு செய்யவும் முடியும்
- நடந்து கொண்டிருக்கும் Process ஐ kill பண்ணலாம்
- இயங்கிக் கொண்டிருக்கும் Programs/File களை தெரிவு செய்து நிறுத்தலாம்
- மொனிட்டரை TurnOff பண்ணலாம்
- Workstation ஐ Lock பண்ணலாம்
மேலுள்ள பயன்கள் அனைத்தையும் நீங்கள் விரும்பிய படி Settings செய்து பெறமுடியும். அதாவது வேண்டியதை ரிக் பண்ணி சேமிப்பதன் ஊடாக பெறலாம்.
நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.
நான் இவ்வாறு பதிவுகள் எழுதுவது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவோ அல்லது உங்களிடம் வாக்குகள் கேட்டு ஹிற்ஸ் பெறவோ இல்லை. தமிழில் தொழில் நுட்ப பதிவுகள் வெளிவந்து நாமும் கணினித்துறையில் புதுத்தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே. அதனால் நீங்கள் என் பதிவில் ஏதாவது குறையிருந்தால் மட்டும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். பதிவு பிடித்திருந்தால் இப்பதிவின் லிங்கை உங்கள் FaceBook ல் mailing list ல் twitter ல் இன்னும் உங்களிடம் உள்ள சமூக பக்கங்களில் உங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்து இத்தகவலை பலரை சென்றடைய உதவுங்கள். என்னை எந்த திரட்டிகளும் ஊக்குவிக்க முன்வரவும் இல்லை. நான் அவற்றை தேடிச்செல்ல வேண்டிய நேரத்தை கொண்டிருக்கவும் இல்லை. எனவெ உங்களில் யாருக்காவது திரட்டிகளில் வேறு வலைப்பக்கங்களில் இப்பதிவை இணைக்க விருப்பம் இருந்தால் இணையுங்கள். பதிவைத்திருடாமல் என் பெயருடன் இணைத்தால் போதும்.மாதந்தோறும் நல்ல தளங்களை பட்டியலிடும் சுதந்திர மென்பொருள் தளத்தில் சில நாட்கள் என் பதிவுகள் வெளிவந்தன. ஆனால் தீடிரென இத்தளத்தில் இருந்து என் தளம் நீக்கப்பட்டு விட்டது. அதற்கு அத்தள உரிமையாளர் தெரிவித்த காரணம் மிக வேடிக்கையானது. அவர் சொன்ன காரணம் இதுதான் நண்பர்களே: எனது பதிவுகள் சில நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம். அவரின் தேசியப்பற்றை நானும் மதிக்கிறேன். ஆனால் நாம் இடும் பதிவுகள் ஆங்கிலத்தில் ஏற்கனவே பலதடவைகள் வெளிவந்து விட்டபடியால் பயங்கரவாதிகள் அதை பார்த்து தெரிந்து கொள்ளாமல் என்னுடைய தமிழ்மொழிப் பதிவையா தேடிவரனும்? உங்கள் கருத்துக்களை எதிர் பார்த்து……….
சூ.குணசாந்தன்
0094771708339